மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney

மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney
Spread the love

மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney

நம்ம வீட்டில் மொறு மொறு அடை தோசை .மிக சுவையாக தரமாக செய்து சாப்பிடலாம் வாங்க .

அடை தோசை செய்வது எப்படி ..?
அதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

இந்த அடை தோசை செய்வதற்கு சட்டி டுத்து ,
ஒரு க்ளாஸ் வெள்ளை அரசி ,அரை கப் கடலை பருப்பு ,
அரை கப் பாசி பருப்பு ,அரை கப் துவரம் பருப்பு ,எடுத்திட்டு அதில தேவையான தண்ணி ஊற்றி நன்றாக
கழுவி எடுங்க .

நன்றாக் கழுவி எடுத்த பின்னர் புதிய தண்ணி சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்திடுங்க .


மூன்று மணி நேரம் கழித்து நீரை வடித்து எடுத்து மிக்சியில போட்டு
கூடவே சின்ன துண்டு பட்டை ,3 கராம்பு ,சோம்பு ,பூண்டு ,8 வறுமிளகாய் ,சேர்த்து நன்றாக அரைத்து எடுங்க .

அப்புறமா பெரிய வெங்காயம் தேங்காய் பல்லு ,
கொத்தமல்லி இலைகளை பொடியாக வெட்டி சேர்த்திடுங்க .
கூடவே உப்பு சேர்த்து நன்றாக கலந்திடுங்க .

மொறு மொறு அடை தோசை பூண்டு சட்னி|Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney

அதற்கு அப்புறம் தோசை கல்லை சூடாக்கி எண்ணெய் ஊற்றிட்டு தோசை மாதிரி ஊற்றுங்க,அப்புறம் தோசை மேல குழி வெட்டி போடுங்க .வெந்து வர அதற்கு அபப்டி பண்ணுங்க .
நன்றாக வெந்து வரும் வரை தோசை சுட்டு எடுத்திடுங்க .

செய்முறை ரெண்டு


தொட்டு சாப்பிட பூண்டு சட்னி செய்யலாம் வாங்க .

கடாய வைத்து பூண்டு பூட்டு வெந்து வரு பொழுது தேவையான மிளகாய் ,
சின்ன வெங்காயம் ,சின்ன துண்டு புளி சேர்த்து வறுத்தெடுங்க .

நன்றாக கலர் மாறி வந்ததும் ஆற வைத்து மிக்சியில் போட்டு தேவையான தண்ணி சேர்த்து அரைத்து எடுங்க .

அப்புறம் கடாயில் எண்ணெய் பூட்டு தாளித்து எடுங்க .
அரைத்த சட்னியை இதில போட்டு கருவேப்பிலை போட்டு, வேக வைத்து எடுங்க .ஐந்து நிமிடம் முடிந்ததும் சட்னியை எடுத்திடுங்க .

அப்புறம் மொறு மொறு தோசையுடன் பூண்டு மிளகாய் சட்னி சேர்த்து சாப்பிடுங்க.


அவ்வளவு தாங்க .இதுபோல நன்றாக நாள்தோறும் வீட்டில் செஞ்சு சாப்பிடுங்க மக்களே .இப்போ சொல்லுங்க சுவை எப்புடி இருக்கு மக்களே .

மொறு மொறு அடை தோசை| பூண்டு சட்னி| Adai Dosa Recipe in Tamil | Poondu Chutney Breakfast Recipe | Healthy Recipe | Dosa Recipe|
Breakfast Recipe|