எங்கள் தலைவிதி ….!
இளம் காற்று பாடும் ஈழ கரையோரம்
இதயங்கள் நொறுங்கும் சோக துயரம்
எவர் செய்த சதியோ இத்துயர் கோலம்
எங்களின் வாழ்வில் ஏனோ இப் பாரம்
கரும்புகை ஏறி வானை மறைக்கும்
கந்த துகளில் மூச்சு உறையும்
வெடியோசை மண் கிளற வீழ்ந்தே இறந்தோம்
உடன் இருந்தார் விட்டே ஊர் ஏறி கடந்தோம்
வலியில் நெஞ்சு வாடி தவிக்க
வழி தெரியா நின்றோம்
உரிமை போரும் முடிவில் தவிக்க
உதவுவார் இன்றி ஏங்கி தவித்தோம்
தரணியில் நாங்கள் பிறந்தது கேடா
தமிழனாய் இங்கு வாழ்தல் பிழையா
சுதந்திரம் கேட்டோல் சூடு காடா
சுதந்திர தேசமே நீதி இல்லையா
மொத்த தமிழன் அழித்தான் உலகில் நடக்கிறான்
ஒட்டு துணி இல்லா தமிழன் தவிக்கிறான்
இத்துயரில் தினமும் எங்களின் தேசம்
இதயம் இல்லா நடக்கும் உலகம்..!
வன்னி மைந்தன்
ஆக்கம் 25-03-2021
http://ethirinews.com/