மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்
நுவரெலியா ; கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலே நேற்று (25) இரவு 09.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் தனது வீட்டில் இருந்துள்ள நிலையில் கணவன் உணவு எடுத்துவருமாறு மனைவியிடம் கூறியுள்ள்ளார்
எனினும் நீண்ட நேரம் உணவு எடுத்து வராது மனைவி தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதை கண்ட கணவன் முரண்பட்டதையடுத்து மனைவி கணவனை தாக்கியதையடுத்து கணவன் அருகிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் கோடரியால் தாக்கிய கணவன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளர்.
தாக்குதலில் 07,09 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் சத்யவாணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.