
ஏங்கி சாவீரே
எழுத மறந்த கவிதை ஒன்றை
எழுதி வருகிறேன்
எனை எழுத வைத்த எதிரிக்கு
ஏற்று வடிக்கிறேன்
முடக்க நினைத்த உங்கள்
மூளை காண்கிறேன்
முயன்று பார்த்து தோற்று போனீர்
முடிவை காண்கிறேன்
எழுந்து வெடிக்கும் ஏவுகணை
என்றும் அடங்குமோ
ஏறி அடிக்க மறந்து
ஏங்கி சாகுமோ
தலைவன் வழி வந்தவர்கள்
தலைகள் குனியுமோ
தரகு வேலை சகுனிகள்
தலைமை புரியுமோ
எரிமலைக்குள் காலை வைத்தீர்
எழுந்து பார்த்தீரோ – இனி
எரியும் தணல் தலைகளிலே
ஏங்கி சாவீரே ….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 16-04-2023