
ஏன் அழுகிறாய்
துணிவு கொண்ட மனிதா – நீ
துளி துளியாய் அழுவதா
இடை வந்த வறுமையால்
இதயம் உடைந்து மாழ்வதா
கவலை இன்று துரத்து
காலில் வேகம் ஏத்து
தெளிவாய் கொஞ்சம் மிதப்பாய்
தேடும் தமிழ் ஆவாய்
முடியாது என்று அஞ்சாதே
முடியும் உன்னால் மறவாதே
சிந்தை தானே முதல் வளமே
செதுக்கு உனை தினமே
நகைத்தாரும் வியக்க வை – இந்த
நாடே மலைக்க வை
நாள் எல்லாம் உனை தினம்
நாடே புகழ வை
முடியும் உன்னால் முன்னேறு
முடிவு தெரிந்து விண்ணேறு
முன் உரையை நீ கூறு
முடிவுரையை நீ மீறு
அழுவதை நிறுத்தி
அகிலம் புரட்டு
ஆனந்தம் கூடும்
அறிவு தேறும்
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 20-04-2023