வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி
Posted in இலங்கை செய்திகள்

வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி

வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி

வீரபாண்டிக்கு ஆட்டோ வாங்கி கொடுத்த ஜீ தமிழ் டிவி ,ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடத்திக் கொண்டிருக்கும் சரிகமப நிகழ்வில் கலந்துகொண்டு பாடல் பாடி மக்களின் மனங்களில் குடிகொண்டிருக்கின்றார் வீரபாண்டி .

அவர்களுக்கு ஆட்டோ ஒன்று வேண்டி கொடுத்த zeetamil தொலைக்காட்சி இந்த விடயம் தற்பொழுது பார்ப்பவர்களை கண்ணீரில் தங்களை அறியாத கதற வைத்துள்ள காட்சி இடம் பெற்றுள்ளது .

தாயானவர் மிகவும் வறுமை உள்ளாக்கப்பட்ட நிலையில், மலசல கூடம் கழுவி தனது குழந்தையை பார்வையிட்டு வந்தார்.

மிகவும் மோசமான நிலையில், காற்று அடித்தால் உடைந்து விடுகின்ற அந்த வீட்டுக்குள் அவர்கள் தங்கி வாழ்ந்து வருகின்றனர் .

சரிகமபா வீரபாண்டிக்கு ஆட்டோ பரிசு

ஒரு ஆட்டோ ஒன்றை அன்போடு ஒருவர் வாங்கி கொடுத்ததை அடுத்து ,அதனை வாடகைக்கு விட்டு நீங்கள் உழைத்துக் கொள்ளுங்கள் .

வெளிநாடுகளுக்கு சென்று பாட்டு பாடுங்கள் என வீரபாண்டிக்கு சீனிசார் அவர்கள் உத்தரவாதம் அளித்திருந்தார்.

அதனை அடுத்து இப்பொழுது புதிய ஆட்டோவை ,விழுப்புரம் v v r ஆட்டோ டீலர் வாங்கி கொடுத்திருக்கிறார்கள் .

அதனை பாடகி விட்டு அதில் வருகின்ற வருமானத்தின் ஊடாக குடும்பத்தை பார்க்கும் படியும் பாட்டு பாடுவதற்காக சர்வதேச நாடுகளுக்குச் சென்று வருவதற்கு அவரை அழைத்துச் செல்கிறார்கள் .

ஓட்டை குடிசையில் தாயார் மலசலம் கழுவிக் கொண்டிருந்த வேளையில் அவருக்கு யார் உதவுவார்கள் என்ற நிலையில் ,தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சி முதலாவது படியை எடுத்து வைத்து அவரது வாழ்வில் விளக்கேற்றி வைத்துள்ளது .

உதவி என்பது இதுதான் மக்களே. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகள் சென்று சேர வேண்டும் .

அவ்வாறு புலம்பெயர் தேசத்தில் உள்ள பல மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் எத்தனை அரசியல்வாதிகள் எத்தனை கோடிஸ்வரர்கள் எத்தனையோ திரைப்பட நட்சத்திரங்கள் காணப்படுகின்ற பொழுதும்

அவர்களால் செய்ய முடியாத பல வேலைகளை இப்பொழுது சிலர் தனியார் இவ்வாறு செய்து கொண்டு வருவது கண்களை திறந்து பார்க்கின்ற பொழுது கண்ணீரில் எம்ஐ அறியாமல் தண்ணீர் கொட்டுகின்றன.

ஆம் சரிகமப நிகழ்வில் வாய்ப்பு எதிர்பார்த்து வந்த வீரபாண்டிக்கு, இன்று கிடைத்திருக்கின்ற ,இந்த மகிழ்ச்சியான விடயம் ,அவருக்கு மட்டுமில்லை எம்மையும் இன்று குளிர வைக்கின்றது.

சரிகமபா வீரபாண்டிக்கு v v r ஆட்டோ டீலர் வழங்கிய முச்சக்கரவண்டி

இந்த பேர் உதவி வழங்கிய அந்த நல்ல v v r ஆடோ டீலர் உள்ளங்களுக்கு இந்த வேளையில் எதிரி இணையத்தின் சார்பாக நாங்களும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் .

மனிதன் எங்கும் எப்படி இருக்கும் என்பதற்கு இந்த மேடை ஒரு முன்னுதாரணமாக இருக்கின்றது .

அழுதவனின் கண்ணீரை துடைத்து ,அவனுக்கு ஒரு வழிகாட்டுகின்ற ,ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு இந்த வேளையில் எமது நன்றிகள்.

ஜீபி முத்து செய்த சில்மிஷம் கட்டி பிடித்த அழகிகள்
Posted in உலக செய்திகள்

ஜீபி முத்து செய்த சில்மிஷம் கட்டி பிடித்த அழகிகள்

ஜீபி முத்து செய்த சில்மிஷம் கட்டி பிடித்த அழகிகள்

பிக்பாஸ் புகழாக மாறியுள்ள ஜீபி முது அவர்கள் ,தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார் .

அப்பொழுது இரண்டு வெள்ளை கார பொண்ணுக ஜேபி முத்து அவர்கள் காமடி பார்த்து ஐந்தே மேடைக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர் .


இவரது தமிழ் பேச்சை மொழி பெயர்த்து பார்த்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர் .

தவிர மாப்புள்ள கிஸ் அடித்து மகிழ்ந்த்துடன் ,அந்த பொண்ணு தலை முடியை தொட்டு பார்த்து கலாய்த்தார் .

அது மட்டுமா வாக்கிங் , அந்த பொண்ணுக கையை பிடித்த் ,குஷியாக நடந்து போனார் .

இதை பார்த்த பலருக்கு கடுப்பாகிருச்சு .பேப்பர் ஐடி உலக புகழ் நாயகனாக மாற்றம் பெற்று தற்போது ஐந்து படத்தில் நடித்துவருகிறார் என்றால் பாருங்களேன் மக்களே .

ஒரு சாமானியனுக்கு கிடைத்த வெற்றி இதுங்க .

https://www.youtube.com/watch?v=rinLwCVlpsQ
Bigg Boss Tamil ஜீபி முத்து செம கலக்கல் வீடியோ
Posted in உலக செய்திகள்

Bigg Boss Tamil ஜீபி முத்து செம கலக்கல் வீடியோ

Bigg Boss Tamil ஜீபி முத்து செம கலக்கல் வீடியோ

தமிழக தமிழ் தொலைக்காட்சியாக விளங்கி வரும் விஜய் தொலைக் காட்சியில் ,கலந்து சிறப்பிக்கும் நம்ம ஜீபி முத்து அவர்கள், யதார்த்தமாக செயல்படுகிறார் .

இவரது பேச்சை கேட்பதற்கே அதிக தமிழ் மக்கள் தற்பொழுது Bigg Boss Tamil நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர் .

நமது கணிப்பில் நம்மை ஈர்த்தவர்களில் , முதன்மையானவராக ஜீபி முத்து உள்ளார் .

இவர் இந்த விஜய் தொலை காட்சி Bigg Boss Tamil நிகழ்ச்சியில் வெல்ல வேண்டும் என்கின்ற நிலையை தமிழர்கள் அல்லது ரசிகர்கள் எதிர் பார்க்கவில்லை .

மாறாக ஜீபி முத்து இயல்பு நடைமுறை வாழ்வியல் மற்றும் பேச்சு வழக்கு எவ்விதம் உள்ளது என்பதையே, மக்கள் கவனத்தில் கொண்டு ,கண்காணித்து பார்த்து ரசித்து வருகின்றனர் .

இந்த விஜய் தொலை காட்சி Bigg Boss Tamil நிகழ்ச்சி முடிவுற்ற பின்னர் ,அதிக மக்களின் தலைவனாக ஜீபி முத்து அவர்கள் விளங்குவர் என்பது , ஜீபி முத்து youtube சனலை பார்க்கும் பொழுதுஅவதானிக்க முடிகிறது .

Bigg Boss Tamil ஜீபி முத்து செம கலக்கல் வீடியோ

நான்கு மொழிகளில் youtube சனல் ஆரம்பித்து கலக்கும் , தமிழர் அல்லாத தமிழ் கேப்சும் நபராக ஜீபி முத்து உள்ளார் .

தமிழகத்தில் பிறமொழியாளர்களை அதிகம் வளர்த்து விடுவதில் ,தொலைக்காட்சிகள் ஊடகங்கள் முன்னிலை வகிக்கின்றன .

அவ்விதம் தமிழர்களை பிற மொழிகளில் உள்ள ஊடகங்கள் இவ்விதம் வளர்த்து விடுவதில்லை .பிறமொழி ஊடகங்கள் முன்னிலை வகிக்கவில்லை என்பது தன் கவலையான விடயம் .

எனினும் நம்ம பேப்பர் ஐடி புகழ் தலைவர் ஜீபி முத்து அவர்கள் நடவடிக்கைகள் பார்த்து ரசிக்கும்படியாக உள்ளது .அவ்விதம் இந்த Bigg Boss Tamil நிகழ்ச்சியில் காணப்படுகிறது .

இலங்கை தமிழ் பெண் விரைவில் வீட்டை விட்டு வெளியேற்ற படுவார் என்பதை நிகழ்கால விடயங்கள் கட்டியம் இடுகின்றன .

இலங்கையர்களை கேவலக பார்க்கும் நிலையிலேயே விஜய் தொலைக்காட்சி உள்ளது என்பது, கடந்த கால விஜய் தொலைக்காட்சி நிகழ்வுகள் காண்பித்துள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது .

ஜீபி முத்து மற்றும் இலங்கை தமிழ் பெண் ஜனனி நிகழ்வுகள் ,எதுவரை செல்லும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே .

https://www.youtube.com/watch?v=EZSR5j4GeiQ
சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
Posted in இலங்கை செய்திகள்

சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்

சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்

சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன் ,ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் இலங்கை வத்தளையை சேர்ந்த விஜய் லோசன் பாடல் பாடி அசத்தியுள்ளார் .

விஜய் லோசன் முதல் பாடல்

விஜய் லோசன் முதல் பாடல் அவள் உலக அழகியே என்ற பாடலை பாடியிருக்கிறார் .அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் தனது போட்டியை ஆரம்பித்துள்ளார் .

ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் ,இலங்கையில் இருந்து மூவர் கலந்து கொண்டுள்ளனர் .

பதுளையை சேர்ந்த இந்திரஜித்

அதில் மலையகம் பதுளையை சேர்ந்த இந்திரஜித் ,சுவிஸ் நாட்டை சேர்ந்த சாரங்கா ,ஆகிய மூவரும் கலந்து சிறப்பித்து வருகின்ற்னர் .

கில்மிசா ,அசானி கலந்து கொண்டு அசத்தி சாதனை நிலை நாட்டிய பின்னர் ,தற்போது இவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வு மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .

தமிழகம் ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா

எமது இலங்கையை சேர்ந்தவர்களுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா அங்கிகாரம் வழங்கி கவுரவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கனவுகளை சுமந்து இந்த சரிகமபா நிகழ்வில் கலந்து கொண்டு பாடும் இந்த பாடும் குயில்கள் வெற்றி பெறவேண்டும் .

முதலாவது இடத்தை தட்டி பறிக்க வேண்டும் என்பது நோக்கல்ல ,இந்த சரிகமபா மேடையில் ஏறிவிட்டாலே அதுவே பெருமை என்பதே இன்றைய நிலையாக உள்ளது .

ஈழ தமிழர்கள்

அதற்காக உலகம் தழுவிய ஈழ தமிழர்கள் ,தமிழக தொலைக்காட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் .

அவ்விதம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்வில் விஜய் லோஷன் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் .

இலங்கை வத்தளை மக்களுக்கு சரிகமபா பாட்டு அரங்கின் ஊடக, விஜய் லோசன் பெருமை தேடி தருவார் என மக்கள் எதிர் பார்க்கின்றனர் .

மிகவும் இறுக்கமான இந்த போட்டி , இலங்கை வாலிபர்கள் நின்று தாக்கு பிடித்து வெல்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது .

இந்த சரிகமபா நிகழ்வில் ,போட்டி கொண்ட திறமை சாலிகள் மோதி கொள்ள போகின்றனர் என்பதே போட்டியாளர்களை பார்க்கும் பொழுது தெரிகிறது .

full video

சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்
Posted in இலங்கை செய்திகள்

சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்


சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்

இந்தியா தமிழக தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலை காட்சியில் இடம்பெறும் சரிகமபாவில் பாடும் மலையக வாலிபன்.

இலங்கை மலையகத்தில் இருந்த இந்திரஜித் எனும் மலையக வம்சாவளியான தமிழ் வாலிபன் இந்திரஜித் ஜீ தமிழ் தொலைக்காட்சி பாடல் போட்டியில் பாடுகிறார் .

சரிகமபாவில் பாடும் இந்திரஜித்துக்கு உலக தமிழர்கள் பாராட்டையும் வாழ்த்தினையும் தெரிவித்து வருகின்றனர் .

சரிகமபா இந்திரஜித் யார்

பண்டாரவளை பூனாகலை கபரகலையூரை சேர்ந்தவர் தான் இந்த சரிகமபா வில் பாடும் இந்திரஜித்.


ஜீ தமிழ் தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில்
தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி அசத்தியுள்ளார் இந்திரஜித் .


தனது ஆளுமை திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் ,வியப்படைய செய்து அசத்தி இருக்கிறார் சரிகமபா இந்திரஜித்

பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா ..?

இந்த சரிகமபா பாட்டு போட்டியில் இந்திரஜித் வெல்வாரா என்ற கேள்வி எழுப்ப படுகிறது .

கண்டிப்பாக அவர் வெற்றி பெறாவிட்டாலும் ,இறுதி வரை நிகழ்ச்சியில் , ஜீ தமிழ் தொலை காட்சி பாடுவதற்கு அனுமதி வழங்கும் , அப்பொழுது தான் ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வை இலங்கை மக்கள் பார்வையிடுவார்கள் .

ஏதாவது சாட்டு போக்கு சொல்லி இறுதி நிகழ்வுகளில் ,சரிகமபாவில் இருந்து இந்திரஜித் தட்டி கழிக்கப்படலாம் .

அதுவரை சரிகமபா நிகழ்வில் இந்திரஜித்தை ஜீ தமிழ் தொலைக்காட்சி வைத்திருக்கும் என்பதை இப்போதே அடித்து கூறுகிறோம் .

வீடியோ

அருளினி பாட்டால் அழுத மக்கள்
Posted in YouTube Tamil News அசானி asani saregamapa songs இலங்கை செய்திகள்

அருளினி பாட்டால் அழுத மக்கள்

அருளினி பாட்டால் அழுத மக்கள்

சரிகமபாவில் மலேசியா பெண், அருளினி பாட்டால் அழுத மக்கள்.
சீனியர் சரிகமபா பாட்டு மன்றத்தில் பாடி அசத்திய மலேசியா குயில் அருளினி .


சரிகமபா நடுவர்கள் அந்த அரங்கில் குழுமி இருந்த மக்கள் யாவரும் ,அருளினியின் சிரிப்பில் மயங்கினர் .அருளினியின் கொஞ்சு தமிழும் ,வெளிப்படை தன்மையான பேச்சும் யாவரையும் கவர்ந்துள்ளது .

ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ,சரிகமபா நிகழ்வில் மலேசியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் பெண்ணாக அருளினி காணப்படுகிறார் .

ஆட்டிசத்தால் பாதிக்க பட்ட அருளினி

ஆட்டிசத்தால் அருளினி பாதிக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்த பொழுது, அங்கிருந்த மக்கள் யாவரும் கலங்கி போயினர் .தன்னை வாழவைத்து வருவது இந்த இசை தான் ,என அவர் தெரிவித்தார் . .

இந்த மேடையில் முதன் முதலாக அலேக்கா அலேக்கா என்கின்ற பாடலை பாடினார் ,அப்பொழுது நடுவர்கள் மற்றும் அந்த அரங்கமே எழுந்து நின்று அவரை வாழ்த்தியது .

மதுர குரலை தன்னகத்தே வைத்துள்ளார் ,மேல் சுருதியில் அருளினி பாடலை பாடிய பொழுது நடுவர்களே வியந்து, தம்மை மறந்து கைகளை தட்டி வாழ்த்தினர் .

அவ்வாறான சிறப்பு தகமை கொண்ட அருளினியின், சரிகமபா பயணம் புதிய அனுபவத்தை கற்று கொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

நான் வெற்றி பெறுவேனோ இல்லையோ என்பது முக்கியம் அல்ல . இறுதிவரை நிகழ்வில் பாட வேண்டும் என்பது எனது ஆசை என ,அவர் உண்மையை உரக்க கூறி இருந்தது ,அவரது வெளிப்படை தன்மையான பேச்சை காட்டியுள்ளது .

வெல்லுங்கள் அருளினி ,கலங்காது நடை போடுங்கள் ,உங்களோடு உலக தமிழர்கள் இருக்கிறோம் .

இவ்வாறானவர்களை இணைத்த ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள் பாராட்டுக்கள் .

வீடியோ

சரிகமபாவில் பாடும் பாடகர் இந்திரஜித்
Posted in இலங்கை செய்திகள்

சரிகமபாவில் பாடும் பாடகர் இந்திரஜித்

சரிகமபாவில் பாடும் பாடகர் இந்திரஜித்

இந்தியா தமிழக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபாவில் பாடும் பாடகர் ,இந்திரஜித் அப்பா தம்பி அழகிய குடும்பம் இவங்க தான் .

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபாவில் பாடும் பாடகரான இந்திரஜித் பதுளை இலங்கையை சேர்ந்தவர் ,.

ஜீ தமிழ் தொலை காட்சியில் இந்திரஜித் பாடல் பாடுகிறார் ,சரிகமபா பாட்டு போட்டியில் ,போட்டியாளராக கலந்து சிறப்பாக அசத்தி கொண்டுள்ளார் .

மதுரக்குரலில் சரிகமாபாவில் பாடி அசத்தும் இந்திரஜித்

அழகிய மதுரக்குரலில் சரிகமாபாவில் பாடி அசத்தும் இந்திரஜித்தின் அப்பா, தம்பி ,இந்திரஜித் தொடர்பாக நெகிழ்ந்து பேசி உள்ளார்கள் .

இந்திரஜித்துக்கு மூன்று சகோதரர்கள் ,இந்திரஜித் அவர்கள் குடும்பத்தில் இரண்டாவது மகனாவார் .

வீட்டு சுமைகளை வேலைக்கு சென்று சுமந்தவராம் .அதானல் கல்வியை இடையில் விட்டு சுமையை சுமந்தவன் இன்று ,அப்பாவின் பாடல் ஆசையை நிறைவேற்ற களம் புகுந்துள்ளார் .

இலங்கை மலையகத்தை சேர்ந்த வாலிபன் இந்திரஜித்

இலங்கை மலையகத்தை சேர்ந்த வாலிபன் இந்திரஜித் ,மலையக மைந்தன் ,இந்திரஜித் சரிகமபாவில் பாடி கொண்டு இருக்கிறார் என மக்கள் இந்திரஜித்தை கொண்டாடிய வண்ணம் உள்ளனர் .

பாட பாடா இந்திரஜித்துக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் குவிகிறது .

சரிகமபாவில் முதல் பாடல் பாடி இந்திரஜித் அசத்தி உள்ளார் ,மதுர குரலின் மலையக மைந்தன் ,வலி கடந்து வந்த பாதையில் பயணிக்கும் இலங்கை பாடகன் இந்திரஜித் வெற்றி பெற நாமும் வாழ்த்துகிறோம் .

மலையகத்தை சேர்ந்த அசானி சரிகமபாவில் திறனோடு பாடி அசத்தி இருந்தார் .

ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதல் அசானிக்கு உலகளாவிய ரீதியில் மக்கள் ஆதரவு கிட்டியது .

அவருக்கு பல லட்சக்கணக்கான பணமும் சரிகமபா நிகழ்வின் பின் திரட்ட பட்டது .

அவ்வாறான நிலையில் மீளவும் மலையக பாடகன் மதுர குரலவன் இந்திரஜித் ,சரிகமபாவில் பாடி அசத்த ஆரம்பித்துள்ளார் .

திறமைக்கு வறுமை ஒரு தடையாக உள்ளதை இந்த நிகழ்வுகளில் இருந்தும் ,இவர்கள் பேச்சில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது .

உள்ளத்தின் வழிகளை இறக்கி வைத்து மகிழ்வோடு சரிகமபா அரங்கை ,ஆட்கொள்ளும் மலையக மைந்தனுக்கு மீளவும் எமது .வாழ்த்துக்கள்

வீடியோ

ஈழபெண் சரிகமபா பட்டு போட்டியில்
Posted in இலங்கை செய்திகள்

ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்

ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்


ஈழபெண் சரிகமபா பாட்டு போட்டியில்,சாரங்கா பாட்டால் அலறிய சரிகமபா,Saregamapa சாரங்கா,zeetamil saranga

சுவிஸ் ஈழபெண் சரிகமபா பாடல் போட்டியில் கலந்து கலக்கல் .
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சுவிஸ் நாட்டை சேர்ந்த சாரங்கா வரதராஜன் பாடி அசத்தினார் .

சாரங்கா பாட்டால் அலறிய சரிகமபா நிகழ்வு ,இனிமையான குரலில் அவர் பாடிய அந்த பாடல் மக்களை அசரவைத்தது .

Saregamapa சாரங்கா பாட்டை தொடர்ந்து பார்த்து மகிழ மக்கள் பெரும் ஆவலாக உள்ளனர் .

சாரங்கா பாட்டால் அலறிய சரிகமபா

சாரங்கா பாடால் தெரிவில் அவருக்கு பச்சை விளக்கு ஒளிர நடுவர் ஒருவர் அனுமதி வழங்கவில்லை .

அதனை அடுத்து அவர் காத்திருப்பில் வைக்க பட்டுள்ளார் .ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்வில் சாரங்கா கலந்துள்ளதால் ,ஈழ தமிழர்கள் மத்தியில் மிக பெரும் பரபரப்பை இந்த சரிகமபா நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது .

zee tamil சரிகமாபாவில் இம்முறை ஈழ தமிழர்கள் வெற்றி கொடி காட்டுவார்களா ,அல்லது ஏமாற்ற படுவார்களா பொறுத்திருந்து பார்ப்போம் மக்களே .

full video

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா
Posted in இலங்கை செய்திகள் கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் கில்மிஷாவை வரவேற்பதற்காக பெருமளவான மக்கள் வீதிகளில் திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

தமிழ் கலாசார பாராம்பரிய நடனங்கள் ஆடப்பட்டு, முத்து சப்பரத்தில் கில்மிஷாவை ஏற்றி ஊர் மக்கள் தூக்கி சென்றனர்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து திறந்த காரில் புறப்பட்ட கில்மிஷா வுக்கு வீதியெங்கும் மக்கள் மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.

கில்மிஷாவை வரவேற்ற யாழ் மக்கள்- இது கில்மிசாவா

அரியாலை ஶ்ரீ கலைமகள் சனசமூக நிலைய முன்றலில் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது. சாரங்கா இசைக்குழுவினரின் இசையில் கில்மிஷா சில பாடல்களையும் பாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய தொலைக்காட்சி ஜீ தமிழ் நடாத்திய சரிகமப லிட்டில் சம்பியன் பாடல் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணத்தில் இருந்து கலந்து கொண்ட கில்மிஷா வெற்றியாளராக தெரிவாகியிருந்தார்

வீடியோ

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

கில்மிஷாவை வாழ்த்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற தமிழ் சிறுமி கில்மிஷாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் .

இன்று காலை அமைச்சரவை கூட்டம் முடிவுற்ற பின்னர் அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

எல்லாம் அரசியல் நாடகமாக இருக்குமோ என தமிழர்கள் பேசி கொள்கின்றனர் .

வீடியோ

புயலை கிளப்பிய அசானி பாடல்| தூக்கிய ஆடிய அர்ச்சனா|asaani song|ZeeTamil| asani saregamapa songs
Posted in அசானி asani saregamapa songs

புயலை கிளப்பிய அசானி பாடல்| தூக்கிய ஆடிய அர்ச்சனா|asaani song|ZeeTamil| asani saregamapa songs

புயலை கிளப்பிய அசானி பாடல்| தூக்கிய ஆடிய அர்ச்சனா|asaani song|ZeeTamil| asani saregamapa songs


புயலை கிளப்பிய அசானி பாடிய பாட்டால் ஆடிய மேடை .ஆட்டமா தேர் ஓட்டமா எனும் பாடல் சரிகமப நிகழ்வில் அசானி அவர்கள் தூக்கலாக பாடி அசத்தினார் .

இவரது பாடல் கேட்டு ஒட்டு மொத்த சரிகமப அரங்கமே எழுந்தும் ஆடியது ,பார்க்கும் பொழுது நம்மையும் அந்த நிகழ்வுகள் எழுந்து ஆட வைத்தன .

வழமைக்கு மாறாக அசானி புயல் போல அசானி பின்னி பிடரி எடுத்தாங்க .

இந்த பாட்டுக்கு மன்சூர் அலிகான் அவர்கள் விஜயகாந்த் அவர்களுடன் சேர்ந்தும் நடித்திருப்பார் .

துப்பு துலக்கும் காட்சியாக அது அமைய பெற்றுருந்தது .

புயலை கிளப்பிய அசானி பாடல்| தூக்கிய ஆடிய அர்ச்சனா|asaani song|ZeeTamil asani saregamapa songs

படத்தில் காண்பிக்க பட்ட துப்பு துலக்கல் இங்கே தூக்கலாக வீழ்ந்து வெடித்துள்ளது .

ஜீ தமிழ் தொலை காட்சி மேடையின் தொகுப்பாளினி அர்ச்சனா அவர்கள் அசானியை தூக்கி ஆடியுள்ளார் .

நடுவர்கள் சீனி சார் அபிராமி மற்றும் பாட்டு குயில் ஆகிய நடுவர்கள் சிறந்த பெறுபேறுகளை வியந்து தெரிவித்தனர் .

மேலும் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் இளம் புயல் ஜெயம் ரவி அவர்களும் வாழ்த்தி அசத்தினார் .

சற்றும் எதிர் பார்க்காத இந்த நிகழ்வு ,ஈழ தமிழ் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஜீ தமிழ் தொலைக்காட்சி அசானியை வீட்டுக்கு அனுப்பிவிடும் என ஏக்கத்துடன் பார்த்த மக்களுக்கு ,தாக்கத்தை தள்ளி வைத்து ,உங்களுடன் நாங்கள் .

,உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கின்றோம் என ஜீதமிழ் தொலைக்காட்சி மகுடம் சூட்டியுள்ளது .

இலங்கை தமிழர்கள் சார்பில் நாம் நன்றிகளை ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தெரிவித்து கொள்கின்றோம் .

கண்டி சின்ன குயில் அசானி உன்னால் மக்கள் மனங்கள் மகிழ்ச்சியில் குளித்துள்ளது .தொடர்ந்து அசத்துமா என்ற கொட்டு முழக்கம் எங்கும் ஒலிக்கிறது .

வாழ்த்துக்கள் தாயே வளர்க்க ,தொடர்க பயின்று வா ,படை உன்பின்னால் திரளும் .

உலக தமிழ் கைகொடுக்கும் மறக்காதே ,விழி நீர் துடைத்து விரைந்து எழு ,தடை தாண்டி முன்னேறு ,என்றும் தமிழ் உஙக்ளுடன் அசானி.

full video

நிகழ்வும் யாவும் பார்க்க இதில் அழுத்துங்கள்

https://www.youtube.com/watch?v=RGr29rfREp0&t=42s
கில்மிசாவுக்கு வாய்ப்பு முழங்கிய நடிகர் ஜெயம் ரவி |கில்மிசா செந்தூரா பாடல்|kilmisha saregamapa songs|kilmisha songs
Posted in அசானி asani saregamapa songs கில்மிசா பாடல் kilmisha zee tamil

கில்மிசாவுக்கு வாய்ப்பு முழங்கிய நடிகர் ஜெயம் ரவி |கில்மிசா செந்தூரா பாடல்|kilmisha saregamapa songs|kilmisha songs

கில்மிசாவுக்கு வாய்ப்பு முழங்கிய நடிகர் ஜெயம் ரவி |கில்மிசா செந்தூரா பாடல்|kilmisha saregamapa songs|kilmisha songs

ஈழ குயில் கில்மிசா இவ்வாரம் பாடிய செந்தூரா செந்தூரா என்ற பாடல் ,
கோல்டன் விருது பெற்று சாதனை படைத்துள்ளது .


ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா நிகழ்வில் ,இவ்வாரம் கலக்கிய கில்மிசா செந்தூரா செந்தூரா பாட்டு ஆடிய ஆறங்கம் .

செந்தூரா பாடலை கேட்டு அப்படி புகழ்ந்து தள்ளியுளளார் நடிகர் ஜெயம் ரவி,சினிமவனுக்குள் நுழையும் தகுதியை ஈழ குயில் கில்மிஷா பெற்றுள்ளதாக அவரது பேச்சின் வாயிலாக தெள்ள தெளிவாக தெரிகிறது .

சிறுமியாக விளங்கும் கில்மிசாவுக்கு உள்ள திறனை கண்டு ,மக்கள் மன்றம் வியப்பில் உறைந்துள்ளது ,ஈழ குயில் கில்மிசா ஈழ தமிழர்கள் அடையாளமாக உலக அரங்கத்தில் மாறியுள்ளமை குறிப்பிப்பிட தக்கது .


kilmisha interview,
zee tamil saregamapa season 3 today full episode,
கில்மிசா zee tamil,கில்மிஷா பாடல்கள்,kilmisha saregamapa,

அசானியை பாராட்டிய ஜெயம் ரவி|அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா|asaani song|ZeeTamil asani saregamapa songs|Jayam Ravi
Posted in அசானி asani saregamapa songs

அசானியை பாராட்டிய ஜெயம் ரவி|அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா|asaani song|ZeeTamil asani saregamapa songs|Jayam Ravi

அசானியை பாராட்டிய ஜெயம் ரவி|அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா|asaani song|ZeeTamil asani saregamapa songs|Jayam Ravi

அசானியை பாராட்டிய நடிகர் ஜெயம் ரவி,பாராட்டு மலையில் நனைந்த அசானி.ஆடிய அரங்கம் ,கொட்டிய கரகோஷம் ,மகிழ்ச்சி கடலில் உலக தமிழர்கள் .

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா பாடல் கேட்டு நடிகர் ஜெயம் ரவி பாராட்டில் அன்பு மழையில் குளித்த அசானி.

சரிகமபா பாட்டு மன்ற நிகழ்வில் , இவ்வாரம் அசானி பாடிய ஆட்டமா தேரோட்டமா பாடல்சூப்பர் ஹிட்டாக உள்ளது .

Posted in Uncategorized

பிரபாகரன் மகன் கொலை- அதிர்ந்த பாரளுமன்றம்- சீறிய ஸ்ரீதரன் எம்பி

பிரபாகரன் மகன் கொலை- அதிர்ந்த பாரளுமன்றம்- சீறிய ஸ்ரீதரன் எம்பி

அரசின் கோர முகத்தை அம்பலப்படுத்தி நிற்கும் சிறுவர் படுகொலைகள்: சிறீதரன் எம்.பியின் பேச்சால் நாடளுமன்றில் கூச்சல் குழப்பம்!

கடந்த வெள்ளிக்கிழமை, ஒக்ரோபர்.01 ஆம் திகதி சர்வதேச சிறுவர் தினமான அன்றைய நாள், இலங்கை அரசால் கோரமாகப் படுகொலை செய்யப்பட்ட, விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் செல்வன்.பிரபாகரன் பாலச்சந்திரன் அவர்களது 25 ஆவது அகவை நாளாகும்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் கொத்துக்கொத்தாகத் தமிழர்களைக் கொன்றொழித்த இனவாத அரசின் கோர முகத்தை இந்த உலகுக்கு எண்பித்த ஆகப்பெரும் போர்க்குற்றச் சாட்சியமாய் இசைப்பிரியாவின் இறுதிக் கணங்களும், பாலச்சந்திரனின் படுகொலையும் அமைந்திருந்தது.

சுற்றிவர மண்மூட்டைகளால் சூழப்பட்ட ஓர் மரப்பலகையில், கையில் ஒரு பிஸ்கட் பக்கற்றும், கையருகே ஓர் நீர்க்குவளையுமாக, எந்தச் சலனமுமற்று எதையோ வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்த பன்னிரு வயதுப் பாலகன் பாலச்சந்திரனின் புகைப்படத்தையும், அதே

பாலச்சந்திரன் மேலாடையற்ற மார்பில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் துளைத்த அடையாளத்தோடு, உயிர்பிரிந்த நிலையில் தரையில்க் கிடந்த புகைப்படத்தையும் சனல்.4 தொலைக்காட்சி வெளியிட்ட அந்தக் கணங்கள், உலகப் பரப்பெங்கும் வாழும் இதயமுள்ள ஒவ்வொரு மனிதர்களையும் இனம், மொழி, மதம் கடந்து இரத்தக் கண்ணீர் வடிக்கச் செய்திருந்தது.

தமிழீழத் தேசியத் தலைவராக, தமிழர்கள் தம் நெஞ்சில் வைத்துப் பூசித்த வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளையமகன் என்ற ஒற்றைக் காரணமே, பன்னிரண்டு வயதுப் பாலகனான பாலச்சந்திரனை கோரமாகப் படுகொலைசெய்த இந்த இனவெறி அரசின்

உயிர்ப்பலிப் பசிக்குப் போதுமானதாக இருந்தது. காலம்காலமாக ஆட்சிக்குவந்த அத்தனை சிங்கள அதிகார பீடங்களும் தமிழர்கள் மீதான அதிகபட்ச அதிகார வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தாலும், தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்புச் செயலராகவும்,

தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவும் இருந்த அப்போதைய ஆட்சிக் காலத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் வைத்து ஈழத்தமிழர்கள் மீது இரக்கமற்று நடத்தப்பட்ட

இன அழிப்பிற்கு ஏற்றுக்கொள்ளத்தக்க சாட்சியங்களுள் ஒன்றாய் அமைந்த பாலச்சந்திரனின் சாவு, ஒட்டுமொத்த தமிழர்களின் இதய ஓரங்களிலும் இன்னமும் ரணமாய் வலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

1990 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி, ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் தொடர்பிலான பிரகடனத்தை ஏற்று, 1991 ஆம் ஆண்டு இலங்கை அதில்

கைச்சாத்திட்டுள்ள போதும், இந்த நாட்டில் தமிழ்ச் சிறுவர்களுக்கான அடிப்படை உரிமைகள் என்ற சொற்பிரயோகத்துக்கு எந்த அவசியமுமற்று, அவர்களுக்கான உயிர்வாழும் உரிமை கூட பௌத்த சிங்கள பேரினவாதிகளால் வலிந்து பறிக்கப்பட்டு வருவதை இவ்விடத்திலே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இறுதிப்போரின் போது கொல்லப்பட்ட எண்ணுக்கணக்கற்ற சிறுவர்கள், ஆவணப்படுத்தப்படாத படுகொலைச் சம்பவங்கள், கணக்கிடப்படாத இழப்புக்களைக் கொண்ட படுகொலைகள் நீங்கலாக 1974 ஜனவரி 10 தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலை முதல் 2008 டிசம்பர் 20

வட்டக்கச்சி குண்டுவெடிப்பு வரையான, ஆவணப்படுத்தப்பட்ட 95 படுகொலைச் சம்பவங்களில் மட்டும் கைக் குழந்தைகள் தொடக்கம் 18 வயது வரையான 1929 இற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக வடக்கு, கிழக்கு மனித உரிமைகள் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றுள் மிக முக்கியமாக நவாலிப் படுகொலை உள்ளிட்ட, அரச படைகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலைவெறித் தாக்குதல் சம்பவங்களைக் குறிப்பிடலாம். 1995 ஜீலை 9, பலாலி மற்றும் அளவெட்டிப் பகுதிகளில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர்த்

தாக்குதல்களால் நிலைகுலைந்து, உடுத்த உடைகளுடன் உயிரைக் கையில்பிடித்தபடி, நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள்,

வயோதிபர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் மீது புக்காரா விமானங்கள் ஈவிரக்கமின்றி வீசிச் சென்ற 13 குண்டுகளால், 147 பேர் கொல்லப்பட்டதோடு, 360 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்திருந்தனர். இதன்போது கொல்லப்பட்டவர்களுள் 46 சிறுவர்களும் உள்ளடங்குகின்றனர்.

1995 செம்ரெம்பர் 22 யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 6 தொடக்கம் 16 வயதுக்குட்பட்ட 21 மாணவர்கள் உடல் சிதறிப் பலியாகியிருந்தார்கள்.

1996 செப்ரெம்பர் 7 ஆம் திகதி, யாஃசுண்டுக்குழி மகளிர் கல்லூரி மாணவியான செல்வி.கிருஷாந்தி குமாரசாமி அவர்கள், செம்மணி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதோடு, அவரைத் தேடிச்சென்ற

தாயார் திருமதி.இராசம்மா குமாரசாமி, அயலவர் திரு.கிருபாமூர்த்தி, சகோதரன் செல்வன் குமாரசாமி பிரணவன் ஆகியோரையும் இராணுவத்தினர் படுகொலை செய்து செம்மணி வயல் வெளியில் புதைத்திருந்தனர்.

அக்காலப்பகுதியில் இராணுவத்தினரால் கடத்தப்பட்ட, காணாமலாக்கப்பட்ட 600 இற்கும் அதிகமான யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் அதே செம்மணி வயல் வெளியில் புதைக்கப்பட்டமையும் இந்த நாட்டில் நடைபெற்ற படுகொலைகளுக்கான சாட்சியங்களே!.

2006 ஓகஸ்ட் 14, முல்லைத்தீவு, வள்ளிபுனத்தில் சிறுவர் இல்லம், நலன்புரி நிலையம், குடியிருப்புக்கள் என்பன அமைந்திருந்த பகுதியில், அதிலும் குறிப்பாக அநாதரவான குழந்தைகளின் காப்பகமான செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தை இலக்குவைத்து, மிகப்

பயங்கரமாக 16 தடவைகள் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டுவீச்சில் பாடசாலை மாணவிகள், செஞசோலைச் சிறுவர் இல்லச் சிறுமிகள் உள்ளிட்ட 17 – 19 வயதிற்கு இடைப்பட்ட 61 பேர்

கோரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்ததோடு, 120 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்திருந்தனர்.

2007 கார்த்திகை 27, தமிழ்த் தேசிய மாவீரர் தினமான அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயங்கன்குளம் பகுதியில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஆறு மாணவர்கள் கொல்லப்பட்டிருந்தனர்.

குழந்தைகள், சிறுவர்கள் என்ற எந்த பேதமுமற்று, அடிப்படை மனிதநேயச் சிந்தனைகூட இல்லாது, சர்வதேச நியமங்கள் அனைத்தையும் மீறி, தமிழர்கள் என்ற இனவெறிச் சிந்தனையின்

வெளிப்பாட்டால், பௌத்த, சிங்கள பேரினவாதத்தால் படுகொலைசெய்யப்பட்ட பாலச்சந்திரன் உள்ளிட்ட அத்தனை சிறுவர்களையும் நான் இந்த இடத்தில் நினைவுகூருகிறேன்.

இதற்கு அப்பால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் போரின் இறுதிக் கணங்களில், படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து பல சிறுவர்கள், அதிலும் குறிப்பாக விடுதலைப்புலிகளின் முதல்நிலை உறுப்பினர்கள் பலரது பிள்ளைகள் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

எம்மால் சேகரிக்க முடிந்த தகவல்களின் அடிப்படையில்

  1. விடுதலைப்புலிகளின் அரசியல்துறை அறிக்கைப் பொறுப்பாளர் அம்பி அவர்களின் குழந்தைகள் பிரியாளினி பரமேஸ்வரன், பிரதீபன் பரமேஸ்வரன், பிறையாளன் பரமேஸ்வரன்,
  2. மணலாறு தாக்குதல் படையணியைச் சேர்ந்த இளங்குமரன் அவர்களின் மகள் அறிவுமதி,
  3. யாழ் மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் இளம்பரிதி அவர்களின் பிள்ளைகளான தமிழொளி மகாலிங்கம், எழிலினி மகாலிங்கம், மகிழினி மகாலிங்கம்,
  4. கலை மாஸ்டரின் மகள்மாரான கானிலா திருச்செல்வம், லக்சாயினி திருச்செல்வம்,
  5. மணலாறு தளபதி மஜீத் அவர்களின் பிள்ளைகளான சாருஜன் முரளிதரன், அபிதா முரளிதரன்,
  6. அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகன் ஜனகன் மகேந்திரன்,
  7. நிர்வாகசேவைப் பொறுப்பாளர் பிரியன் அவர்களின் ஒரு வயதேயான மகள் கலைச்சுடர் தயாசிறீ,
  8. விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் ராஜா அவர்களின் மகன்மாரான சாருஜன் கிருஸ்ணமூர்த்தி, நிகநிலான் கிருஸ்ணமூர்த்தி, ஆதிரையன் கிருஸ்ணமூர்த்தி,
  9. வனவளத்துறைப் பொறுப்பாளர் சக்தி அவர்களின் பிள்ளைகளான தமிழின்பன் சத்தியமூர்த்தி, தமிழ்முகிலன் சத்தியமூர்த்தி, இசைநிலா சத்தியமூர்த்தி,
  10. சுடர் அவர்களின் குழந்தைகளான அபிராமி சுரேஸ்குமார், அபிசன் சுரேஸ்குமார்,
  11. வனவளப் பாதுகாப்புக்கான மன்னார் மாவட்ட பொறுப்பாளர் சுமன் அவர்களின் மகள் தணிகைச்செல்வி செல்வகுமார்,
  12. அரசியல்துறை துணைப் பொறுப்பாளர் தங்கன் அவர்களின் பிள்ளைகளான துவாரகன் சுதாகரன், துவாரகா சுதாகரன், துர்க்கா சுதாகரன்,
  13. மன்னார் மாவட்ட படையணிப் பொறுப்பாளர் வாகீசன் அவர்களின் பிள்ளைகளான சிந்தரசி நிமலநாதன், கோகலை நிமலநாதன், கலையரசன் நிமலநாதன்,
  14. புகைப்படப்பிரிவுப் பொறுப்பாளர் ஜவான் அவர்களின் மகள் எழில்நிலா சற்சுதன் உள்ளிட்டோர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் காணாமலாக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் அனைத்தும் இலங்கை அரசின் கோர முகத்தை எண்பிக்கும் சாட்சியங்களாக, ராஜபக்சக்களின் கறைபடிந்த கரங்களின் விம்பங்களாக கடைசி ஈழத்தமிழன் உள்ளவரை, அவர்களின் வாழ்வியல் வலிசொல்லும் வடுக்களாக நெஞ்சப் பசுமைகளில் என்றுமே நிலைத்திருக்கும்.

இந்த நினைவுகளுக்கும், இலங்கை நாட்டின் சுதேசிய இனமான தமிழ்த்தேசிய இனம் காலம்காலமாக சிந்தி வரும் கண்ணீருக்கும், காரணமானவர்கள் கரிசனையற்றுக் கண்மூடி இருந்தாலும் காலமாவது பதில் சொல்லட்டும்.