21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

Spread the love

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

இலங்கை,கொழும்பு ; ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதான பொருளாதார நிலையங்களின் நுழைவாயிலை மறைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக்

கூறப்படும் 21 போராட்டக்காரர்களின் வெளிநாட்டுப் பயணத்தை உடனடியாகத் தடை செய்யுமாறு நேற்று (28) பிற்பகல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் குறித்த சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த

தகவலின்படி, கோட்டை பொலிஸ் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவர்கள் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக உடனடியாக கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களுக்கு அறிவிக்குமாறு குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

21 பேருக்கு வெளிநாடு செல்ல தடை

சங்கைக்குரிய வீகொடவத்த காஸ்யப தேரர், திசர நுவந்த அனுராத, ருமேஸ் இந்திக்க, எல்.என்.டி பெரேரா, ஆர்.ஏ. ராஜபக்ச, சிறில் மனதுங்க, இசுரு வர்ணகுல, ரொஷான் அலி டானிஷ் அலி, சண்டிமால் கமகே, டி.ஆர்.டி. பெந்தர

ஆரச்சி, எம். காசிம், என். எம். தௌபிக், நிலந்த சமித் பெர்னாண்டோ, பந்துல பிரபாத், சமீர மதுசங்க சிறிவர்தன, எச். எம். டி. ஜி. மெனிகா, எம்.ஆர். சாரக

கிம்ஹான், சதுரிகா சரோஜினி, ஜே. நிலந்த, எம். நிஷாந்தி மற்றும் சுதத் லக்ஷ்மன் ஆகிய 21 பேருக்கு வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த 13ம் திகதி, தேசிய தொலைக்காட்சி நிறுவனத்தை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை மிரட்டி, நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஈடுபட்ட ரொஷான் அலி டானிஷ்

அலி மற்றும் சமிந்த கலும்பிரிய அமரசிங்க ஆகியோரின் வெளிநாட்டு பயணத்தை இடைநிறுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க நேற்று உத்தரவிட்டுள்ளார்.

கறுவாத்தோட்ட பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய, பிரதான நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டானிஷ் அலியை எதிர்வரும் 1ஆம் திகதி

நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டது.சந்தேக நபரின் அடையாளப் பிடியாணையையும் பிரதம நீதவான் இரத்துச் செய்தார்.

அத்துடன், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த

தேரரையும் கைது செய்வதற்காக கோட்டை நீதவான் திலின கமகே பிடியாணை பிறப்பித்துள்ளார்.

கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு சொத்துகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட

ருஹுணு பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவர் என்னடி வேரங்க புஷ்பக டி சில்வாவை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்றம் செல்லும் பொல்துவ சந்திக்கு அருகில் (13ஆம் திகதி) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலவரச் சூழலுக்கு தூண்டியதாக

கூறப்படும் போராட்டத்தின் தீவிர உறுப்பினரான பெத்தும் கர்னர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் நேற்று (28ஆம் திகதி) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி மற்றும் பிரதமரை வெளியேறுமாறு வலியுறுத்தி பொல்துவ சந்திக்கு அருகில் போராட்டம் நடைபெற்றுக்

கொண்டிருந்த வேளையில் பெரும் கும்பலை அந்த இடத்திற்கு வரவழைத்து பாராளுமன்றத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு குறிப்பிடுகின்றது.

அன்றைய தினம், ஆர்ப்பாட்டக்காரர்கள் முதலாவது பாதுகாப்பு அரணை உடைத்து, இரண்டாவது பாதுகாப்பு வேலியில் கடமையாற்றிய இராணுவத்தின் பாதுகாப்புப் படையினருடன் மோதலுக்குச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அங்கு நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க நடவடிக்கை

எடுத்ததுடன், அங்கு 24 பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் தாக்கப்பட்டனர். மேலும், போராட்டக்காரர்கள் இரு இராணுவ வீரர்களை தாக்கி அவர்களிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளையும் திருடிச் சென்றதாக தெரிவிக்பட்டது

இச்சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக திரு.பெத்தும் கெர்னர் கடந்த 18ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்த

போதிலும், அவர் அன்றைய தினம் அங்கு ஆஜராகாத போதிலும், நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவிடம் சரணடைந்தார்.

அதன்படி அவர் கைது செய்யப்பட்டதாக அந்த பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ மருத்துவப் பிரிவில் லெப்டினன்டாக இருந்து வெளியேறி இங்கிலாந்து சென்றுள்ள இவர், அங்கிருந்து இலங்கையில் இளம் சமூகத்தை

இணையத்தில் போராட்டத்துக்கு தூண்டிவிட்டு வருவது தெரியவந்துள்ளது. காலி முகத்திடல் போராட்டம் ஆரம்பமானதும், இந்நாட்டிற்கு வந்த பெத்தும் கெர்னரை


போராட்ட களத்தில் இருந்து விரட்டியடிக்க அங்கிருந்த ஒரு குழுவினர் செயற்பட்டுள்ளனர்.

    Leave a Reply