உலகம் வாழ உன்னை தா …!
பிள்ளை இல்லா தாய் ஒன்றில்
பிரியம் வைப்பாரோ …?
மலடாய் மண்ணும் போனாலே
மண்ணை தொடுவாரோ …?
காட்டை அழித்து வீடு கட்டி
கண்ணா சிரிக்கின்றாய் …
குலவும் காற்று இறந்து விட்டால்
கூடாய் நீ கிடப்பாய் …
மரங்கள் உந்தன் உயிர் மூச்சு
மரங்கள் நீ காப்பாய் ….
இல்லம் தோறும் நீ தானே
இன்று மரம் நடுவாய் ….
நஞ்சை விதைத்து மண்ணை கொல்லும்
நரகம் நீ கழிவாய்….
மண்ணை காத்து விண்ணும் குளிரும்
மாற்றம் நீ விதைப்பாய் …..
உன்னை போல பிள்ளை வாழும்
உலகம் நீ தருவாய் …..
நல்லறம் நாட்டி இல்லறம் வாழும்
நாளினை நீ தொடுப்பாய்….!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -21/09/2017