இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி |சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க
இட்லி தோசைக்கு ஏற்ற சூப்பர் சட்னி ,வீட்டில சட்னி சுவையாக செய்வது இப்படி தாங்க. கடை சுவையில் சிறந்த தரமான சமையல், எல்லோரும் இட்லி தோசைக்கு விரும்பி சாப்பிடுவது இது தாங்க
அப்படியான அருமையான சட்னி செய்வது எப்படி என்பதை இந்த சமையல் குறிப்பில் நாங்க பார்க்கலாம் வாங்க .
சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை ஒன்று
இந்த சட்னி செய்து கொள்ள முதல்ல அடுப்பில் கடாய வைத்து எண்ணெய் சேர்த்து கொள்ளுங்க .
அப்புறம் அது கூடவே ரெண்டு கரண்டி கடலை பருப்பு சேர்த்து கோல்டன் நிறமாக வரும் வரை நன்றாக வறுத்திடுங்க .
கடலை பருப்பு நன்றாக வறுபட்டதும்,வறுத்து எடுத்த வேர்க்கடலை மூன்று கைப்பிடி சேர்த்திடுங்க .பச்சை வாசம் போன பின்னர் ஐந்து கரம் மிளகாய் சேர்த்திடுங்க .
நன்றாக வறுபட்டதும் இது கூடவே வெட்டி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்திடுங்க .வெங்காயம் கண்ணாடி பதம் வேகும் வரை நன்றாக வெங்காயத்தை வறுத்திடுங்க .
வெங்காயம் நன்றாக வறுபட்ட பின்னர் தக்காளி ஒன்று வெட்டி பொடியானதை சேர்த்திடுங்க .தக்காளி நன்றாக வதங்கி வந்ததும் இது கூடவே புளி தேவையான அளவு சேர்த்திடுங்க .
இப்போ தக்காளி நன்றாக வந்தாங்கி வந்திடுச்சு ,அடுப்பை அணைத்திடுங்க .
பகுதி – வேர்க்கடலை சட்னி செய்வது எப்படி ..?சட்னி செய்முறை இரண்டு
அடுப்பில இருந்து கூட்டை எடுத்து ,கிரைண்டரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து ,கொஞ்சமா தண்ணீர் சேர்த்து கொர கொரப்பா அரைத்து எடுத்திடுங்க .
இப்போ உங்களுக்கு ஏற்ப பதத்திற்கு தண்ணி சேர்த்து திக்கா வேணுமா தண்ணியா வேணுமா சட்னி என முடிவெடுத்து அதற்கு ஏற்ப தண்ணீர் சேர்த்திடுங்க
இப்போ செம்மையான வேர்க்கடலை சட்னி ரெடியாகிடுச்சு இதுக்கு மேலும் சுவைதர தாளிப்பு சேர்த்திடுவோம் .
இப்போ தாளிக்க கடுகு ,உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை ,இரண்டு வறுமிளகாய் சேர்த்து தாளித்து போடு அதை நன்றா கலக்கி விட்டுடுங்க .
இப்போ நமக்கு கடை சுவையில் தரமான ,வேர்க்கடலை சட்னி ரெடியாடிச்சு .இதனை தோசை ,இட்லி, பாராட்டோ ,வடை,கூட சேர்த்து தொட்டுக்க செமையாக இருக்கும் .
வேர்க்கடலை சட்னி செம பிரமாதம் ஐந்தே நிமிடத்தில் தயாரான அருமையான வேர்க்கடலை சட்னி .
இப்படி தாங்க வேர்க்கடலை சட்னி செய்வது .மிக இலகுவான சமையல் ,நாள் தோறும் வீட்டில இப்படி வேர்க்கடலை சட்னி சமையல் செய்து சாப்டுங்க மக்களே .
அனைத்து விதமான சட்னி செய்முறைகள் பார்த்திட இதில் அழுத்துங்கள்