மகிழ்வாய் இருக்க விழித்து கொள்

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்
Spread the love

மகிழ்வாய் இருக்க விழித்து கொள்

நீளும் இந்த இரவுக்குள்ளே
நினைவுகளை பகிர்வோமா
நீண்ட நாள் ஆசைகளை
நின்று கொஞ்சம் ருசிப்போமா

நாம் கண்ட கனவுகளை
நலமுடனே காண்போமா
நாள் எல்லாம் மகிழ்ந்திடவே
நலமோடு வாழ்வோமா

அசிங்கத்தில் பிறந்தோமே
அதை இன்று மறந்தோமே
ஆனாலும் நல்லவராய்
அகிலத்தில் உரைத்தோமே

சிந்தனையை சிறைவைத்து
சிகரத்தில் இருந்தோமே
சிறை உடைத்து பறந்திடவே
சிறகு இரண்டு தரிப்போமே

படைத்தவனோ வாழ்வினில
பாதி வாழ்வை சிறை வைத்தான்
பட்டு துயர் கழியு முன்னே
பாவி நாம் மூப்பானோம்

எது வரைக்கும் இத் துயரை
ஏற்று நாம் பயணிப்போம்
இன்றே நாம் விழித்து விட்டால்
இத்துயரில் நாம் எழுவோம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 21-05-2023