மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

Spread the love

மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா

கடந்த யூன் மாதம் 23 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார், மடு திருத்தலத்தின் வருடாந்த ஆடித் திருவிழா தற்போது நடைபெறுகிறது

திருவிழாத் திருப்பலி தமிழ், சிங்கள மொழிகளில் ஆயர்களின் தலமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படுகிறது.

திருவிழாத் திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி லயனல் இம்மானுவேல் வெர்னாண்டோ ஆண்டகை, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர்

அருட்கலாநிதி ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் ஒப்புக்கொடுக்கிறார்கள்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்றுள்ளார்கள்.

திருவிழாத் திருப்பலியின் நிறைவில் மடு அன்னையின் திருச்சொரூப பவனி இடம்பெற்று,
திருச்சொரூப ஆசீர்வாதத்துடன் திருவிழா நிறைவடையும்.

Author: நலன் விரும்பி

Leave a Reply