ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – நடந்தது என்ன

Spread the love

ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா விமானம் – நடந்தது என்ன

ஈராக்கில் வீழ்ந்து நொறுங்கியது அமெரிக்கா ஆள் இல்லாத உளவு விமானம் .


இயந்திர கோளாறு காரணமாக ,அமெரிக்காவின் இந்த உயர் ரக ஆள் இல்லா விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

எனினும் இது ஈரானின் ,திட்டமிடப்பட்ட சதி வேலைகளில் , ஒன்றாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

தமது உளவு விமானத்தின் கண் காணிப்பை, தாம் அதிகரித்துள்ளதாக ,ஈரான் அறிவித்திருந்தது .

அவ்வாறு அறிவித்த சில நாட்களில் ,ஈராக்கில் அமெரிக்காவின், ஆள் இல்லாத உளவு விமானம் இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

அமெரிக்கா உளவு விமானம் ,வீழ்ந்து நொறுங்கியதன், பின்புலத்தில் நடந்தது என்ன என்பதே கேள்வியாக உள்ளது .

ஒரே நாளில் அமெரிக்கா ,மற்றும் அவர்கள் கூட்டாளி நாடான, இஸ்ரேல் இராணுவத்தின் ,ஆள் இல்லா உளவு விமானங்கள் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

இந்த இரு நாடுகளின் உளவு விமானங்கள், வீழ்த்த பட்டதன் பின்புலத்தில் ,இரு நாடுகளுக்கும் ,ஈரான் என்ன சொல்லி கொள்ள முனைகிறது என்பதை ,இதன் ஊடாக அவதானிக்க முடிகிறது .

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து ,அமெரிக்கா இராணுவம் , விலகும் வரை .தமது பழிவாங்கும் தாக்குதல்கள், தொடரும் என அறிவித்து இருந்தது .

இவ்வாறு ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,இந்த தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply