துப்பாக்கிகள் மாயம் தேடும் அரசு சிக்கிய கோட்டா

Spread the love

துப்பாக்கிகள் மாயம் தேடும் அரசு சிக்கிய கோட்டா

பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் எவன்கார்ட் நிறுவனத்திற்கு ஒப்படைத்திருந்த 103 தானியங்கி மற்றும் அரை

தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 28,789 தோட்டாக்களுடன் தொடர்புடைய ஒப்பந்தங்கள் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் கையகப்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு கப்பல் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் இதுவரை வழங்கப்படாத 04 தானியங்கி துப்பாக்கிகள் மற்றும் 03 அரை தானியங்கி துப்பாக்கிகள் உட்பட 13 துப்பாக்கிகள் காணாமல் போயுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிகள் மாயம் தேடும் அரசு சிக்கிய கோட்டா

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்துக்கும் எவன்கார்ட் மெரிடைம் சர்வீஸ் தனியார் நிறுவனத்துக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் 2019 ஜனவரி 24ஆம் திகதி காலாவதியாகியுள்ளதால் ஆயுதங்கள் மீள ஒப்படைக்கப்பட வேண்டுமென கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, ரங்கல மற்றும் காலி மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களில் இருந்து வரவேண்டிய சுமார் 80 கோடி ரூபா 07 வருடங்களுக்கு மேலாக அறவிடப்படவில்லை எனவும் கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது.

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம், உள்நாட்டு மற்றும் கடல்சார் பாதுகாப்பு சேவைகளை வழங்குவதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை முறையான

முகாமைத்துவம் மற்றும் கட்டுப்படுத்த, பொருத்தமான உள்ளக கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் நிர்வாகத்தின் கவனம் செலுத்தப்படவில்லை என கணக்காய்வு திணைக்களங்களுக்கு தெரியவந்துள்ளது.