பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாகைது

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில்

யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் பகுதியில், ஒரு பெண்ணைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம்

தொடர்பாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இலவலை போலீசாரால் அவர் காவலில் எடுக்கப்பட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுடன் தகராறு செய்த பெண் ஏற்கனவே விளக்கமறியலில் இருந்த நிலையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அனுராதாவின் பயங்கரவாத செயல்களுக்கு துணையாக களம் இறக்க பட்ட இவர் ஆயுத முனையில் தமிழர்களை மிரட்டி தமிழ் மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுளளார் .

இவரை கைது செய்த பொழுதும் தங்கம்

இவரை கைது செய்த பொழுதும் தங்கம் என கூற படும் கவுசல்யா ஏன் கைது செய்ய படவில்லை என்ற கேள்வி இப்பொழுது எழுப்ப படுகிறது .

இந்த துப்பாக்கி மிரட்டல் சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது குறிப்பிட தக்கது .

இந்த கைது நடவடிக்கை ஒரு நாடகமாக இருக்கலாம் என கருதப்படுகிறது ,இந்த விடயம் உலக அளவில் ஆளும் ஜேவிபி பயங்கரவாத அனுரா அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது குறிப்பிட தக்கது .

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்
Posted in இலங்கை செய்திகள்

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம்

225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் ,225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாகனம் வழங்க அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இனிவரும் காலங்களில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படாது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று (20) இரவு தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “360” நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்

மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்

மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முந்தைய நிர்வாகத்தில் மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்று விநியோகம் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்

அரசியல்வாதிகளின் பெயர்களை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுமந்திரன், குறிப்பாக நாடு முழுவதும் மதுபானசாலைகள் பெருகுவது தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த நிறுவனங்களைத் திறக்க பரிந்துரை செய்வதற்கு பொறுப்பான நபர்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“நாடு முழுவதும் மதுபானக் கடைகளில் ஒரு பரவலான பிரச்சினை உள்ளது, மேலும் இந்த உரிமங்களுக்கு எந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் ஒப்புதல் அளித்தனர் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளத் தகுதியானவர்கள்.

இது எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும், இதனால் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கால பதவியில் இருந்து விலக்கப்படுவார்கள் சுமந்திரன் தெரிவித்தார்.

மதுபான விற்பனை நிலையங்களின் அதிகரிப்பானது இளைய தலைமுறையினருக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்சினையாகும் என சுமந்திரன் வலியுறுத்தினார்.

மதுபானக்கடைகளை விஸ்தரிப்பதற்கு இரகசியமாக உதவிய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஆதாயத்திற்காக மதுபான அனுமதிப்பத்திரங்களை விற்று சிலர் இலாபம் ஈட்டியதாக தகவல் இருப்பதாக அவர் கூறினார்.

“இந்த நபர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். மேலும், அவர்களிடமிருந்து லாபம் பெறுவதற்காக அவர்கள் அனுமதிகளை விற்றதாக நாங்கள் செய்திகளைக் கேட்கிறோம்.”

குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அதிகப்படியான பலன்களைக் குறைப்பதற்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும். பொருளாதார நெருக்கடியான நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய சலுகைகளை அனுபவிப்பது பொருத்தமற்றது,” என்று அவர் மேலும் கூறினார்.

தேவையற்ற பலன்களைக் குறைத்து, ஆட்சியில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று கூறி, சலுகைகளைக் குறைப்பதற்கான தனது கட்சியின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான அவரது கட்சியின் வேட்புமனுக்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இம்முறை புதிய இளம் முகங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பாக பெண் வேட்பாளர்களை ஊக்குவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்..

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
Posted in இலங்கை செய்திகள்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கள் குழு கூட்டத்தின் பின்னர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் குணதிலக்க ராஜபக்ஷ ஆகிய இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான முரண்பாடு தொடர்பில்

அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ய கோட்டை பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பெற விரும்புவதாக நேற்று (05) பிற்பகல் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,

பாராளுமன்றத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த திங்கட்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டத்தின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்

மஹிந்தானந்த அளுத்கம, தனது தந்தையை தாக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்சவின் மகன் கோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் நேற்று இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற

குணதிலக்க ராஜபக்ஷ

உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வாக்குமூலத்தின் பின்னர் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் இருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு பெண்ணுக்கு அழைப்பு

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை விமர்சித்து சமூக ஊடகங்களில் வெளியான பதிவு தொடர்பில் பெண் ஒருவர் பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவுக்கு அழைக்கப்படவுள்ளார்.

இலங்கையில் முதன்முறையாக இவ்வாறான நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறையைச் சேர்ந்த லலந்தி பெரேரா என்ற பெண்ணே இவ்வாறு அழைக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (01) அறிவித்துள்ளார்.

குறித்த பெண், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன மற்றும் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் தொடர்பில் கருத்து பதிவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை உறுதிப்படுத்தினார்

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு

அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3,000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.

எனவே, இந்த நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.

மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு

மலையகத்துக்கான முக்கியத்துவமிக்க அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது மக்கள் பிரதிநிதிகளை அரவணைத்துக்கொண்டு, அவர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி செயற்படவே அமைச்சர் ஜீவன் தொண்டமான் எதிர்பார்க்கின்றார். இதற்கான அழைப்பையும் அவர் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் 9 தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சிங்கள தமிழ் மற்றும் முஸ்ஸிம் தேசிய ஒற்றுமைக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக இன்று (24.06) மாலை முன்னெடுக்கப்பட்டது.

வவுனியாவில் கனடா பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஆகியோரின் கொடும்பாவி எரிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ‘பயங்கரவாதம் எங்களுக்கு வேண்டாம் ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள், உங்களுடைய சுதந்திரத்தினை எங்களுக்கு தா, படுகொலை எங்கே நடந்தது?, ஜஸ்டின் ட்ரூடோ இதை கேள் உனக்கு தேவை பயங்கரவாதம், எங்களுடைய நாட்டில் கை போடாதே ஜஸ்டின் ட்ரூடோ’ போன்ற கோசத்தினை எழுப்பியவாறும், ‘இலங்கையின் இறையாண்மைக்கு கைகொடுங்கள், கனடா இனவாதத்தை பற்ற வைக்காதீர்கள் அது குற்றம்’ போன்ற பல்வேறு பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இறுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோரின் உருவ பொம்மைகள் வீதியில் போடப்பட்டு எரிக்கப்பட்டன.

இவ் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் உட்பட தமிழ், முஸ்ஸிம், சிங்கள இனத்தினை சேர்ந்த 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, இலங்கை இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததாக கனடா பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றில் போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றில் போராட்டம்!

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கதை வலியுறுத்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற சபா பிடத்தில் இவ்வாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

கையில் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை

பிரிட்டனில் பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை

பிரிட்டனில் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பி ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் நடந்த பயங்கரம்- பாராளுமன்ற உறுப்பினர் குத்திக்கொலை
பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ்
லண்டன்:

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சர் டேவிட் அமெஸ் (வயது 69) இன்று எஸ்செக்ஸ் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அவரை மர்ம நபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயமடைந்த எம்பி அமெஸ், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக்குழுவினர் எம்பிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

எம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்பி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பிரிட்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட எம்பி சர் டேவிட்டுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தலைவர்களும் ஆறுதல் கூறி உள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமா

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தான் இராஜினாமா செய்வதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய பட்டியல்

உறுப்பினர் ஜயந்த கெட்டகொட அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களுக்கு இன்று (06) எழுத்துமூலம் அறிவித்தார்.

அதற்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்

ஆணைக்குழுவின் தலைவருக்கு எழுத்துமூலம் அறிவிப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஜயந்த கெட்டகொட அவர்கள் 2000 ஆம் ஆண்டில் முதன்முறையாக கொழுப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்துக்கு தெரிவாகியதுடன் பின்னர் அந்தப்

பாராளுமன்றத்தை கலைத்த பின்னர் 2001 இல் மீண்டும் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டார்.

அதனை அடுத்து 2011 ஆம் ஆண்டில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைத்ததுடன், 2020 ஆம் ஆண்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அவர் இராஜினாமா செய்யும் வரை ஆளும்

கட்சியின் பிரதி முதற்கோலாசானாக பதவி வகித்ததுடன் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பொது மனுக்கள் பற்றிய குழு மற்றும் நெடுஞ்சாலை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு என்பவற்றில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

நீதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நியமனம்

நீதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நியமனம்

நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்

பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ சி.சிவமோகன் வாக்களித்தார் – படம் உள்ளே

      வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ சி.சிவமோகன் வாக்களித்தார் – படம் உள்ளே

      இன்று இலங்கையில் இடம்பெறும் ஒன்பதவது பாராளுமன்ற தேர்தல்

      சோகையிழந்து காணப்படுகிறது
      எனினும் மக்கள் தமது கடமைகளை செய்த வண்ணம் உள்ளனர்

      அவ்விதம் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய

      கலாநிதி கௌரவ சி.சிவமோகன் அவர்கள் காலை 7.15 மணிக்கு வாக்களித்தார்

      வன்னி-மாவட்ட-பாராளுமன்ற
      வன்னி-மாவட்ட-பாராளுமன்ற
      Posted in இலங்கை செய்திகள்

      வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக நால்வர் தெரிவு

      வவுனியா மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களாக நால்வர் தெரிவு

      நாடு பூராகவும் நடைபெற்ற இளைஞர் பாராளுமன்ற தேர்தலின் வவுனியா மாவட்ட முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் க.கோகுலன், அ.கொன்சீசியஸ், ப.ராமேஸ்வரன், எச்.பிரியதர்சன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

      நேற்றைய தினம் (22.02) நாடு பூராகவும் இளைஞர் பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெற்றன. அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் வவுனியா, வவுனியா வடக்கு, வெண்கல செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து ஒவ்வொரு இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் 11 பேர் போட்டியிட்டு இருந்தனர்.

      இதில் வவுனியா பிரதேச தேர்தல் தொகுதிதியில் க.கோகுலன் – 359, க.சிம்சுபன் – 139, ஜ.மின்ஹாஜ் – 43, கு.பவேந்திரன் – 15 ஆகியோரும், வெண்கல செட்டிகுளம் தேர்தல் தொகுதியில்
      அ.கொன்சீசியஸ் – 282, கா.கிரிதரன் – 259, மொ.ரிப்நாஸ் – 215 ஆகியோரும், வவுனியா வடக்கு தேர்தல் தொகுதி ப.ராமேஸ்வரன் – 253, யொ.மிதுர்சன் – 128 ஆகியோரும், வவுனியா தெற்கு தேர்தல் தொகுதியில் எச்.பிரியதர்சன் – 133, எஸ்.செனவிரத்ன – 122 ஆகியோரும் போட்டியிட்டு இருந்தனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      மலையக மக்கள் தேர்தல்களில் எடுக்கும் முடிவுகளுக்கு செயல்படுவோம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

      மலையக மக்கள் தேர்தல்களில் எடுக்கும் முடிவுகளுக்கு செயல்படுவோம் பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

      கடந்த ஜனாதிபதி தேர்தலில் மலையக மக்கள் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும் என்று எங்களிடம் வைத்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப செயல்பட்டோம் அந்த தீர்மானம் 100 வீதம் வெற்றி பெற்றிருக்கிறது அடுத்து நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலிலும் மலையக மக்கள் என்ன தீர்மானத்தை எடுக்கின்றார்களோ அதற்கு சார்பாக நாங்கள் செயல்படுவோம் இதுவே மலையக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தீர்மானமாக இருக்கும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சரும் தற்பேதைய பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

      எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான தெளிவுபடுத்தும் கூட்டம் அட்டன் மலையக மக்கள் முன்னணி காரியாலய மண்டபத்தில் நடைபெற்றது இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

      ஒரு சில அரசியல் வாதிகள் மலையக மக்களை கல்வியறிவு இல்லாதவர்கள் என்று கருதுகின்றார்கள் நான் ஒரு விடயத்தை தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன் மலையக மக்கள் சிந்தித்து செயல்படக் கூடியவர்கள் எந்த ஒரு தீர்மானத்தையும் சரியாக எடுக்கக் கூடியவர்கள் வாக்களிப்பதில் தங்களுடைய சின்னத்தை மிகவும் அழகாக தெரிவுசெய்து வாக்களிப்பதில் மலையக மக்கள் அனைத்து தேர்தல்களிலும் சிறப்பாக செயல்பட்டு வந்திருக்கின்றார்கள் இன்று மலையகத்தில் நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் விகிதம் பாரிய அளவில் வீழ்ச்சி அடைந்து இருக்கின்றது எனவே எங்கள் மக்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் அவர்கள் தன் மானத்தைக் காக்க அளிக்கின்ற ஒரு சமூகம் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

      எந்தவொரு வெற்றியும் மக்களின் கைகளிலேயே தங்கி இருக்கின்றது மகாத்மா காந்தி தன்னுடைய போராட்டத்தின்போது மக்கள் எடுத்த தீர்மானத்தின் பின்னால் அவர் சென்ற காரணத்தினால் தான் அந்த போராட்டம் வெற்றி பெற்றது நாங்களும் மக்கள் எடுக்கின்ற தீர்மானத்திற்கு பின்னால் சென்று அந்த தீர்மானத்தை வெற்றி பெறச் செய்வதுதான் எங்களுடைய பொறுப்பாகும் ஒரு நாளும் நாங்கள் அல்லது தலைவர்கள் மக்களை பின்னால் வருமாறு அழைக்காமல் மக்கள் எடுக்கின்ற நல்ல தீர்மானங்களுக்கு பின்னால் தலைவர்கள் சென்றால் நிச்சயமாக அந்த தீர்மானம் வெற்றி அடையும் அதனை கடந்த காலத்தில் நாங்கள் மிகவும் தெளிவாக எங்களுடைய தேர்தல்களில் பார்த்திருக்கின்றோம்.

      மலையக மக்கள் தங்களுடைய சலுகைகளுக்காக அல்லது ஒரு சில அற்ப விடயங்களுக்காக ஒரு பொழுதும் தங்களுடைய வாக்குகளை வழங்க மாட்டார்கள் அவர்கள் தாங்கள் நினைக்கின்ற அல்லது தீர்மானிக்கின்ற தலைவனுக்கு வாக்களிப்பதில் அவர்கள் என்றும் பின் நிற்க மாட்டார்கள்.

      மலையக மக்களுக்கு நன்றாகவே தெரியும் யார் அவர்களுக்காக அவர்களை முன்னேற்றுவதற்காக அரசியலில் ஈடுபடுகின்றார்கள் என்று பொதுவாக இன்று மலையகத்தில் பலர் ஓரங்கட்டப்பட்டு இருக்கின்றார்கள் என்றால் அதற்கு காரணம் கடந்த காலங்களில் அவர்கள் அரசியலில் இருந்த பொழுது இந்த மக்களின் நன்மைக்காக அல்லது இந்த மக்களின் முன்னேற்றத்திற்காக எதனையும் செய்யவில்லை என்பதை எங்களுடைய மக்கள் நன்றாக புரிந்து கொண்டிருக்கின்றார்கள்.

      எல்லோரும் கூறுவது போல மலையக மக்களுடைய பிரச்சினை தனியே சம்பள பிரச்சனைக்கு மாத்திரம் வரையறுத்து விட கூடாது அது தவிர இன்னும் எத்தனையோ தேவைகளும் அபிவிருத்திகளும் எங்களுடைய மக்களுக்கு இருக்கின்றது அந்த அனைத்து விடயங்களிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகின்றோம்.

      ஒரு சமூகத்தின் விடிவு என்பது முழுமையாக கல்வியிலே தங்கியிருக்கின்றது என்பதை நான் மிகவும் தெளிவாக உணர்ந்து இருக்கின்றேன் ஏனென்றால் நானும் தோட்டத்தில் பிறந்து அங்கேயே வளர்ந்து அங்கிருந்து அரசியலுக்கு வந்து இன்று ஒரு அமைச்சராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருக்கின்றேன் என்றால் அதற்கு காரணம் எங்களுடைய மக்கள் என்பதை நான் என்றும் மறந்துவிட மாட்டேன்.

      எனவே இந்த மக்கள் என்னை தெரிவு செய்திருக்கின்றார்கள் நான் கடைசி வரை இந்த மக்களுக்காக என்னை அர்ப்பணித்து சேவை செய்வதே எனது தலையாய கடமையாக கொண்டு இருக்கின்றேன் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எங்களுடைய மக்களுக்காக நான் எந்த ஒரு விட்டுக்கொடுப்பு பையும் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் நாங்கள் அரசியலில் வந்து பணம் சம்பாதித்தவர்கள் அல்ல மாறாக மக்களுடைய சேவையை முழுமையாக கருத்தில் கொண்டு செயற்படுகின்ற ஒரு அரசியல்வாதி என்பதை நான் மிகவும் ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன்.

      எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலிலும் மலையக மக்கள் அவர்களுக்கு யார் என்ன செய்து இருக்கின்றார்கள் என்பதை நன்றாக ஆராய்ந்து அவர்களுக்கு வாக்களித்து அவர்களை தெரிவு செய்ய வேண்டும் இன்று பல்வேறு இடங்களிலும் இந்த கலந்துரையாடல் நடைபெறுகின்றது எனவே மக்களுக்கு சேவை செய்யாத எவராக இருந்தாலும் அவர் ஓரம் கட்டப்படும் வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு கூட எனவே எதிர்வரும் தேர்தல் எங்களுடைய சமூகத்தை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கின்ற ஒரு தேர்தல் அந்த வகையில் நாங்கள் எங்களுடைய அடையாளத்தை அல்லது எங்களுடைய குரலை பாராளுமன்றத்தில் ஒழிக்க வேண்டுமாக இருந்தால் மலையகத்தின் சார்பாக அதிகமான அங்கத்தினர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட வேண்டும் அது எந்த கட்சி என்பதை விட எங்களுடைய சமூகத்தின் குரலாக அது பாராளுமன்றத்தில்ஒழிக்க வேண்டும் என்பதே என்னுடைய எதிர்பார்ப்பாகும் அதனை நிச்சயமாக இந்த மக்கள் சரியாக செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      இளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் – மகிந்தா

      இளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் – மகிந்தா

      இளைய தலைமுறையினர் நாட்டை பொறுப்பேற்க வேண்டிய காலம் எழுந்துள்ளமையால், இளைய புத்திசாலித்தனம் மிகுந்த

      உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டிய காலம் வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

      நேற்று முன்தினம் (2020.08.01) பிற்பகல் காலி மாவட்டம் ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது உரையாற்றிய பிரதமர்,

      நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இளைய தலைமுறையினரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டார்.

      நாட்டின் எதிர்கால பயணத்திற்கு இளைஞர் சமுதாயத்தினர் இம்முறை பொதுத் தேர்தலில் சரியான தெரிவொன்றை

      மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் இன்போது மேலும் தெரிவித்தார்.

      இரண்டாக பிளவடைந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு பதிலாக நாட்டை கட்டியெழுப்பி அபிவிருத்தியை நோக்கிய திட்டமிட்டலுடன் கூடிய பயணத்தை

      முன்னெடுத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்க்குமாறும் பிரதமர் இளைய சமுதாயத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

          எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு
          Posted in இலங்கை செய்திகள்

          எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு

          எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு

          எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு ,திறைசேரி செயலாளர் சிறப்புரிமைக் குழுவின் முன் ஆஜராக அழைக்கப்பட வேண்டும் தயாசிரி

          எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்

          எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர, 2.5 மில்லியன் டாலர் திருட்டு விவகாரத்தை இந்த வாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்க உள்ளார்.

          இதில், திறைசேரி செயலாளர் டாக்டர் ஹர்ஷனா சூரியப்பெருமவை நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் முன் ஆஜராக அழைக்குமாறு அவர் முன்மொழிய உள்ளார்.

          “அரசியலமைப்பின் 148-வது பிரிவின் கீழ், பொது நிதிகள் மீதான அதிகாரம் நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து

          வருவாய்களும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிக்கு வரவு வைக்கப்பட வேண்டும். மேலும், கடன்களைத் தீர்க்கும் பொறுப்பும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியிடமே

          சபையின் ஒப்புதல் இல்லாமல்

          உள்ளது. சபையின் ஒப்புதல் இல்லாமல் இந்த நிதியிலிருந்து நிதியை விடுவிக்க முடியாது. எனவே, 2.5 மில்லியன் டாலர் விடுவிப்பு வழக்கமான நடைமுறைக்கு

          வெளியே செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த விவகாரத்திற்கு திறைசேரி செயலாளரே பொறுப்பாவார்,” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜயசேகர கூறினார்.

          மேலும், கடந்த வாரம் பொது நிதிக் குழுவின் முன் அழைக்கப்பட்டபோது, ​​திறைசேரி செயலாளர் தகவல்களை வெளியிடத் தவறியுள்ளார்.

          தனது செயல்களால், திறைசேரி செயலாளர் பாராளுமன்ற சிறப்புரிமைச் சட்டத்தை மீறியுள்ளார்.

          எனவே, அவர் சிறப்புரிமைகள் குழுவின் முன் அழைக்கப்பட வேண்டும்,” என்று அந்த பாராளுமன்ற உறுப்பினர் மேலும் கூறினார்.

          மேலும், இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஜெயசேகர இந்த வாரம் பாராளுமன்றத்தில் ஒரு சிறப்புரிமைப் பிரச்சினையை எழுப்ப உள்ளார் என டெய்லி மிரர் அறிகிறது.

          பாராளுமன்றத்திற்குள் எம் பிக்களின் பாலியல் போக்கு
          Posted in இலங்கை செய்திகள்

          பாராளுமன்றத்திற்குள் எம் பிக்களின் பாலியல் போக்கு

          பாராளுமன்றத்திற்குள் எம் பிக்களின் பாலியல் போக்கு

          பாராளுமன்றத்திற்குள் எம்.பி.க்களின் பாலியல் போக்கு கள் நுழைகின்றன

          பாலியல் போக்குகள் மற்றும் நடத்தை தொடர்பாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவருக்கொருவர் விமர்சனங்களை முன்வைத்தனர்.

          கல்வி சீர்திருத்தங்கள் குறித்த ஒத்திவைப்பு விவாதத்தின் போது நேற்று சபையில் இது காணப்பட்டது.

          இந்தக் கருத்தை வெளியிட்ட எதிர்க்கட்சி எம்.பி. சுஜீவ சேனசிங்க, தேசிய மக்கள் முன்னணி அரசாங்கத்தைச் சேர்ந்தவர்கள் சில வாழ்க்கை முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆரம்பத்தில் கூறினார்.

          “தேசிய மக்கள் முன்னணி அரசாங்கத்திலும் அதைச் சுற்றியுள்ளவர்களும் சில வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

          சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஓரினச்சேர்க்கை பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார் என்று நான் கருதுகிறேன்,” என்று எம்.பி. கூறினார்.

          “இருப்பினும், பள்ளி குழந்தைகள் சில வாழ்க்கை முறைகளை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படக்கூடாது,” என்று அவர் மேலும் கூறினார்.

          இதற்கு பதிலளித்த அரசாங்க தலைமை கொறடா நளிந்த ஜெயதிஸ்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும்

          ஆறாம் வகுப்பு தொகுதியைப் பார்க்கும் போதெல்லாம் ஓரினச்சேர்க்கை போக்குகளால் தூண்டப்படுகிறார்களா என்று பின்னர் கேள்வி எழுப்பினார்.

          “தொகுதியில் இரண்டு சிறுவர்களின் படம் உள்ளது. இது குழுப்பணியை மட்டுமே பிரதிபலிக்கிறது, ஆனால் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்தப் படத்தைப்

          பார்க்கும்போது ஓரினச்சேர்க்கை போக்குகளால் தூண்டப்படுகிறார்களா என்று ஒருவர் ஆச்சரியப்படுகிறார். வானவில்லின் படமும் உள்ளது.

          இது LGBTQ கொடியைப் பிரதிபலிக்கிறது என்று ஒரு எதிர்க்கட்சி அரசியல்வாதி கூறியுள்ளார். ஓரினச்சேர்க்கை போக்குகளைக் கொண்ட இந்த

          அரசியல்வாதியை வானவில் தூண்டுகிறதா என்றும் ஒருவர் ஆச்சரியப்படுகிறார்,” என்று அவர் கூறினார்.

          “எதிர்க்கட்சி ஆறாம் வகுப்பு குழந்தைகள் ஒரு புதிய உலகத்திற்குள் நுழைவதைத் தடுப்பது போல் தோன்றியது,” என்று அவர் மேலும் கூறினார்.

          பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்
          Posted in இலங்கை செய்திகள்

          பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்

          பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்

          பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள் ,நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, ​​பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள் அல்லது .

          சுகாதாரமற்ற நிலைமைகள்

          சுகாதாரமற்ற நிலைமைகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.

          சேமிப்புப் பகுதிகள் கண்ணாடி மற்றும் வலைகளால் பாதுகாக்கப்பட்டதாகவும், ஊழியர்கள் தொடர்ந்து தூய்மையைப் பராமரித்து வருவதாகவும் சிறிவர்தன கூறினார்.

          உணவின் தரம் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை

          கடந்த 35 ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை என்றும், சபாநாயகரின் கருத்துக்கள்

          ஊழியர்களின் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.

          இருப்பினும், வசதிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் சிறிவர்தன சுட்டிக்காட்டினார். ஏழு அடுப்புகளில் ஆறு அடுப்புகள் செயலிழந்து,

          உபகரணங்கள் உடைந்து, ஓடுகள் தேய்ந்து, வெளியேற்றும் மின்விசிறிகள் செயல்படவில்லை, கழிப்பறைகள் கூட மோசமான நிலையில் இருப்பதை அவர் கவனித்தார்.

          ஊழியர்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்தக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

          பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆய்வில், பாராளுமன்ற உணவகத்தில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தடயங்கள், சேதமடைந்த சமையல் பாத்திரங்கள், உடைந்த தரை மற்றும் மனித நுகர்வுக்கு

          பொருத்தமற்ற உணவு சேர்க்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சமீபத்தில் வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

          பொது சுகாதார ஆய்வாளர்களின் அறிக்கை இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும், ஆனால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு

          பங்கு வாக்கெடுப்பு போன்ற ஒரு முக்கியமான நாளில் உணவு விஷம் ஏற்பட்டால் எம்.பி.க்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்ததாகவும் சபாநாயகர் கூறினார்.

          பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு
          Posted in இலங்கை செய்திகள்

          பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு

          பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு

          பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் தெரிவு ,பத்தாவது பாராளுமன்றத்திற்கான கலைகள் மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண நேற்று (11) தெரிவு செய்யப்பட்டார்.

          ஒன்றியத்தின் முதலாவது கூட்டம் நேற்று (11) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்.

          ஒன்றியத்தின் தலைவராக அவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் ருவான் மாபலகம முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த த சில்வா அதனை வழிமொழிந்தார்.

          அத்துடன், ஒன்றியத்தின் பிரதி இணைத்தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்களான ருவான் மாபலகம, துஷாரி ஜயசிங்க, சுசந்த தொடாவத்த, சுகத் வசந்த த சில்வா மற்றும் நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

          ஒன்றியத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி கூடுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.