கதறி அழும் காதல் ….!

Spread the love

கதறி அழும் காதல் ….!

மடி வைத்து தலை தூங்க
மணி விரல்கள் தலை கோத …
முன்பகல் இரவாகி
முழுமையாய் நனைந்த நாட்கள் …

எண்ணி இன்று பார்க்கையிலே
ஏங்குதடி என் மனது ….
காற்று வந்து உடல் புகா
கட்டி அணைத்து நின்றவளே ….

நீ இட்ட முத்தங்களை
நினைவுகள் தேடுதடி …
உன் புருஷன் நான் என்று
உறவாடிய காலங்கள் …..

வீணாகி போகும் என்று
விரும்பியது யார் இன்று ..?
ஏகாந்த பெரு வெளிக்குள்
எறிந்தது யார் இன்று …?

ஊர் வந்த வேளையில -கால்
ஊன்றிய சாலையிலே …
தேம்பியது உன் நினைவுகளே
தேவைதையே என் செய்வேன் …?

அழுதபடி நான் நடக்க
அகம் எல்லாம் நீர் துடிக்க
பாத்திருந்த கதிரவனோ
பாய்ந்து வந்து காய வைக்க …

நான் நடந்து போனேண்டி
நடை பிணம் ஆனேண்டி …
ஏதறிவாய் என் மனதை
எவர் சொல்வார் என் நிலையை …?

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -21/01/2018

Leave a Reply