35 போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்.

Spread the love

35 போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்.

அமீரக ராணுவத்திற்கு “50 நவீன எப் 35“ ரக போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

50 நவீன எப் 35 ரக போர் விமானங்கள் அமீரகத்துக்கு விற்பனை- அமெரிக்கா ஒப்புதல்


அமீரகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ள அதிநவீன எப் 35 ரக போர் விமானத்தை படத்தில் காணலாம்.
அபுதாபி:

அமீரகம்-அமெரிக்கா இடையே பல ஆண்டுகளாக ராணுவம் மற்றும் பாதுகாப்புத்துறைகளுக்கு இடையே நல்ல உறவு இருந்து வருகிறது

. வளைகுடா போருக்கு பிறகு அமெரிக்கா எப் 16 போர் விமானங்கள், ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்தது.

தற்போது எப் 35 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்வது குறித்து இரு நாடுகளுக்கு இடையே நேர்மறையான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் முதல்

நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை தற்போது இறுதி வடிவம் பெற்றுள்ளது. குறிப்பாக அமீரகம்- இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே

உருவான சமாதான ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு போர் விமானங்கள் விற்பனை குறித்த முயற்சியானது முன்னேற்றம் கண்டது.

இந்த நிலையில் அமெரிக்கா 50 போர் விமானங்களை அமீரகத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ அதிகாரப்பூர்வ தகவலை

வெளியிட்டுள்ளார். மேலும் ஈரானின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் தற்போது இது தேவைப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை அடுத்து அமீரக ராணுவத்திற்கு நவீன எப் 35 ரக போர் விமானங்கள் வாங்கப்படுவது உறுதியாகி உள்ளது. இந்த போர் விமானங்களுடன், நவீன ராணுவ தொழில்நுட்பம் மற்றும்

கருவிகளும் அமீரகத்திற்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இதற்காக இருநாடுகளும் 2 ஆயிரத்து 337 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

எப் 35 ரகமானது அடுத்த தலைமுறைக்கான நவீன போர் விமானமாகும். மிக அதிவேகத்தில் செல்லக்கூடிய இந்த விமானத்தை ரேடார் மற்றும் அதிநவீன உணரும் கருவிகளால் கூட

கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விமானங்களை இலக்காக குறி வைத்து ஏவுகணை தக்குதல் நடத்த முடியாது.

இந்த விமானங்கள் அதிவிரைவாக செயல்பட்டு செங்குத்தாக மேலெழும்பி பறக்கக்கூடியது ஆகும். அதேபோல் ஒரு பறவை போல்

செங்குத்தாக தரையிறங்க முடியும். மெக் ரக விமானங்களுக்கு இணையாக மணிக்கு 2 ஆயிரம் கி.மீ வேகம் வரை அதிவேகத்தில் பறக்கக்கூடியது.

இந்த அதிநவீன விமானத்தை வாங்க ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துருக்கி, இத்தாலி, இங்கிலாந்து, இஸ்ரேல் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இதில் அமீரகத்திற்கு

தற்போது 50 விமானங்கள் விற்பனை செய்வதற்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமான ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply