கிளிநொச்சி வியாபார நிலையங்களிலும் கைகளை கழுவுமாறு வலியுறுத்தல்

Spread the love

கிளிநொச்சி வியாபார நிலையங்களிலும் கைகளை கழுவுமாறு வலியுறுத்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் அரச திணைக்களங்களை இயங்க வைப்பது தொடர்பில் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல்.


மாவட்ட செயலகத்தின் மா நாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூ.கேதீஸ்வரன் தலைமையில் இன்று இடம்பெற்றது.

    இந்த கலந்துரையாடலின் முக்கியமான நோக்கமாக எதிர்வரும் 11ம் திகதி ஊரடங்கு தளர்த்தப்பட்டு; இயல்பு நிலை ஏற்படுத்தபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் கிளிநொச்சி மாவட்டம் கொவைட் -19

    பாதிப்பு ஏற்படாத இயல்பு நிலையிலேயே காணப்பட்டாலும்; பாதிப்பு ஏற்படக்கூடியதான எதிர்பார்ப்பிலிருந்து முழுமையாக விடுபடவில்லை. இதன் காரணமாக 11ம் திகதியிலிருந்து

    திணைக்களங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதால் திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புக்களுடனான ஆலோசனைகளுடன்

    முடிவுகள் எட்டப்பட்டன.IMG 0045உத்தியோகத்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பேணியவாறு கடமையாற்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் பிற

      மாவட்டங்களிலிருந்து உத்தியோகத்தர்கள் வருகை தருகின்ற வேளையில் பேரூந்துகளில் குறிப்பிட்டளவு உத்தியோகத்தர்கள் பயணிக்கக்கூடிய வகையில் போக்குவரத்து ஒழுங்குகளை

      மேற்கொள்வதற்குமான தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உத்தியோகத்தர்களுக்கு போக்குவரத்து

      முக்கியமானதாகும். அத்துடன் உள்ளக போக்குவரத்தும் கவனிக்கப்பட வேண்டும். எனவே பொறுப்புக்களை மறந்து செயற்படாமல் அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து பாதுகாப்பான

      முறையில் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.
      தொடர்ந்து மக்கள் அதிகளவில் கூடும் பொது இடமான சந்தைகளில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடுவதை தவிர்த்து வருகின்றனர்.

      அதே போல் கடைகளில் சமூக இடைவெளி பேணப்படுவதுடன் கை கழுவும் நடைமுறையும் செயற்படுத்தப்பட்டு வந்தாலும் மிக முக்கியமாக உள்ளுரர் கடைகளிலும் இந்த நடைமுறையினை

        செயற்படுத்துவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. வர்த்தக நடவடிக்கைகள்; தொடர்பில்

        ஓரிருவாரங்களுக்கு ஏற்கனவே உள்ளதான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

        மாவட்டவைத்தியசாலை நடவடிக்கைகளை பாதுகாப்புடன் மேற்கொள்ளவும். வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு

        வழமையாக செயற்படுவதற்கும். சுவாசம் சம்மந்தமான நோய் மற்றும் ஏனைய நோய்கள் என பிரிக்கப்பட்டு சிகிச்சை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டது

        அனைத்து விடயங்களிலும் குறைந்தளவு நபர்கள் என்பதனை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டது.
        தனியார் வாகனங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள்

        பயணிப்பது உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு செல்லும் போது அவ்விடங்களில் நடமாடுதல் பொருட்களை கொள்வனவு செய்தல் தவிர்க்கப்பட வேண்டும்.

        என்பதோடு முச்சக்கர வாகனத்தில் இருவர் மாத்திரம் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

          திணைக்களங்களில் குளோரின் தொற்று நீக்கல் செய்யப்படும் பொருட்டு ஒவ்வொரு திணைக்களங்களிலும் குளோரின் தொற்று நீக்கலுக்காக ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். குளோரின் தொற்று

          நீக்கலுக்காக சுத்திகரிப்பு சேவை பணியாளரை பயன்படுத்தி கொள்வதற்கும் இல்லாவிட்டால் மாற்று வழிகள் தொடர்பிலும் முடிவுகள் எட்டப்பட்டன.

          அலுவலகங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அவதானிக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகங்களிலும் இருவர் அல்லது 3 பேரைக் கொண்ட அணி உருவாக்கப்பட வேண்டும். அனைத்து

          திணைக்களங்களும் குழுவினை அமைத்து மாவட்டச்செயலகத்திற்கு அறியத்தர வேண்டும் என்பதோடு கொரோனா தொற்றுடன் தொடர்ந்து யுத்தம் செய்ய

          வேண்டியவர்களாக இருக்கின்றோம். எனினும் எமது பொருளாதார வளர்ச்சியையும் முன்னெடுக்க வேண்டும் என்பதனையும் மாவட்ட அரசாங்க அதிபர் சுட்டிக்காட்டினார்.

          கிளிநொச்சி வியாபார
          கிளிநொச்சி வியாபார

              Leave a Reply