இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை

இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை

கொழும்பு ;இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தொடர்ந்து இலங்கைக்கு உதவும் முகமாக இந்தியா தூதுக்குழு இலங்கை வந்தடைந்துள்ளது .

இந்தியா தூதுக்குழு

இந்த விசேட தூதுக்குழுவில் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா,இந்திய பொருளாதார உறவுகள் தொடர்பான
செயலாளர் அஜய் சேத், த பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி அனந்த நாகேஸ்வரன் ஆகியோர் முக்கிய அதிகாரிகள் பங்கெடுத்துள்ளனர் .

ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ,மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை சந்தித்து பேச்சில் ஈடுபடவுள்ளது .இந்தியா வெளியுறவு அமைச்சர் தலைமையில் மேற்படி குழு வருகை தந்துள்ளது .

இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழு இலங்கை ஜனாதிபதி கோட்டபாய பிரதமர் விக்கிரமசிங்க சந்திப்பு

இலங்கை வந்தடைந்துள்ள இந்திய விசேட குழுவினர் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை தனிப்பதற்குரிய வேலைகளை இந்த இந்தியா தூதுக்குழு செயல்முறை படுத்தும் .

ஆனால் அதற்கு கைமாறாக இலங்கையிடம் கச்சத்தீவை இந்தியா குத்தகைக்கு 99 வருடங்களுக்கு மீளப்பெற்று கொள்ளும் பேச்சுக்களும் இதில் இடம் பெற்று உள்ளதாக முக்கிய அரசியல்வாதிகள் தெரிவித்து வருகின்றனர் .

மிக ஆபத்தான நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு சீனாவின் பாணியில் பணத்தை அள்ளி வழங்கி இலங்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இந்தியா முனைகிறது .

அவ்வாறான நகர்வுகள் இன்று இங்கே வந்த இந்தியா விசேட குழுவினர் பேசியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது .

இந்தியாவுக்கு ஜனாதிபதி கோட்டபாய நன்றி

இலங்கை சந்தித்து வரும் மிக நெருக்கடியான கால கட்டத்தில் இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவி வருகின்றது .அவ்வாறான அவசர புரிந்துணர்வு உதவிகளுக்கு இலங்கை மக்கள் சார்பில் இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார் .

இலங்கை வந்தடைந்த இந்தியா தூதுக்குழுவிடம் சிக்கிய இலங்கை

இந்தியா சும்மாவா உதவி செய்கிறது என்பதற்கு இன்று உள்ளே இடம்பெற்ற பேச்சுக்கள் மூலம் கொழும்பு புரிந்திருக்கும்.

சோழியன் குடும்பி சும்மாவா ஆடும் என்பதும் தமிழக மீனவர்கள் மீது தேவையற்று கைது செய்திட முனைந்து இன்று இடியாப்ப சிக்கல்லுளுக்குள் இலங்கை சிக்கியுள்ளது .

மேலும் இலங்கையை தனது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் அணைத்து நகர்விலும் இந்தியா ஈடுபட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

    Leave a Reply