கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
கருவேப்பில்லை கார தொக்கு இப்படி வீட்டில செஞ்சு பாருங்க .இட்லீ, தோசைக்கு ,செம கூட்டு ,சிறுவர்கள் முதல் ,பெரியவர்கள் வரை விரும்பி உண்பாங்க .கடை சுவையில் அம்புட்டு தரமா இருக்கும். இந்த கருவேப்பிலை கார தொக்கு .
சுவையான கருவேப்பிலை கார தொக்கு செய்வது எப்படி .
மிக இலகுவான முறையில் இப்படி வீட்டில் செஞ்சு பாருங்க ,வாங்க இப்போ
செய்முறைக்கு போகலாம் .
இந்த கருவேப்பிலை கார தொக்கு ,செய்திட தேவையான பொருட்கள் .
மூன்று கப்பு ,கருவேப்பிலை ,ஒன்றை கரண்டி மிளகு ,சின்ன எலுமிச்சம் பழ அளவுக்கு புளி ,15 காய்ந்த மிளகாய் ,இப்போ இது ஓட தேவையான தண்ணீர் சேர்த்து,மிக்சியில் போட்டு சட்னி போல அரைத்து எடுத்து கொள்ளுங்க .
கருவேப்பில்லை கார தொக்கு -இட்லீ தோசைக்கு செம கூட்டு
செய்முறை இரண்டு
அப்புறம் அடுப்பில கடயா வைத்து ,நல்லெண்ணெய் சேர்த்து ,எண்ணெய் ,சூடானதும் அரை கரண்டி கடுகு ,ஒரு கப் உளுத்தம் பருப்பு ,ஒரு கரண்டி சீரகம் ,அரை கரண்டி தேங்காய் பூ பவுடர் ,சேர்த்து நொறுங்கி பொரிந்து வந்ததும் ,அரைத்து வைத்த கருவேப்பிலை சட்னியை ,இதுல ஊற்றி கலக்கி விடுங்க .
அப்புறம் இது கூடவே தேவையான அளவு மஞ்சள் தூள் ,வறுத்து அரைத்த வெந்தய பொடி ,போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
மூடி போட்டு நன்றாக கொதிக்க விடுங்க ,இடை இடையே திறந்து ,நன்றாக கலக்கி விடுங்க .நன்றாக வதங்கி வரும் பொழுது ,தேவையான உப்பு ,அப்புறம் ஒரு கரண்டி வெல்லம் ,போடு நன்றாக சுருங்கி வரும் வரை கலக்கி விடுங்க .
நன்றாக எண்ணெய் வற்றி உதிரி உதிரியாக வந்ததும் ,அடுப்பை நிப்பாட்டி விடுங்க ,அம்புட்டு தாங்க இப்போ வாய்க்கு சுவையான கருவேப்பில்லை கார தொக்கு ரெடியாகிடுச்சு .
இந்த கருவேப்பிலை கார தொக்கு ,சாதம் ,இட்லீ ,தோசை ,சப்பாத்தி கூட சேர்த்து சாப்பிடுங்க மக்களே .