உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

ரஷ்ய ; உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் துடித்த வண்ணம் உள்ளதாக அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்துள்ளது .

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு உக்கிரேன் நாடு எதிராக திரும்பிய நிலையில் ,இராணுவ தாக்குதல் மூலம் அந்த நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் திட்டத்தை தடுக்கும் நகர்வில் நேட்டோ முன்னேறிய வண்ணம் உள்ளது.

நேட்டோ நாடுகளுக்கு உக்கிரேன் மீதன ரஷ்ய இராணுவத்தின் ஆக்கிரமிப்பு அச்சறுத்தலாக விளங்கி வருகிறது .

இந்த நிலையில் நேட்டோ நாடுகள் புதிய கூட்டு முயற்சி தாக்குதல்களை தொடுத்திட உக்கிரேன் நாட்டுக்கு இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது .

உக்கிரேன் மீதான ரஷ்ய போர் என்று முடியும் ..?

எதிர்வரும் கோடைகாலத்திற்கு உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் தெரிவித்து இருந்தார் .

ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் இந்த செயல் திட்ட நகர்வுகளை முறியடிக்கும் விதமாக அமெரிக்கா,பிரித்தானிய மற்றும் நேட்டோ நாடுகள் இணைந்து எதிர் திட்டங்களை வகுத்து ரஷ்ய இராணுவ நகர்வுகளை தோற்கடிக்கும் இராணுவ அரசியல் தந்திரோபாய நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

ஆனால் இணைந்த பிரித்தானிய அமெரிக்கா நேட்டோ நாடுகள் கூட்டு முயற்சி தாக்குதல் ரஷ்ய மேற்கொள்ளும் இராணுவ நகர்வினை முழுமையாக தடுத்து விடுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .

உலக முதல் சோவியத் வல்லரசாக விளங்கிய ரஷ்ய உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க முடியாது 127 வது நாளில் திணறிய வண்ணம் உள்ளதாக எதிரி நாடுகள் பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளன .

உக்கிரேன் நாட்டை முழுமையாக ரஷ்ய இராணுவம் வாசம் வீழ்வது தடுக்க படும் என நேட்டோ கூட்டமைப்பு நாடுகளை முழங்கிய வண்ணம் உள்ளன .

உக்கிரேன் நகரங்கள் ரஷ்யா இராணுத்திடம் வீழ்ந்தது

ஆனால் ரஷ்ய இராணுவம் உக்கிரேனின் மரியபோல் ,டொன்பஸ், உள்ளிட்ட முக்கிய நகரங்களை தமது முழுமையாந கட்டு பாட்டுக்குள் வைத்திருக்கும் அதேவேளை தமது தாக்குதல்களை தீவிரமாக தொடுத்த வண்ணம் உள்ளன .

உகிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமிக்க துடிக்கும் ரஷ்ய ஜனாதிபதி புட்டீன்

ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் தலைக்குள் என்ன இருக்கிறது அவர் என்ன சிந்திக்கிறார் அவர் செயல் படுத்த போவது என்ன என்பதை கண்டறிய

முடியாது அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாட்டு உளவுத்துறையினர் மண்டையை போட்டு பிய்த்த வண்ணம் உள்ளனர்.

உலக நாடுகளை ரஷ்ய மீது தொடர் பொருளாதார தடைகளை விதித்து மேலும் ரஷ்ய நாட்டுக்கு நெருக்கடிகளை தருவித்தால் ரஷ்ய ஜனாதிபதி பிளாடிமீர்

புட்டீன் ஐரோப்பா மீது தாக்குதலை தொடுப்பார் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது .

உக்கிரேன் மீதான ரஷ்யா போரினால் மூன்றாம் உலகம் போர் வெடிக்கும் அபாயம்

அவ்வாறு ரஷ்ய ஐரோப்பா மீது தாக்குதல் தொடுக்க முற்பட்டால் அதுவே மூன்றாம் உலக யுத்தமாக மாற்றம் பெறுவதுடன் பெரும் மனித மற்றும் சொத்து அழிவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.


மூன்றாம் உலக யுத்தம் மூண்டால் முப்பது மில்லியனுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாவர்கள் என்ற புள்ளிவிபர தகவல் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

மூன்றாம் உலக யுத்தம் ஆரம்பித்தால் இங்கு அணுகுண்டு பாவனைகள் ஆதிக்கம் பலமாக இருக்கும் என்வும், மீளவும் ஜப்பானை போன்று பல

நாடுகளில் பல நகரங்கள் உருவாகும் அபாயம் ஏற்படும் என்கிறது அந்த உளவு நிறுவன எச்சரிக்கை தகவல் .

உக்கிரேன் நாட்டை முழுமையாக ஆக்கிரமித்து ஆண்டிட ரஷ்ய இராணுவத்தை தடுக்காது அமெரிக்கா பிரித்தானியா நேட்டோ நாடுகள் வழிவிட்டால் மூன்றாம் உலக யுத்தம் தடுக்க படும் .

அவ்வாறு இல்லாது கிளித்தட்டு விளையாட முனைந்தால் ரஷ்ய இராணுவ தாக்குதல் நிலவரம் மேலும் மோசமாகும் என்பதே சமகால அரசியல் நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன

  • வன்னி மைந்தன்

    Leave a Reply