நீயே உனக்கு துணை

நீயே உனக்கு துணை
Spread the love

நீயே உனக்கு துணை

உள்ளம் வலிக்கும் போதினில
உன்னை செதுக்கி விடு
உதாசீனம் செய்யும் போதினில
ஊமையாய் இருந்து விடு

காலம் மலரும் போதினில
கபடங்கள் உடைத்து விடு
கபடம் இல்லா கண்ணியத்தை
கரை ஏற்றி வைத்து விடு

தோல்விகள் சூடும் வேளையில
சோரா இருந்து விடு
தவறை திருத்தி எழுந்திடும்
தகைமைகள் வளர்த்து விடு

பக்குவம் தேறும் பண்பயிலை
பகைமையிலும் காட்டி விடு
கடின மொழியை எறிந்தே
காதலை வளர்த்து விடு

உன்னை மட்டும் நம்பியே
உலகை பார்த்து விடு
உயிர் உள்ளவரை உனக்கு நீயே
உரிமம் புரிந்து விடு

வலிகள் தாங்கி எழுந்தால் தான்
வாழ்வு சீராகும்
வையம் ஆண்டிட இந்த
வலிகளே துணையாகும் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 30-12-2023