Search Results for: மணமகள்
முதலிரவில் பிள்ளை பெற்ற மணமகள் |தப்பி ஓடிய மாப்புள்ள |Ethiri News Crime
முதலிரவில் பிள்ளை பெற்ற மணமகள் |தப்பி ஓடிய மாப்புள்ள |Ethiri News Crime
இந்தியாவில் திருமண நாள் முதலிரவு ஆசையில் மாப்புள்ள காத்திருக்க ,முதலிரவில் புது மனைவி பிள்ளை பெற்ற செயலை கண்டு மாப்புள்ள தலை தெறிக்க ஓடிய பயங்கரம் இடம் பெற்றுள்ளது .
Overlay6
மணமகள் மீது அசிட் வீச்சு
மணமகள் மீது அசிட் வீச்சு
திருமண வைபவத்துக்கு தயாராகி கொண்டிருந்த மணமகள் மீது அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த அந்தப் பெண் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
மத சடங்குகளுடன் காலி பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பெண்ணின் முன்னாள் காதலனே அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் என்றும் அவரை தேடி வலைவிரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
வேட்டிக்குள் இன்றொரு தாய் கண்டேன் – இந்த
வேளையில் அவருக்கு நன்றி இட்டேன்
போதைக்குள் உறைந்த மனம் கண்டேன் – இந்த
பொதிகையை கண்டே நான் மிளிர்ந்தேன்
பெண் எல்லாம் தாய் என்று யார் சொன்னார் – இந்த
பேய்களின் சிசு கொலை யார் சொன்னார் ..?
முலை கொண்டும் பால் தரா பேயானார் – இந்த
மூளைகள் கொடும் செயல் யார் சொன்னார் ..?
புகுந்த வீட்டில் மணமகள் தொல்லை
வந்தாரை மதியாத கீழானர் – இந்த
வந்தேறி வீட்டில் கோலானார்
தந்தவன் தாலிக்கு மேலானார் -இந்த
தவளைக்கு யார் கால் வைத்தார் ..?
மடியாத சேலைக்கு கண் வைத்தார் – இந்த
மாடத்தை காணா அன்றிருந்தார்
கூவத்தில் வாழ்ந்ததை ஏன் மறந்தார் – இந்த
கூடத்தில் இன்னாரை ஏன் இழிந்தார் ..?
அகவையில் இன்றே சிறிதானார் – இன்றோ
ஆடும் பட்டம் போலானார் – இந்த
கீழிடை சிந்தையில் ஏன் நின்றார் – இந்த
கிழிசலை என்று இவர் எறிவார் …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 07-09-2021
வன்னி மைந்தன் கவிதைகள்
கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
கல்யாணத்தின் போது குங்குமம் வைக்கையில் கை நடுங்கியதால் உடனே நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பாகியுள்ளது திருமண நிகழ்வு.
இந்தியா ,பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தில்,
குங்குமம் வைக்கும் விழாவின் போது மணமகனின் கை நடுங்குவதை மணமகள் கவனித்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.
மணமகன் மனநிலை சரியில்லாதவர் என்று கூறி, மணமகள் திருமணத்தை தொடர மறுத்துவிட்டார்.
இந்த சம்பவம் பபுவா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கத்ரா கிராமத்தில் நடந்தது.
செனாரி பகுதியில் உள்ள பகதி கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்பச்சன் பிந்தின் மகன் ஹீரா குமார் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் வந்தார், மேலும் அனைத்து ஆரம்ப சடங்குகளும் நிறைவடைந்தன.
இருப்பினும், முக்கியமான குங்குமம் வைக்கும் சடங்கின் போது, மணமகனின் கை நடுங்கியதாகவும், அவரால் குங்குமத்தை சரியாகப் பூச முடியவில்லை என்றும் மணமகள் கூறினார்.
மணமகள் உடனடியாக திருமணத்திலிருந்து பின்வாங்கி, மணமகன் “பைத்தியம்” போல் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.
நிலைமை விரைவாக மோசமடைந்து உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு குடும்பத்தினரும் பபுவா பொலிஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இறுதியில், மணமகன் மணமகள் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியிருந்தது.
மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ
மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ
மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வாழ்வில் திருமணம் என்ற உறவு மிக முக்கியமானது. ஆண், பெண் உறவின் எல்லைக்கோடு திருமணம் என்ற புள்ளியின் மூலம் இணைக்கப்படுகிறது. இந்தியாவில் பல்வேறு திருமண முறைகள் இருந்தாலும் அவரவர் கலாசார முறைப்படி நடத்தப்பட்டு வருகிறது.
சைவ, அசைவ விருந்து, பாட்டுக் கச்சேரி என நகர் புறங்களில் நடைபெறும் திருமண விழாக்களுக்கு எடுக்கப்படும் போட்டோ, வீடியோக்கள் தற்போது பெரும் பாய்ச்சலாக வேறு திசையை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. அது சமூகத்தில் பெரும் அதிர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறது.
மணமகனின் வாயோடு வாய் வைத்து சிகரெட் புகையை உறிஞ்சும் மணமகளின் வீடியோ
மணமகனுக்கு மது ஊற்றிக் கொடுக்கும் மணமகள், செயற்கை மழையை பெய்ய வைத்து அதில் மணமக்கள் முழுமையாக நனைய வைத்து புகைப்படம்,
வீடியோக்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஃப்ரீ வெட்டிங் ஷூட் என அழைக்கப்படும் இப்படியான புகைப்படங்கள், வீடியோக்கள் உயரமான மலைப்பிரதேசங்கள், நீர்வீழ்ச்சிகள், இயற்கை சூழல் நிறைந்த வனப்பகுதிகளில் எடுக்கப்படுகின்றன. ஆபத்தான முறையில் கடலிலும் இப்படியான ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் சமீபத்தில் அரைகுறை ஆடைகளுடன் மணமகள் மற்றும் மணமகன் ஆகிய இருவரும் திருமணத்துக்கு முன்பு பங்கேற்ற ஃப்ரீ வெட்டிங் ஷூட் புகைப்படம் எடுக்கப்பட்டது. இப்புகைப்படங்கள் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தின.
இந்த நிலையில், சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணமகனின் வாயோட வாய் வச்சு சிகரெட் புகையை மணமகள் உறிஞ்சும் அந்த வீடியோவிற்கு சமூக வலைதளங்களில் பலர் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்by நிருபர் காவலன்
- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்by நிருபர் காவலன்
- நாய்களை எரிக்க சுடலைby நிருபர் காவலன்
- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைதுby நிருபர் காவலன்
- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவுby நிருபர் காவலன்
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிப்பு
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிப்பு
இலங்கையில் கடந்த 14 நாட்களாக அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு சில தளர்வுகளுடன் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்று சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இன்று (04) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அதில் குறிப்பிபடப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து சில பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. அதன ;அடிப்படையிலேயே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானோருக்கு மாத்திரம் பயணிக்க முடியும்
மேல் மாகாணத்தில், ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானோர் மாத்திரம் பயணிக்க முடியும்
தனியார்/ வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கேற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி.
திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை, எவ்வாறாயினும் மணமகன் மற்றும் மணமகள் உள்ளிட்ட 10 பேரின் பங்குபற்றலுடன் பதிவுத் திருமணத்தை நடத்த முடியும்.
ஒருவர் உயிரிழந்தால், சடலத்தை பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை முன்னெடுக்க வேண்டும், இறுதிக்கிரியைகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்
செயலமர்வு, மகாநாடு, வர்த்தக குறி வெளியீடு ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு 25 பேருக்கு இனுமதி
ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை நடத்துவதற்கு அனுமதி.
நிதி நிறுவனங்கள் ஆகக்குறைந்த ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: எந்த சந்தர்ப்பத்திலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், நீச்சல் தடாகங்கள், மதுபானசாலைகள், கெசினோ மற்றும் இரவுநேர களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்களை திறப்பதற்கு அனுமதியில்லை.
மசாஜ் நிலையங்களை திறக்க அனுமதி
திறந்த வெளி சந்தை வாராந்த சந்தை உள்ளூராட்சி மன்றங்களின் வலுவான கட்டுப்பாடுகளுடன் இடமபெற முடியும்.
பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்க முடியும்.
ஜவுளி கடைகள் ,தொடர்பாடல் நிலையங்கள் முதலானவற்றுக்கு அனுமதி
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி
உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் தம்பதி
பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் தம்பதி
அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.
கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் -நின்று போன திருமணம்
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் -நின்று போன திருமணம்
நாகர்கோவிலில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போனது. இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்றது- மணமகள் அதிர்ச்சி
நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பெண் என்ஜினீயருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த
நிகழ்ச்சியில் மணமகனும், மணமகளும் மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டனர். பின்னர் 26-ந் தேதி (அதாவது நேற்று) இருவருக்கும்
திருமணம் நடத்த இருவீட்டார் சார்பிலும் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்தன. பத்திரிகை அச்சிட்டு தங்களுடைய உறவினர்களுக்கு கொடுத்தனர்.
மணமகளும், வருங்கால வாழ்க்கையை நினைத்து பூரிப்பில் இருந்தார். திருமண தேதியும் நெருங்கியது. நேற்றுமுன்தினம் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன.
மணமகளின் பெற்றோர், திருமணம் நல்லபடியாக நடந்தேற வேண்டும் என்று உற்சாகமாக விருந்தோம்பல் பணியில்
ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சியில் மணமகனும் பங்கேற்றார். இவர் தான், தனக்கு கணவராக வரப்போகிறார் என்ற நினைவலையில்,
மனதுக்குள் பல ஆசைகளை வைத்தபடி மணமகளும், உற்சாகமாக உறவினர்களை வரவேற்றபடி இருந்தார்.
அந்த சமயத்தில் மணமகளுக்கு அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. அதாவது வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்ற மாப்பிள்ளையை காணவில்லை என்ற செய்திதான் அது.
வெகுநேரமாகியும் அவர் வராததால், பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை வீட்டாரும், என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடினர்.
அதன்பிறகு தான், திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதனால் பல கனவுகளில் இருந்த
மணப்பெண், உடைந்து போனார். அதே சமயத்தில் இருவீட்டாரிடையே ஒருவித சலசலப்பும் ஏற்பட்டது.
மாப்பிள்ளையின் இந்த திடீர் முடிவால் நேற்று நடக்க இருந்த திருமணமும் நின்று போனது. பெண் வீட்டார் தரப்பில் முறைப்படி
போலீசிடம் புகார் கொடுக்காததால், போலீசாரும் இந்த பிரச்சினையில் தலையிடவில்லை.
மணமகன் ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்காகத்தான், பெற்றோர் பார்த்த பெண்ணை தவிக்க விட்டபடி பாதியிலேயே சென்றதாகவும் கூறப்படுகிறது.
மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போன சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது.
தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்
தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்
மஞ்சூர் அருகே நடந்த திருமண விழாவில் எனது காதலரை தான் கரம் பிடிப்பேன் என்று கூறி தாலி கட்டும் நேரத்தில் மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்த இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மட்டக்கண்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும், கோத்தகிரி அருகே உள்ள தூனேரி
கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கு மிகவும் எளிமையாக திருமணம் நடத்த பெற்றோர் முடிவு செய்தனர்.
அதன்படி கடந்த 29-ந் தேதி மட்டக்கண்டி கிராமத்தில் திருமண விழா நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட மண மேடையில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்ததுடன் கழுத்தில்
மாலையுடனும், மணமகள் பட்டுச்சேலை அணிந்து கொண்டு மாலையுடன் மணமேடையில் அமர்ந்து இருந்தனர். திருமண
விழாவில் மணமக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
மணமக்களின் குல வழக்கப்படி மணமகளின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்பு, என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா?
என்று மணமகன் மணப்பெண்ணிடம் 3 முறை கேட்க வேண்டும். 3 முறையும் சம்மதம் என்று சொன்ன பிறகே மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்ட வேண்டும்.
அதன்படி மணமகளிடம் என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று மணமகன் கேட்டார். அவர் 2 முறை கேட்டபோதும் மணமகளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. அப்போது
சரியாக கேட்கவில்லை என்று நினைத்த மணமகன், 3-வது முறையாக கொஞ்சம் சத்தமாக என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று கேட்டபடி மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்றார்.
உடனே மணமகள் உங்களை திருமணம் செய்து கொள்ள எனக்கு சம்மதம் இல்லை என்று கூறினார். அத்துடன் தாலி கட்ட விடாமல்
மணமகனின் கையை தட்டிவிட்டு எழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் ஏன் திருமணம் வேண்டாம் என்று கேட்டனர்.
அப்போது பேசிய மணமகள், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறேன். ஏற்கனவே அவர் திருமணமானவர். அவருக்கு குழந்தை உள்ளது. எனக்காக அவர் திருமண பந்தத்தை
முறித்துக்கொண்டார். அவருடைய குழந்தைக்கு நான்தான் தாயாக இருந்து பராமரிப்பேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன். அவர் எனக்காக காத்து இருக்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் இங்கே வந்துவிடுவார் என்று கூறி மணமேடையை விட்டு இறங்கினார்.
உடனே அந்த மணப்பெண்ணின் உறவினர்கள் அவரை தாக்க முயன்றனர். அத்துடன் அந்த பெண்ணின் பெற்றோர், மணமேடையில் அமர்ந்து மணமகனை திருமணம் செய்து
கொள்ளும்படி கூறினார். அதற்கு அவர், எனது காதலரை தான் நான் கரம் பிடிப்பேன் என்று கூறினார். அதற்கு அங்கிருந்த உறவினர்கள் மணமகனை பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே கூறி இருக்கலாமே என்று கேட்டனர்.
அதற்கு அந்த பெண், எனக்கு பேசுவதற்கு யாரும் அனுமதி கொடுக்கவில்லை. ஒருவரை மனதில் வைத்துக்கொண்டு, பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு துரோகம் செய்ய
எனக்கு மனமில்லை. எனவே நான் சென்னையை சேர்ந்த எனது காதலரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
இந்த காட்சியை திருமண விழாவுக்கு வந்திருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பரவ விட்டார்.
தற்போது அந்த காட்சி வைரலாக பரவி வருகிறது. மஞ்சூர் அருகே தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றுக்கூறி
மணமகள் மணமேடையில் இருந்து எழும்பி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்
காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்
முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் காதலில் விழுந்தது எப்படி என்று அவரது தங்கை நிஷா அகர்வால் கூறியுள்ளார்.
காதலில் விழுந்தது எப்படி? காஜல் அகர்வால் பற்றி நிஷா அகர்வால்
காஜல் அகர்வால் – நிஷா அகர்வால்
காஜல் அகர்வாலுக்கும், தொழில் அதிபர் கவுதம் கிட்ச்லுவுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடக்கவிருக்கிறது. கொரோனா
வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தை பிரமாண்டமாக நடத்தாமல் வீட்டிலேயே நடத்துகிறார்கள். காஜலும்,
கவுதம் கிட்ச்லுவும் கடந்த சில ஆண்டுகளாகவே காதலித்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார்கள்.
காஜல், கவுதமை எங்கு சந்தித்தார், எப்படி காதல் ஏற்பட்டது, யார் காதலை முதலில் சொன்னது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள்
ஆவலாக இருக்கிறார்கள். திருமணத்தில் இரு வீட்டாரும், நண்பர்கள் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்கவிருக்கிறார்கள். காஜலின் உறவினர்கள் ஏற்கனவே அவர் வீட்டிற்கு வரத் துவங்கிவிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து காஜலின் தங்கை நிஷா அகர்வால் கூறியதாவது, கொரோனா பிரச்சினையால் நாங்கள் திருமணத்தை
எளிமையாக நடத்துகிறோம். ஹல்தி மற்றும் மெகந்தி சடங்குகள் வீட்டிலேயே நடக்கும். இரண்டுமே இன்று நடக்கிறது. காஜலை
நினைத்து நாங்கள் அனைவரும் சந்தோஷத்தில் இருக்கிறோம். அவர் புது வாழ்க்கையை தொடங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
காஜல் அகர்வால்
காஜலின் திருமணத்தை பார்க்கத் தான் என் தந்தை பல காலமாக காத்துக் கொண்டிருந்தார். அதனால் இது எங்கள் அனைவருக்கும்
முக்கியமான தருணம். விரைவில் காஜல் திருமணம் செய்து கொண்டு புகுந்த வீட்டிற்கு சென்றுவிடுவார் என்பதால்
கவலையாகவும் இருக்கிறது. அதனால் எங்களால் முடிந்த அளவுக்கு காஜலுடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறோம்.
மணமகள் என்பதால் அனைவரும் காஜலுடன் நேரம் செலவிட விரும்புகிறார்கள். அதனால் என்னால் அக்காவுடன் அதிக நேரம் இருக்க முடியவில்லை. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள்
மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். திருமண நாள் அன்றே சங்கீத் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
அதனால் அன்று ஆட்டம், பாட்டம் என்று செமயாக இருக்கும். கவுதம் நல்லவர். அவரை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மகிழ்ச்சி
அடைகிறேன். அவர்களின் காதல் கதையை நான் சொல்ல மாட்டேன். அதை காஜல் தான் இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டும்’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்
திருமண நிகழ்வுகளுக்கு படை எடுக்கும் மக்கள்
திருமண நிகழ்வுகளுக்கு படை எடுக்கும் மக்கள்
திருமண வைபவங்களில் கலந்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர்நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க அவர்களினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு:
வைபவ மண்டபங்களில் உள்ள ஆசன எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் அல்லது ஆகக்கூடிய வகையில் 300 பேருக்கு (
மணமகன் உள்ளிட்ட குழு, மணமகள் உள்ளிட்ட குழு , இசைக்குழு மற்றும் ஏனைய கலைஞர்கள் அடங்கலாக) குறைந்த
எண்ணிக்கையில் திருமண வைபவத்தில் கலந்து கொள்வதற்கு 2020 ஜுலை 6ஆம் திகதி தொடக்கம் அனுமதி வழங்கப்படுகின்றது. இதே
போன்று திருமண வைபவத்தில் கலந்து கொள்வவோருக்கு இடையில் 1 மீற்றர் இடைவெளியை கடைபிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
வைபவ மண்டபங்களில் கலந்துகொள்வதற்காக இதற்கு முன்னர் வழங்கிய
ஆலோசனைகள் இதற்கும் ஏற்புடையதாகும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்
தென்சூடானில் -சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்
தென் சூடான் -Gok மாகாணத்தில் 20 வயது இளம் மனைவியை கணவன் அடித்து கொன்றுள்ள செயல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மச்சான் முறையானவருக்கு தமது மகளை திருமணம் செய்து வைத்தனர் பெற்றோர் ,அப்பொழுது அவருக்கு சீதனமாக இருநூறு மாடுகள் ,மற்றும் நகைகள் தருவதாக திருமண பேச்சாக இருந்தது
ஆனால் குறிப்பிட்ட படி டவுரி வழங்க தாமதமான நிலையில் ஆத்திரமுற்ற மாப்புள்ள மனைவியை
வதை செய்து அடித்து கொன்றுள்ளான் .
தமது மகள் நலமுடன் வாழ்வார் என தமது சொந்த உறவுக்குள் திருமணம் முடித்து வைத்த பெற்றோருக்கு மகளை சடலமாக தருவான் என அவர்கள் சற்றும் எதிர் பார்த்திருக்க வில்லை .
இருபது வயது ஆசை மகளை அடித்து கொன்ற மணமகனுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்ற நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர் .
இவர்கள் எதிர்பார்க்கும் அந்த நீதி நீதிமன்றினால் வழங்க படுமா ..?
கவலை தோய்ந்த முகத்துடன் கண்ணீரில் வாடும் இந்த குடும்ப உறவுகளுக்கு ஒருவர் எடுத்த தவறான முடிவினாலும் ,அறியாமையினாலும் ,வறுமையின் இயலாமையினாலும்
நடந்து முடிந்த இந்த துயர சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
இருபதாவது வயதில் தமது மகளை பறிகொடுத்து தவிக்கும் இவர்களுக்கு ,ஆறுதல் கூறுவார் யார் ..?
சீதன கொடுமையால் மனைவியை அடித்து கொன்ற கணவன்
வாழ வேண்டிய வேளையில் சீதனத்தை மூலதனமாக கொண்டு திருமணம் முடிக்கும் இது போன்ற சோம்பேறி மாப்பிளை மார்கள் என்று திருந்துவார்கள் ..?
இவர்கள் சீதனத்தை கேட்டு வாங்கி பெண்ணை அடிமை படுத்தி ,அந்த மொத்த குடும்பத்தையும் கண்ணீரில் ஆழ்த்திய இந்த கொடும் செயல்
சமூக நீதியில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என பாதிக்க பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்
தமது வாழ்வை தாமே தீர்மானித்து கொள்ள முடியாது மணமகள் வீட்டாரை கொடுமை படுத்துவது எவ்விதத்தில் ஏற்று கொள்ள முடியும் ..?
இதே பகுதியில் இது போன்று மேலும் மூன்று இளம் பெண்கள் இவ்வாறு அநியாயமாக படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
சீதன வன்கொடுமையால் இந்த அப்பாவி உயிர்களை இளம் வயதில் பறிக்க பட்டுள்ளது
உலக மானிட சமூகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது































