காரை நகர் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து வழங்கிய – குட்டை நாய்
யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபை மருத்துவமனையில் நோயாளர்களுக்கு மருந்து சுற்றி கொடுக்கும் பையின் மேல் குட்டை நாய் ஒன்று படுத்துறங்கிய சம்பவம் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,
இதில் இருந்து இந்த மருத்துவமனையின் சுகாதார வண்டவாளம் தண்டவாளத்தில் செல்கிறது ,குதிரை ஓடி மருத்துவர் ஆனால் இப்படித்தான் நடக்கும் .
வடக்கு சுகாதார அமைச்சர் கோட்டார் அடித்து குப்புற கிடக்கிறார் , காரைநகர் போன்று ,வரணி மருத்துவமனையில் வைத்தியரும் இது போன்ற சர்ச்சையில் , கெடுபிடிகளில் ஈடுபட்டுள்ளார் ,
அங்கும் பணியாளர்கள் இடமாற்றம் செய்வதுடன் பணி புரியும் பெண்களுடன் முறுகல் நிலையில் உள்ளதுடன் ,இவர்களின் அசமந்த போக்கின் காரணமாக ஒரு கர்ப்பிணியும் ,மூதாட்டி ஒருவரும் மரணித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது .
நபர் ஒருவர் காரை நகர் வைத்தியசாலையின் அசிங்கத்தை படம் பிடித்து வெளியிட்ட நிலையில் வடக்கு சுகாதார அமைச்சர் கோவணத்தை கழற்றி தலையில் முக்காடு போட்டு செல்வதாக நெட்டிசன்கள் குசும்பு பதிவுகளை புரிந்து வருகின்றனர் .
கோத்தபாயவின் ஆட்சியில் நடக்கும் இந்த சீர்கேடுகளை தட்டி கேட்பது யார் ..?
காரைநகர் புலம் பெயர் வாசிகள் இதனை தட்டி கேட்டு குறித்த மருத்துவமனை வைத்தியர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை மாற்றுவார்களா ..?
சுத்தம் சுகம் தரும் என்பார்கள் ,அசுத்தம் அசிங்கத்தை தருகிறது எனவே அந்த அசிங்கமான மருத்துவரை உடனடியாக மாற்றி சுத்தம் சுகாதரத்தை நிலை நாட்டி மக்களை காப்பாற்றுங்கள் கரை தீவு படித்த அறிவார்ந்த சமூகமே .
ஆள் சேர்க்கும் வடக்கு மாகாண ஆளுநர் இதனை கவனத்தில் எடுப்பாரா ..? அல்லது வரப்போகும் புதிய ஆளுநர் தான் புரட்சி நடவடிக்கை மேற்கொள்வாரா ..?