என் ஆசை நிறைவேறுமா ….?

என் ஆசை நிறைவேறுமா ….?

என் ஆசை நிறைவேறுமா ….?

ஈழ மண்ணில் கால் பதிக்க
இதயம் துடிக்கிறதே
இயலா நிலையால் இன்று
இதயம் கொதிக்கிறதே

நான் வாழ்ந்த வீட்டினில
நாலு நொடி உறங்கேனோ
நான் வளர்ந்த அயலுடனே
நாலு மொழி பேசேனோ

கனவுகளை நெஞ்சடக்கி
கண்ணீரில் துடிக்கிறேன்
கால் பதிக்கும் நாள் வருமா
கடவுளிடம் கேட்கிறேன்

கொள்ளை தரும் அழகுடனும்
கொஞ்சி விளையாடும் காற்றுடனும்
கொஞ்ச நேரம் விளையாட
கொஞ்சும் காலம் வருமா

நெஞ்சுக்குள் உள்ளாருடன்
நெருங்கி உறவாட
நினைவுகளை தரை இறக்கி
நிமிர்ந்து உரையாட

காலம் ஒன்று வருமா
கண்ணீர் துயர் தீருமா
கல்லறை உறங்கு முன்னே – அக்
காலம் மிளிருமா …?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 29-04-2023