வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் சிவஞானம் சிறிதரன் தெரிவிப்பு

வடகிழக்கு இணைந்த தீர்வே தமிழருக்கு வேண்டும் என சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார் ,தலைவராக பதவி ஏற்றதன் பின்னர் சிவஞானம் சிறிதரன் இவ்வாறு தெரிவித்து தமிழர் விடுதலையின் முக்கியதத்துவத்தை எடுத்துரைத்தார் .

எமக்கு வடகிழக்கு இணைந்த தாயாக பகுதியே தமிழருக்கு அதிகம் பொருந்திய ஒன்றாக காணப்படும் என தமிழீழ விடுதலை புலிகள் தெரிவித்து, அந்த நிர்வாக அலகை கடை பிடித்து வந்தனர் .

அவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த இலங்கைக்குள் ,ஒன்றித்து வாழும் சம்ஸடி முறையிலான அதிகாரம் ,தமிழருக்கும் வேண்டும் என சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார் .

தமிழருக்கு வடகிழக்கு இணைந்த தீர்வை யார் தருகிறார்களோ அவர்களுக்கு எமது ஆதரவு வழங்க படும் என ,சிவஞானம் சிறிதரன் தெரிவித்து ,இப்பொழுதே சிங்கள கட்சிகளுக்கு போடு ஒன்றை போட்டுள்ளார் .

வீடியோ

காணி அபகரிப்பு வர்த்தமானி கேள்வி கேட்ட சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன் வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன என நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக,

2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை, கமத்தொழில், கால்நடை வளங்கள்,

காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த சபைக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,

என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவராக, துறைசார் அமைச்சரிடம்,

வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும்போதே இந்த விடயம் குறித்து சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள காணிகள் என்ன தேவைக்காகக் கோரப்பட்டுள்ளன என்பதையும்,

6000 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாகச் சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் வாழும்போது

அவர்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதையும்,

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகால யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில்,

இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதையும் அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்றக் குழுத் தலைவர்களால் கேட்கப்படும் வாய்மொழி மூல வினாக்களுக்கு, துறைசார் அமைச்சர் உரிய காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் காணி அபகரிப்பு இரகசியமாக ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வர்த்தமானி கடந்த வாரம் வெளியாகி இருந்தது.

வடக்கு மாகாணத்தில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரை யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின்

பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி,5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலேயே இன்று நடந்த பாராளுமன்ற அமர்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பி இருந்தார்.

திட்டமிடப்பட்ட செயலாக இந்த காணி அபகரிப்பு இரகசிய வர்த்தமானி வெளிவந்தமை அதிர்ச்சிக்குரியதாகும்.

சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்கள் நிலைகளை வளைத்து அதனை ஏப்பமிட துடிப்பதை இந்த காணி அபகரிப்பு விடயம் மீளவும் எடுத்துக் காட்டுகிறது.

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு

இந்தியத் துணைத் தூதுவருடன் சிறிதரன் சந்திப்பு

இலங்கைக்கான யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் புதிய தூதுவராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீ சாய்முரளியை, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மரியாதை நிமித்தம் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தமிழ் மக்களில் அரசியல் நலன்சார் விடயங்கள் மற்றும் சமகால நெருக்கடிகள் நிலைமைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி

தமிழரசு கட்சிக்குள் குழப்பம் குத்து வெட்டு ஆரம்பம் பறிபோகும் சிறிதரன் தலைவர் பதவி ,தமிழரசு கட்சியின் தலைவராக சுமந்திரன் துடிப்பதால் சிறிதரன் பதவியை தட்டி பறிக்க சுமந்திரன் நடவடிக்கை .

சட்டத்தரணி சுமந்திரன் சூத்து மாத்து

இலங்கை ஆளும் ஜனாதிபதியின் சட்டத்தரனியாக விளங்கி வரும் சுமந்திரன் ,இன்றைய புதிய தமிழரசு கட்சியின் தலைவராக தெரிவு செய்ய பட்ட ஸ்ரீதரனுக்கு எதிராக சூழ்ச்சிகளை செய்து வருகிறார் .

தானே தமிழ் மக்கள் தாதாவாக நினைத்து தமிழ் மக்கள் அரசியல் அபிலாஷைகளை குழிதோண்டி புதைத்து வரும் சுமந்திரன் ,தான் சட்டத்தரணி என்ற வகையில் தமிழரசு கட்சிக்கு எதிராக பாரிய சதி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் .

தமிழரசு கட்சி மீள் தலைவர் தெரிவு

தமிழரசு கட்சிக்குள் மீள் தலைவர் தெரிவு இடம்பெற வேண்டும் என அந்த கட்சிக்குள் குழப்பங்கள் நிலவி வருவதால் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக தலைவரை தெரிவு செய்திட தயாராக உள்ளதாக ,இன்றைய தமிழரசு கட்சியின் புதிய தலைவர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார் .

நீதிமன்றத்தினால் வழங்க படும் அறிவுறுத்தல் மற்றும் அவர்களது மேற்பார்வையின் கீழ் ,மீள ஒரு தேர்தலை நடத்தி அதன் ஊடக கட்சியின் தலைவர் பதவியை தெரிவு செய்திட, தான் தயாராக உள்ளதாக சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்து பர .பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

.இன்றைய இலங்கை செய்திகள் தலைப்பு செய்தி

இந்த விடயம் இன்றைய இலங்கை செய்திகளில் முதன்மை தலைப்பு செய்திகளாக இடம்பிடித்து தமிழரசு கட்சியின் உள்வீட்டு குழப்பத்தை , வெட்டு குத்தை அம்பல படுத்தியுள்ளது ..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன் நியமிக்க படவேண்டும் என பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர் ,ஆனால் அதனை தடுக்கும் நகர்வில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த இரா சம்பந்தன் மூப்பாகி விட்ட காரணத்தால் , தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய நெருக்கடியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிக்கி உள்ளது .

தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு ,உலக தமிழ் மக்கள் மத்தியில் அதனால் நன்மதிப்பை பெற்றுள்ளது .

ஆனால் இடையில் நுழைந்த எம் ஏ சுமந்திரன் செயல் பாட்டினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு உடைந்து காணப்படுகிறது .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக சிறிதரன்|தடுக்கும் சுமந்திரன்

இதே தமிழ் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரன் தொடர்ந்து நீடித்தால் கட்சி காணாமல் போகும் நிலை ஏற்படும் என மக்கள் தமது கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .

இவ்வாறான கால பகுதியில் கல்விமானாகவும் ,புத்தியீவியாகவும் விளங்கி வரும் பாராளுமன்ற உறுப்பினர் ,சிவஞானம் சிறிதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக பொறுப்பேற்கும் தகமை கொண்டவர் என மக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பின் முகவராக செயல் பட்டு தமிழ் தேசிய இலக்கை சிதைத்து ,ஒன்று பட்டு பணியாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைத்தலை குழப்பிய நபர்களில் சுமந்திரன் முதன்மை வைக்கிறார் .

அதனால் சுமந்திரனுக்கு எதிராக சகா உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர் .

சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக அமர்த்த பட்டால் கூட்டமைப்பு என்கின்ற கட்சி காணாமல் போகும் என யோகேஸ்வரன் திறந்த மனதோடு தனது கருத்தை வெளியிட்டு ,ஸ்ரீதரனுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார் .

வீடியோ

சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

இலங்கை புரிந்த தமிழின படுகொலைக்கு இலங்கையை சர்வதேச நீதிமன்றி முன்னிலை படுத்த வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் முழங்கியுள்ளார் .

முல்லைதீவு மாவட்டத்த நீதிபதி சற்குணராஜா நாட்டை விட்டு மிரட்ட பட்டு துரதியடிக்க பட்ட விடயம் தொடர்பில், பாரளுமன்றில் உரையாற்றும் பொழுதே இந்த விடயத்தை முன் வைத்தார் .

இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும் எம்பி சிறிதரன் முழக்கம்

ஆண்டுகளாக ஆண்டு வரும் ஆளும் சிங்கள பவுத்த இனவாதிகள் ,தமது நலன்கள் கருதி சட்டங்களை மாற்றுகள் ,தமிழ் நீதிபதிகளை மிரட்டி அடக்கி ஆண்டு வருகின்றனர் .

இது ரணில் அரசாங்கத்தின் வாங்குறோத்து நிலையை காட்டுகிறது .எனவே தமிழர்களை புறம்தள்ளி நசுக்கி ஒடுக்குவதன் மூலம் இலங்கை சுதந்திரமும் நின்மதியாக வாழமுடியாது என இடித்து கூறினார் .

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி

இலங்கை ,கிளிநொச்சி ; தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயார் என்கிறார் சிறீதரன் எம்.பி

தமிழ்த் தேசிய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவுடனும் பேசத்தயாராகவே நாங்கள் இருக்கிறோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் கிளிநொச்சி இராமநாதபுரம் வட்டாரத்தில் மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது குறித்த சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் ரணிலுடன் பேச கூட்டமைப்பு தயார் சிறிதரன் எம்பி

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் ஜனாதிபதியாக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம் அந்த வகையில் ரணில் விக்கிரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.

ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறோம் கோத்தபாய ராஜபக்ஷவுடனும் ஒரு தடவை

பேசியிருக்கிறோம் இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார்களோ அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்

ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று பாராளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார் இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?

அல்லது முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச போன்று அனுராதபுரத்தில் பதவியேற்ற போதும் சரி தனது அக்கிராசன உரையிலும் சரி மக்களால்

விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது

40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தை கொண்டுள்ள ஜனாதிபதி இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான் என்பதை புரிந்து

வைத்திருப்பார் எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர் எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த ரணில் விக்கிரமசிங்க நாட்டின்

பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்

குறித்த சந்திப்பில் சமகால அரசியல் தொடர்பிலும் பொருளாதார பிரச்சினை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

அவர்களுடன்
வடக்கு மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் குருகுலராஜாவும் கலந்து கொண்டிருந்தார்.

    பாடசாலை மதிலை
    Posted in இலங்கை செய்திகள்

    பாடசாலை மதிலை திறந்து வைத்தார் – சிறிதரன் எம்பி photo

    பாடசாலை மதிலை திறந்து வைத்தார் – சிறிதரன் எம்பி

    வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் மதிலினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற

    உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்றைய தினம் திறந்து வைத்தார்.


    நாடாளுமன்ற உறுப்பினரின் 2021 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் ஆறு இலட்சம் ரூபாய் செலவில் குறித்த மதில் அமைக்கப்பட்டது.


    பாடசாலையின் முதல்வர் பங்கயற்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற

    உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடன் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர்

    சிவமோகன் கரைச்சி கோட்டக் கல்வி அலுவலர் தர்மரத்தினம் சேவைக்கால ஆசிரிய ஆலோசகர்

    சிறீஸ்குமார் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்

      Posted in Uncategorized

      பண்டத்தரிப்பு வைத்தியசாலையை தரம் உயர்த்தூண்கள் – சிறிதரன் எம்பி முழக்கம்

      பண்டத்தரிப்பு வைத்தியசாலையை தரம் உயர்த்தூண்கள் – சிறிதரன் எம்பி முழக்கம்

      யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்தினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம்: சிறீதரன் எம்.பி!


      யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையை தரம் உயர்த்தினால் குறித்த பகுதி மக்கள் தூர இடங்களுக்கு வைத்திய சேவையை பெற செல்லுவதை குறைக்கலாம் என தமிழ்

      தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
      பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலைக்கு இன்றையதினம் விஜயம் செய்தபோதே அவர்

      மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
      அவர் மேலும் தெரிவிக்கையில்,


      பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் மாதாந்தம் 3500க்கும் மேற்பட்ட தொற்றா நோயாளர்கள் மற்றும் ஏனைய நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடிப்படை

      வசதிகள் இருந்தும் ஒரு வைத்தியரும் மற்றொரு பல் வைத்தியரும் அவருடன் இணைந்த 4 ஊழியர்களுடனேயே வைத்தியசாலை இயங்கிவருகின்றது.


      வெளிநோயாளர் பிரிவு இயங்கி வந்தாலும் கூட ஆளணி பற்றாக்குறை காரணமாக விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.


      ஐந்து ஏக்கர் காணி பரப்பிலே பொதுமக்களின் ஒத்துழைப்புடன் இந்த வைத்தியசாலை இயங்கி வருகின்றது.


      வைத்தியசாலை பாவனைக்காக பொதுமக்களால் ஒரு முச்சக்கர வண்டி வழங்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறான அடிப்படை வசதிகள் இருந்தும் கூட ஆளணி பற்றாக்குறை காரணமாக வைத்தியசாலை முழுமையான சேவையை பெற முடியாத நிலைமை காணப்படுகின்றது.


      தரம் இரண்டிலிருந்து இந்த வைத்தியசாலை தரம் ஒன்றிற்கு மாற்றப்பட வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இவர்கள் வைத்திய சேவைகளை பெறுவதற்காக அதிக தூரம் பயணித்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு செல்ல வேண்டிய நிலையில்,

      அருகிலேயே இந்த வைத்தியசாலையை தரம் மாற்றினால் ஆளணியும் உயர்வதுடன்
      இந்த பகுதி மக்கள் இங்கேயே சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.


      உரிய தரப்புகளுடன் பேசி இதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம் என்றார்.
      அத்துடன் மாதகல் சென் தோமஸ் ரோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை பண்டத்தரிப்பு

      பெண்கள் உயர்தரப் பாடசாலை மற்றும் பண்டத்தரிப்பு தேவாலயம் உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டதுடன் பாடசாலைகளின் தேவைகள் மற்றும் தேவாலயத்தின் தேவைகள்

      தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்களுக்கு பாடசாலையின் முதல்வர்களாலும் தேவாலயத்தின் அருட்தந்தையினாலும் விளக்கமளிக்கப்பட்டது.


      நாடாளுமன்ற உறுப்பினரின் குறித்த விஜயத்தின் போது மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்

      ஜோன் ஜிப்ரிக்கோ, நாடாளுமன்ற உறுப்பினரின் நல்லூர் பிரதேச இணைப்பாளர் பி.துஸ்யந்தன் மற்றும் கட்சி உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

        Posted in Uncategorized

        மக்கள் காணிகளை அபகரிக்கும் காட்டு வாசிகள் – களத்தில் குதித்த சிறிதரன் எம்பி

        மக்கள் காணிகளை அபகரிக்கும் காட்டு வாசிகள் – களத்தில் குதித்த சிறிதரன் எம்பி

        வனவளத் திணைக்களத்தினரால் எல்லைப்படுத்தப்பட்டுள்ள ஜெயபுரம் மக்களின் காணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் சிறீதரன் எம்.பி!

        கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் ஜெயபுரம் வடக்குப் பகுதியில், ஏறத்தாழ அறுபது குடும்பங்களுக்குச் சொந்தமான மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக் காணிகளை

        வனவளத் திணைக்களத்தினர் எல்லைப்படுத்தியுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்களால் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து, நேற்றுமுன்தினம் குறித்த காணிகளை அவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

        ஜெயபுரம் வடக்கு கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட திக்குவில், எத்தாவில், சுண்ணாவில், தும்புருவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 60 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 1965 ஆம்

        ஆண்டிலிருந்து திக்குவில் குளத்தை நீர் மூலமாகக் கொண்டு மேட்டுநிலப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர். காலத்துக்குக்காலம் நடைபெற்ற இடப்பெயர்வுகளின் பாதிப்புக்களை

        எதிர்கொண்டு, இறுதியாக 2010 ஆம் ஆண்டு மீள்குடியேறியதிலிருந்து இன்றுவரை அம்மக்கள் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் குறித்த காணிகளை எல்லைப்படுத்தியுள்ள வனவளத்

        திணைக்களத்தினர் அக்காணிகளில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாதென மக்களைத் தடுத்து வருகின்றனர்.

        ஆனால் அதே பகுதியில் தனது தந்தையாருக்குச் சொந்தமான 100 ஏக்கர் காணி உள்ளதாகக்கூறி, காடழித்து நிரந்தர அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுவரும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களத் தனவந்தர் ஒருவருக்கு எதிராக வனவளத் திணைக்களத்தினர் எவ்வித எதிர்ப்பு

        நடவடிக்கையையும் மேற்கொள்ளாத நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ள தமக்கு காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு அப்பகுதி மக்களால்

        முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று நேற்றைய தினம் (2021.09.12) நேரில் சென்று குறித்த காணிகளைப் பார்வையிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இவ்விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு கடிதங்களை அனுப்புவதன் மூலம் காணிகளை மீளப்பெற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.

        இதன்போது, பூநகரி பிரதேசசபையின் ஜெயபுரம் வட்டார உறுப்பினர் சுப்பிரமணியம் சந்திரபோஸ், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஜெயபுரம் வட்டார அமைப்பாளர்

        திரு.செல்வராஜ் குமாரவேல், ஓய்வுநிலை அதிபர் திரு.இரவீந்திரன் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது

          Posted in Uncategorized

          கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo

          கிளிநொச்சி ,பளை ,விஸ்மடு பகுதியில் சிறிதரன் எம்பி நிவாரண உதவி photo

          கிளிநொச்சியில் 750 குடும்பங்களுக்கு கனடா செந்தில் குமரன் நிவாரண நிதியம் உதவி!
          நாட்டில் தற்பொழுது அமுலில் இருக்கும் பயணத்தடை காரணமாக வறிய மக்கள் கடும் சிரமத்தை

          எதிர்நோக்கி உள்ளனர்.
          பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பட்டினியாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

          மக்களின் வறுமையை போக்கும் விதமாக புலம்பெயர் உறவுகள் தனிப்பட்ட ரீதியாகவும், ஊர்சங்கங்களின் ஊடாகவும், நிறுவனங்களின் ஊடாகவும் பல விதமாக உதவி வருகின்றனர்.

          அந்த ரீதியில், கனடாவில் பல காலமாக தமிழ் மக்களின் பெரும் ஆதரவுடன் இயங்கி வரும் மின்னல் செந்தில் குமரனின் நிவாரண அமைப்பு 11 லட்சம் பெறுமதியான உலர் உணவு பொருட்களை நிவாரணமாக கிளிநொச்சி மக்களுக்கு வழங்கி உள்ளது.

          இதனை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னிலையில் DS அலுவலகத்தால் பரிந்துரைக்கப்பட்ட 750 குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்படுகிறது.

          மேலும் பல மாவட்டங்களில் செந்தில் குமரனின் நிவாரன உதவி தொடர இருப்பதாக அறியப்படுகிறது…

            Posted in இலங்கை செய்திகள்

            தமிழ் மக்களின் வாழ்வு கேள்வி குறியாக்க பட்டுள்ளது – சிறிதரன்

            தமிழ் மக்களின் வாழ்வு கேள்வி குறியாக்க பட்டுள்ளது – சிறிதரன்

            எம் இனத்தின் இருப்பு கேள்விக்கு உட்ப்படுத்தப்படுகிறது எனத் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற

            உறுப்பினரும் யாழ் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

            நேற்று (07) கிளிநொச்சி செல்வாநகர் பிரதேசத்தில் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

            அவர் மேலும் தெரிவிக்கையில்,

            எம் இனத்தின் வாழ்க்கை என்பது அழிக்கப்பட்டுக்கொண்டு செல்கிறது. எங்களை நோக்கி புத்த கோவில்கள் வருகிறது. எங்கள்

            இடங்கள் இராணுவ முகாம்களாக மாற்றப்பட்டுக்கொண்டு உள்ளது. காலையில் இருந்து மாலை வரை எத்தனையோ காவலரண்களை பார்கின்றோம்.

            நாளாந்தம் புதிய புதிய காவலரண்கள் வருகிறன. இந்த சூழ்நிலைகள் எல்லாம் எங்களைப் பொறுத்த வரை ஒரு ஆபத்தான சூழ்நிலைக்குள் போய்கொண்டிருக்கின்றோம்.

            முழுமையாக ஒரு இராணுவ மயப்படுத்தப்பட்ட இராணுவ பிரசன்னத்திற்குள் வாழுகின்ற சூழல் எங்களை நோக்கி

            நகர்ந்துகொண்டுள்ளது. இந்த சூழலில் தான் எங்கள் பணிகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

            இப்போது தமிழர்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு ஒன்றாக பயணிக்க வேண்டிய நேரம். அவ்வாறு ஒன்றாக

            பயணித்தால் வடக்கு கிழக்கில் இந்த பாராளுமன்ற தேர்தலில் இருபது ஆசனங்களை நாம் பெற முடியும்.

            225 பாராளுமன்ற உறுப்பினர்களில் 20 உறுப்பினர்கள் இருந்தால் மட்டுமே நாம் எதிர்வரும் காலங்களில் இந்த மண்ணில் ஏதாவது பேசக்கூடிய அறுத்துறுத்து சொல்லக் கூடிய அல்லது எங்கள்

            உரிமைக்காக உரத்துக் குரல் கொடுக்கக்கூடிய வல்லமை எங்களுக்கு கிடைக்கும் இல்லை என்றால் யாரோ அபிவிருத்தி

            என்கின்ற மாய வலையை விரித்து வாக்குக் கேட்பவர்களுக்கும், அரச முகவர்களுக்கும்,ஒட்டுக்குழுக்களுக்கும் வாக்களித்துக் கொண்டிருக்க போகின்றோம் என்றார்

                ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்
                Posted in இலங்கை செய்திகள்

                ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்

                ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்

                ஒரே மேடையில் முக்கிய திருடர்கள் ,கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு ” நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் ஒரே மேடையில் முக்கியதிருடர்கள் ஒன்று கூடினர் .

                1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத்

                தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக

                தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.

                முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த பகிரங்க அரசியல் கருத்தரங்கில்,

                பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு

                மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்

                மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

                ஒரே மேடையில் முக்கிய திருடர்கள் யாவரும் ஒன்று கூடி இருந்தமை குறிப்பிட தக்கது .

                விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து
                Posted in இலங்கை செய்திகள்

                விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து

                விரோத கட்சியுடன் கூட்டணியா சிறிதரனின் கருத்து

                விரோதக் கட்சி உறுப்பினர்களுடன் கூட்டணி சேர பேசியதாக வரும் செய்திகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என சிறிதரன் தெரிவித்துள்ளார்.

                உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாக

                சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன்,

                அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியின் தலைவரான டக்ளஸ் தேவானந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி தனக்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தார்.

                உள்ளுராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியும், டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும்

                வியாழக்கிழமை (5) சந்தித்துப் பேசவிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

                இதுவரை காலமும் அரசாங்கத்தை ஆதரித்துவந்த ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையில் அடிப்படை கொள்கையிலேயே வேற்றுமை நிலவும் பின்னணியில்,

                இச்சந்திப்புக் குறித்து வினவியபோது வியாழக்கிழமை (5) சந்திப்பு நடைபெறவிருப்பதை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உறுதிப்படுத்தினார்.

                இவ்விருதரப்பு சந்திப்பில் தமிழரசுக்கட்சியின் சார்பில் அதன் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்வர் எனவும் அவர் தெரிவித்தார்.

                இதுபற்றி கேசரியிடம் கருத்து வெளியிட்ட தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர் சிவஞானம் சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் கூட்டணி அமைப்பது குறித்து டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடுவது பற்றி

                கட்சியின் உயர்மட்டக்குழுவில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், ஆகவே இச்சந்திப்பு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் குறிப்பிட்டார்.

                அதுமாத்திரமன்றி கூட்டணி அமைப்பது குறித்து தமிழ்த்தேசியக்கட்சிகளுடன் பேசுவதற்கே கட்சி தீர்மானித்திருந்ததாகவும், அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியத்துக்கு விரோதமான கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனில்,

                அதுபற்றி கட்சியின் உயர்மட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

                மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு
                Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

                மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு

                மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு

                வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி பயணித்த பேரணியில் கலந்து கொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் உட்பட எழு பேரை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் விடுவித்தது.

                இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்றவர்களில் எழுவரே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

                பாராளுமன்ற உறுப்பினர்களான , சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், எம்.கே.சிவாஜிலிங்கம், யாழ். மாநகர

                முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் வேலன் சுவாமிகள் உள்ளிட்ட எழு பேரே வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

                மூன்று எம்பிக்கள் உட்பட ஏழுபேர் விடுவிப்பு

                தேர்தல் காலத்தில் போராட்டம் நடத்தியமை, பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 7 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

                அத்துடன், கடந்த ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழாவில் பங்கேற்பதற்காக வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு விசாரணையும் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

                குறித்த இரண்டு வழக்குகளும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (08) எடுத்துகொள்ளப்பட்டது.

                வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டுமென பொலிஸார் தெரிவித்த போது பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி இரண்டு வழக்குகளையும் கிடப்பில் போட்டு அனைவரையும் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

                இதனையடுத்து இரண்டு வழக்கையும் கிடப்பில் போட்ட நீதிமன்றம், பிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டது.

                இந்த வழக்குகளில் பிரதிவாதிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஷ் ஆஜராகியிருந்தார்.

                வீடியோ

                இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை
                Posted in இலங்கை செய்திகள்

                இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

                இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

                கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம் .இராவணன் என்பவர் இலங்கையை ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராவணன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி

                வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது.

                இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம் .

                வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும்

                நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும் என ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

                அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் அலுவலகத்தில் பாராளுமன்றத்தில் அண்மையில் இராமாயணம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றமை தொடர்பில் இன்று(15) விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

                இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

                மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

                பாராளுமன்றத்தில் அண்மையில் ஒரு விவாதம் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.இராவணன்.தமிழில் இராவணன்.சிங்களத்தில் இராவண என்று சொல்வார்கள்.இந்த இராவணன் என்பவர் யார்?இந்த இராவணன் தமிழனா?

                சிங்களவனா என்று விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.உண்மையில் இந்த விடயம் பாராளுமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விடயமல்ல.படித்த மக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இவ்விடயம்

                விவாதிக்கப்பட வேண்டிய விடயமாகும்.ஆனால் இவ்விடயம் 100 க்கு 70 வீதம் படிக்காதவர்கள் பட்டதாரிகளாக இல்லாதவர்கள் இருக்கின்ற பாராளுமன்றத்தில் விவாதிப்பது என்பது ஒரு அதிசயமாகவும் ஒரு அருவருக்கத்தக்க விடயமாகவும் நாம் பார்க்கின்றோம்.

                கடந்த காலங்களில் நாங்கள் இராவணன் இராமன் தொடர்பில் பல்வேறு விடயங்களை தெளிவாக கூறி வருகின்றோம்.2013 ஆண்டு இவ்வாறு தெளிவாக தெரிவித்துள்ளேன் என நினைக்கின்றேன்.

                இது தவிர 2020 ஆண்டு பொதுத்தேர்தல் காலப்பகுதியிலும் இவ்விடயம் குறித்து சொல்லி இருக்கின்றோம்.இராவணன் என்பவர் இலங்கையை

                ஆண்ட மன்னனாக இருக்கலாம்.ஆனால் இராணவன் தமிழன் என்பதற்கும் சிங்களவன் என்பதற்கும் எவ்வித ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்பதை தான் சொல்லி வருகின்றேன்.காரணம் இராவணனுடைய ஆட்சி அல்லது இராமாயணம் என்பது தொல்லியல் மூலம் நிரூபிக்க முடியாத ஒரு வரலாறாகவே காணப்படுகிறது.இவ்விடயம் கிட்டத்தட்ட 7000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறுகின்றார்கள்.

                கலைஞர் கருணாநிதி போன்றவர்கள் கிட்டத்தட்ட 25000 வருடங்களுக்கு முற்பட்டது என கூறி இருந்ததை காண்கின்றோம். ஆகவே இராமாயணம் என்பது ஒரு புராணக்கதை.இந்த புராணக் கதை சமஸ்கிரத மொழியில் எழுதப்பட்டிருந்தது.அது தமிழிலோ அல்லது சிங்களத்திலோ எழுதப்பட்ட புராணக் கதை அல்ல.புராணக் கதை

                எனும் போது அதில் கற்பனைகளும் இருக்கலாம் உண்மைகளும் இருக்கலாம்.இவ்விடயம் ஒரு சிறிய சம்பவம் .ஆனால் மிகைப்படுத்தபட்ட ஒரு புராணக் கதை என்பதே எமது கருத்தாக உள்ளது.

                இராவணன் ஒரு முஸ்லீம் கிளம்பிட்டாங்க வெடித்த சர்ச்சை

                ஆனால்நாங்கள் கேட்கின்ற கேள்வி என்னவெனில் அந்த புராணக் கதையில் வருகின்ற கதாபாத்திரங்கள் தமிழர் பெயர்களாகவோ அல்லது சிங்களவர் பெயர்களாகவோ அல்லது சமஸ்கிரத மொழி பேசுகின்றவர்களின் பெயர்களாகவோ இல்லாமல் அரபு

                மொழிக்கு நெருக்கமான இருக்கின்ற காரணம் என்ன என்ற கேள்வியை நாம் பலகாலமாக கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றோம் .

                இந்த கேள்விக்கு பதில் தராமல் பலரும் எங்களுடைய கருத்தை நையாண்டி செய்வதை தான் நாம் பார்க்கின்றோம்.நாங்கள் இன்னும் சில கேள்விகளை கேட்க விரும்புகின்றோம்.

                இந்த கதைகளில் வருகின்ற கதாபாத்திரங்கள் இராவணன் இராமன் சீதை இலக்குவனன் வாலி சுக்கீரிவன் போன்ற பெயர்களை பார்க்கின்ற போது அது அரபு மொழிக்கு மிகவும் நெருக்கமான இருக்கின்ற முஸ்லீம்களுடைய பெயர்களை போன்று இருக்கின்ற காரணம் என்ன என்று ஆராய வேண்டும்.

                இதில் இராமன்-ரஹ்மான் இராவன் -இராவணன் சீதா -சைதா நுஃமான் -அனுமான் என்பது ஒரு மொழியில் தான் வருகின்றது.

                ஏன் இவ்வாறு வருகின்றது என்பதை ஆராயும் போது இது முஸ்லீம்களின் ஒரு சிறிய வரலாறு தான் என்பதுடன் பின்னர் அது கற்பனையாக புராணக் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தான் எங்களுக்கு ஏற்பட்ட தெளிவான கருத்தாக

                உள்ளது.இராமாயணம் 7000 வருடங்களுக்கு முந்தியது எனும் போது அது எப்படி முஸ்லீம்களின் வரலாறாக முடியும் என்பது சிலருக்கு ஆச்சரியமளிக்கலாம்.இஸ்லாமியர்களின் வரலாறு என்பது 1400 ஆண்டு கால வரலாறு தான் என்பதை சிலர் கேட்க கூடும்.இது உண்மையில் இஸ்லாம் பற்றி

                தெரியாதவர்களின் கருத்தாகவே நாம் கருதுகின்றோம்.இஸ்லாத்தின் வரலாறு என்பது 1400 வருடமல்ல.இந்த உலகத்தில் முதல் மனிதன் ஆதம் என்பவரை நாங்கள் நபி என்கின்றோம்.இந்த உலகத்தில் ஆதம் எப்போது இறங்கினாரோ அல்லது கால் வைத்தாரோ அன்று முதல் இஸ்லாமும் முஸ்லீம்களும் இந்த உலகில் வாழ்கின்றனர் என்பதை ஹதீஸ் குர்ஆன் என்பன மிக தெளிவான கருத்தாக கூறுகின்றன.

                நாங்கள் நபி இப்றாகீம் அவர்களை முஸ்லீம் என்கின்றோம்.நபி இப்றாகீம் வரலாறு என்பது இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது என்பதை வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்

                .எனவே அவ்வாறாயின் இற்றைக்கு 5000 வருடங்களுக்கு முற்பட்டது தான் இஸ்லாமிய வரலாறு என்பதை நாம் காண்கின்றோம்.அதே போன்று நூஹ் நபி அவர்களின் வரலாற்றை சாதாரணமாக கணிப்பின் ஊடாக ஆராய்ந்தால் கிட்டத்தட்ட 1 இலட்சம் ஆண்டு வாழ்க்கை வரலாறாக தெரிவிக்கப்படுகின்றது.

                ஆகவே இவ்வாறான விடயங்களை வைத்து பார்க்கின்ற போது இஸ்லாம் என்பது முதல் மனிதன் ஆரம்பித்த காலத்தில் இருந்து இன்று வரை இஸ்லாமிய வரலாறாக இருந்து கொண்டே இருக்கின்றது.முஹம்மது நபி அவர்கள் இஸ்லாத்தினை கொண்டு வரவில்லை.

                இஸ்லாத்தை புதுப்பிக்க வந்தவர்கள் தான் எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்.அவர் இறுதி நபியாக தான் இவ்வுலகத்திற்கு வருகை தந்தார்கள்

                .இஸ்லாத்தை புதுப்பிக்க வருகை தந்தவர்களே தவிர இஸ்லாத்தை அவர்கள் கொண்டு வரவில்லை.இப்றாகீம் நபியினுடைய வழியில் தான் இருக்கின்றென் என்பதை எங்களது தூதர் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே கூறி இருக்கின்றார்கள் என்பதை நாம் காண்கின்றோம்.

                இவ்வாறு எல்லாம் பார்க்கின்ற போது இந்த இராமாயண கதையில் வருகின்ற பிரதான கதாபாத்திரங்களின் பெயர்களையும் முஸ்லீம்களின் பெயர்களையும் வைத்து பார்க்கின்ற போது எங்கயோ ஒரு இடத்தில் நாம் சொல்கின்ற காரணம் எவராலும் மறுக்க முடியாத விடயமாகவே உள்ளது.

                இந்த காரணத்தை நாம் கூறுகின்ற போது அதாவது ஒரு நபிக்கும் ஒரு முஸ்லீம் மன்னனுக்கும் இடையில் இடம்பெற்ற பிணக்கு காரணமாக இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி இருக்கலாம்.என்ற கருத்தை கூட நாம் கூறி இருக்கின்றோம்

                .உதாரணமாக இராவணன் எனும் பெயருக்கு நாம் அனைவரும் அறிந்த எகிப்து நாட்டு மன்னன் ராவுன் அல்லது பிர்அவ்ன் எனும் பெயர் ஏன் இங்கு வந்தது என்ற வினா எழுகின்றது.

                அதாவது இலங்கையில் இராமாயண புராணக்கதை இடம்பெற்றிருந்தால் அங்கு இருந்த மன்னனுக்கு ஏன் சிங்கள பெயராகவோ அல்லது தமிழ் பெயராகவோ இல்லாமல் எகிப்திலே இருந்த மன்னனுடைய பெயர் பிரவுன் என்பது போன்று ஏன் இராவனை அழைக்க வேண்டும்.என்ற கேள்வியை நாம் கேட்க விரும்புகின்றோம்.

                இந்த கேள்விக்கு எவரும் பதில் தர முன்வருவதில்லை.உண்மையில் இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான சரத் வீரசேகர சிவஞானம் சிறிதரன் ஆகியோர் நாங்கள் பாராளுமன்றத்தில் இல்லாவிடினும் எமக்கு பதில் அளிக்க முன்வாருங்கள்.ஏன் இந்த புராணக்கதையில் வருகின்ற

                கதாபாத்திரங்களின் பெயர்கள் முஸ்லீம் பெயர்கள் போன்று இருக்கின்றன. இதற்கான காரணம் என்ன?நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.அவ்வாறு இவ்விடயத்தை தெளிவு படுத்த முடியவில்லை எனின் நாங்கள் சொல்கின்ற முஸ்லீம்களின் சம்பவத்தை

                கற்பனையாக வடிவமைத்து இராமாயணமாக உருவாக்கி உள்ளார்கள் என்பதே எமது கருத்தாக உள்ளது என்பதை நாங்கள் தெளிவு படுத்த விரும்புகின்றோம்.இதை விட பாராளுமன்றத்தில் விவாதங்களில் கலந்து கொள்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு இலங்கையின் வரலாறு சிங்கள தமிழ் மக்களது வரலாறு மிக சரியாக தெரியாது என்பது எமது கருத்தாகும்.

                மகாவம்சத்தில் சிங்களவர்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த இளவரசன் விஜயன் மூலம் உருவானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.2700 ஆண்டுகளுக்கு முன்னர் விஜயன் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அவர்களது வரலாறு சான்று பகிர்கின்றது.அவ்வாறாயின் இராவணன் ஆட்சி என்பது 2700 க்கு

                உட்பட்டதா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும்.அவ்வாறாயின் இராவணனை எப்படி சிங்களவர் என்று கூறுவீர்கள்.அதே போன்று தமிழ் மொழிக்குரிய வரலாறு என்று பார்க்கின்ற போது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்பின் படி 5000 ஆண்டுகளாகும்.

                அதே போன்று எழுத்துருவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகள் என்றும் தமிழர் வரலாற்றை கூறுகின்றார்கள்.ஆனால் அந்த காலத்தில் கூட தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்ததாக எந்தவொரு வரலாற்று ரீதியான ஆதாரம் எதுவுமில்லை.மாறாக இளவரசன் விஜயன்

                தனது 700 கூட்டாளிகளுடன் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் போது அந்த 700 பேருக்கும் மனைவிகள் இல்லாத சூழ்நிலையில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் இளவரசிகளும் அவர்களது தோழிகளும் இலங்கைக்கு வந்து மணம் முடித்துள்ளதாக வரலாறு கூறுகின்றது.

                மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
                Posted in இலங்கை செய்திகள்

                மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்

                மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்

                இலங்கைத் தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் பல்வேறு பட்ட ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

                கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகமான அறிவகத்தில் சனிக்கிழமை (03) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

                தொடந்து கருத்து தெரிவித்த அவர்,

                தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள், மருதங்கேணிப் பகுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அரச புலனாய்வாளர்களால் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டுள்ளமை இந்த நாட்டின் இனஅழிப்பு நடவடிக்கையின் புதிய வடிவத்தையே காட்டிநிற்கின்றது

                மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்

                ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை கொன்றொழித்து படுகொலைகளை செய்ய ஜேர் ஆர் ஜெயவர்தனவின் மருமகனான ரணில் அரசின் இந்த செயற்பாடானது இந்த நாட்டிலே அதியுச்ச அடக்குமுறையையே

                காட்டிநிற்கிறது என்று தெரிவித்த அவர் இந்த நாட்டிலேயே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இலங்கை வருமானவரி திணைக்களத்திலே பதிவு செய்து தங்களுடைய உழைப்பு வருமானங்களுக்கு வருடாந்தம் வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடப்படுகின்றது.

                மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்

                ஒரு நாட்டிலே வரி அறவிடுவது என்பது மிக நல்ல விடயம். ஆனால், இலங்கையில் ஒரு நான்கு வயது தொடக்கம் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை சுயமாக பாடசாலைக்கு சென்று கல்வி கற்க முடியாத அதாவது பருவ காலச்

                சீட்டை பெற்று இலங்கை போக்குவரத்து சபை பேருந்தில் பயணம் செய்து தமது கல்வியை தொடர முடியாத நிலை ஒரு மாணவனின் கல்வி நடவடிக்கைகளில் ஒரு வசதியை செய்து கொடுக்காத இந்த அரசாங்கம் 18

                வயதிற்குப் பின்னர் அவர்களிடமிருந்து வரியை அறவிடுவது என்பது இந்த நாட்டின் ஒரு மிக மோசமான நிலைமையை காட்டி நிற்கின்றது.

                இந்த அரசாங்கத்தில் பலர் பல்வேறு பட்ட மோசடிகளை செய்து போயிருக்கின்றார்கள் இந்த அரசாங்கத்தினுடைய மத்திய வங்கியின் பல மில்லியன் கணக்கிலே இதே ரணில் அரசு இருக்கின்ற போது கொள்ளையடித்து

                சென்றவர்களை மத்திய வங்கி ஆளுநரைக் கூட இதுவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த முடியாத நிலையில் இந்த அரசாங்கம் இருக்கின்றது.

                சீனியிலும் தேங்காய் எண்ணெயிலும் ஊழல் மோசடி செய்த ; கோத்தபாயவனுடைய குடும்பத்தை கைது செய்து விசாரணை செய்ய திராணியற்ற ரணில் அரசாங்கம் இங்கே பல ஊழல்களில் ஈடுபட்டு

                விடுதலைப் புலிகளிடமிரந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளிலே வைப்பிலிட்டு வைத்திருப்பவர்களுக்கு இதுவரையும் எந்த விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை என்றார்.

                இருபது தலைமுறைகளுக்கு தேவையானவற்றை சேமித்து வைத்துவிட்டு இருக்கின்ற மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை விசாரிக்கவும் இந்த அரசாங்கம் இன்று தயாராக இல்லை ஆனால் இந்த இளைஞர்களில் மட்டும் அதிகரிச்சனை கொண்டிருக்கின்றது என்றார்.

                கொள்ளையடித்தவர்கள் களவெடுத்தவர்களினுடைய பக்கத்தில் தான் இந்த நாடு எப்பொழுதும் நிற்கின்றது இந்த தீவிலே ஒரு நீதியான ஆட்சி அமைய வேண்டுமாக இருந்தால் ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் விசாரிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

                No posts found.
                Posted in Uncategorized

                அதிபர்களை குறிக்கும் “மிகை ஊழியர்கள்” என்ற பதம் மாற்றப்படல் வேண்டும்! சிறீதரன் எம்.பி

                அதிபர்களை குறிக்கும் “மிகை ஊழியர்கள்” என்ற பதம் மாற்றப்படல் வேண்டும்! சிறீதரன் எம்.பி

                அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதத்தை மாற்றி அவர்களை அதிபர் தரத்திற்கு கொண்டுவர வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

                வாய்மூல விடைக்காக கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய வேளையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                மேலும் அவர் தெரிவிக்கையில் அதிபர்களுக்கு மிகை ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இது நியாயமானதா? அதிபர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளனர். கடமையை

                நிறைவேற்றும் அதிபர்களும் உள்ளனர். 2012 முதல் மிக ஊழியர்கள் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இறக்கமும் கிடையாது. இதனை மாற்றி அவர்களை அதிபர் தளத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தா

                  Posted in இலங்கை செய்திகள்

                  நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் நிகழ்வு photo

                  நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் நிகழ்வின் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.


                  நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணைந்து ஆரோக்கியமான சமூகம் ஒன்றை உருவாக்குவோம்; என்ற தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு

                  நேற்று நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது பகல் 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் நெடுந்தீவில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்

                  வாழும் உறவுகளும் அதேபோல நெடுந்தீவு மண்சார்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியுள்ள நெடுந்தீவின் உறவுகளும் ஒன்றிணைந்து தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்

                  குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தின் கல்வி கல்வி பொருளாதாரம் போக்குவரத்து ஆவணப்படுத்தல் குடிநீர் தொடர்பிலும் ஏனைய

                  பல்வேறு தேவைகள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.


                  புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்தின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்றைய தினம் இந்த நிகழ்வில் ஒன்று கூடி தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும்

                  ஆதரவுகளையும் வழங்கியிருந்தனர் இதில் அரசியல் கட்சி வேதங்கள் இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதத்தலைவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும்

                  பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் மற்றும் பிரதேச சபை

                  உறுப்பினர்கள் தவிசாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


                  நேற்று காலை பல்வேறு பிரதேசங்களில் இருந்து நெடுந்தொகை மற்றும் தனியார் படகுகள் மூலம் நெடுந்தீவு நோக்கி பயணித்த உறவுகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் எதிர்காலத்தில்

                  இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பிலும் அதிகளாவிலானோர் தமது கருத்துக்களை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

                  வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.
                  Posted in இலங்கை செய்திகள்

                  வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.

                  வீணையிடம் ஓடிய சீ.வீ.கே.

                  வீணைக் கட்சியிடம் வீட்டுக் கட்சியினர் கூட்டணி அமைப்பதற்காக கலந்துரையாடியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

                  உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்காக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்று (சிறீதர் தியேட்டர்) அந்தக் கட்சியின் செயலாளர்

                  டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரான சீ.வீ.கே.சிவஞானம்.

                  தமிழ்த் தேசியப் பேரவையும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணைந்து உள்ளூராட்சித் தேர்தலில் ஆட்சியமைப்பது தொடர்பில் கொள்கை ரீதியிலான உடன்பாடுகளை எட்டியுள்ள நிலையிலேயே.

                  தமிழரசுக் கட்சியின் தலைவர் ஈ.பி.டி. பி.யைச் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

                  இந்தச் சந்திப்புத் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்ததாவது:-

                  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ கோரிக்கை கட்சி மட்டத்தில் மக்கள் நலன்சார்ந்து பரிசீலிக்கப்படும் . விரிவான பரிசீலனைகளைத் தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்படும் – என்றார்.

                  ஆனாலும் இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியவில்லை என் தமிழ்ரசு கட்சியின் தலைவர் சிறிதரன் சிவஞானம் ஊடகங்களிடம் தெரிவித்தது குறிப்பிட்டிருத்தக்கது.