கிளிநொச்சி வீடுகளை உடைத்தெறிந்த புயல் – photo in
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் (06.05.2020) காற்றுடனான மழையின் காரணமாக வீடு ஒன்று முழுமையாகவும்
10 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்ததுடன் 2 சிறிய தொழில் முயற்சி நிலையங்களும் பாதிக்கப்பட்டன.
அத்துடன் பயிர்களும் அழிவிற்குள்ளாகியுள்ளன.தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தின் ஊடாக
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை கிளிநொச்சி மாவட்டச்செயலகம்
முன்னெடுத்துள்ளது. தற்போதைய காலப்பகுதியில் பலத்த காற்றுடனான மழைவீழ்ச்சி மற்றும் இடி மின்னல் பாதிப்புக்கள் ஏற்பட சாத்தியங்கள் உண்டு.
இதனால் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும் வீட்டிற்கு அருகில் பாதுகாப்பற்ற வகையில் மரங்கள் இருக்குமாக இருந்தால்
அவற்றினை அகற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.