
புலி ஒன்று புறப்படுகிறது .
வீர தளபதியை
விண்ணுக்கு தந்தவனே
மண்ணில் நீ இல்லை
மனம் எல்லாம் வேதனை
சொல்லி அழ இங்கு – ஈழம்
சொந்தம் இல்லை
பள்ளி வர உடன்
படையணி இல்லை
தம்பிகளை தந்தவரே
தலைவனுக்காய் நின்றவரே
கொஞ்சம் எனும் கொஞ்சி
கொள்ளி வைக்க இல்லையே
பஞ்சம் தான் நாட்டில்
பரவாயில்லை
பள்ளி கொள்வோம் ஓர் நாள் – உம்
பாடை சுமப்போம் அந்நாள்
தள்ளி வைக்க என்றும் – மான
தமிழர் நெஞ்சம் இல்லை
கொள்ளி வைப்போம் ஓர் நாள் – பகை
கொட்டம் அடங்கும் ஒரு நாள்
கில்மன் அடியில்
கிலி கொண்ட படைகள்
பட்ட பகல் சமரில்
பரந்தன் இழந்த பகைகள்
திமிர் இழந்து ஓடின
தீபன் கண்டு பதறின
வாலாட்டும் நாய்கள்
வாசலில் குலைக்கிறது
ஆனாலும் நெஞ்சில் ஆனந்தம்
அத்தகை வீரம் உனக்கு சொந்தம்
உறங்கு தந்தையை உறங்கு
உறுமி புலி வெடிக்கும்
கண்ணீர் மாலைகளை – உன்
காலடி தூவுகிறோம்
தந்தையை சென்று வா – ஈழ
தேசம் காண மீள வா ..!
பிரிகேடியர் தீபன் – லெப்கேணல் கில்மன் தந்தையும் ,ஸ்ரீதரன் எம்பி மாமாவின் மரண துயரில் அவருக்கு கண்ணீர் காணிக்கை ஆக்குகிறேன்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-12-2022