20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திலுள்ள விசேட அம்சங்கள்

Spread the love

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திலுள்ள விசேட அம்சங்கள்

நேற்றைய தினம் வர்த்தமானி அறிவிப்பின மூலம் வெளியான 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்ட மூல வரைபில், 19ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலம்,

பாராளுமன்றத்தின் பதவிக் காலம் மற்றும் தகவலறியும் உரிமைச் சட்டம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கபபட்டள்ளது.

அதேவேளை ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகியவை தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக

வரையறுக்கப்பட்டது. அத்துடன் ஒருவர் இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி பதவி வகிக்க முடியாது என்று விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூற வேண்டும் எனும் விடயம் நீக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு பேரவை 20ஆவது திருத்தத்தில் பாராளுமன்ற சபையாக மாற்றப்பட்டுள்ளது.


அரசியலமைப்புப் பேரவைக்கு நியமிக்கப்படும் பிரதிநிதிகளிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 19ஆவது திருத்தத்தில்

இருந்த 10 பேரைக்கொண்ட அரசியல்யாப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை அமைக்கப்படவுள்ளது

19ஆவது திருத்தத்தில் அரசியல் யாப்புப் பேரவையில் பத்து அங்கத்தவர்கள் இருந்தபோதும் புதிய பாராளுமன்ற பேரவை ஐந்து

அங்கத்தவர்களைக்கொண்டதாக மாத்திரமே இருக்கும். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்,சபாநாயகர், பிரதமரின் பிரதிநிதி மற்றும்

எதிர்க்கட்சித்தலைவரின் பிரதிநிதி ஆகியோரே புதியபாராளுமன்ற பேரவையின் ஐந்து அங்கத்தவர்களாக இடம்பெறுவர்.

அரசியல்யாப்பு பேரவையில மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தனர் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாராளுமன்ற பேரவையில் இவர்கள் இடம்பெறமாட்டார்கள்

20ஆவது திருத்தத்தில் சுயாதீன குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை நேரடியாக நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டிருந்தன. 20 ஆவது திருத்தத்தில் அது தொடர்பில் சில

திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்ற விடயம் 20 ஆவது

திருத்தத்தில் மாற்றப்பட்டு, ஜனாதிபதியும் அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் சிபாரிசின் அடிப்படையில் அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் மாற்றப்பட்டு, ஜனாதிபதியாலும்

அமைச்சர்களை நியமிக்க முடியும் என்ற விடயம் உள்வாங்கப்பட்டுள்ளது.

19 ஆவது திருத்தத்தில் உள்ளவாறு இரட்டைப் பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது என்ற விடயம் 20

ஆவது திருத்தத்தில் திருத்தப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் செல்ல முடியும் எனும் விடயம் சேர்க்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஜனாதிபதியாவதற்கான வயதெல்லை 35-இலிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.


தற்போது பாராளுமன்றம் உருவாக்கப்பட்ட நான்கரை வருடங்களின் பின்னரே அதனை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுகிறது. ஆனால், 20 ஆவது

அரசியலமைப்பு திருதத்திற்கு அமைய, பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று , பிரதமரை பதவியிலிருந்து நீக்குவதற்கான அதிகாரமும் ஜனாதிபதிக்கு காணப்படுவதாக 20 ஆவது அரசியலமைப்பு திருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்கள் 30 பேர் என்ற வரையறை 20 ஆவது திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது. 19ஆவது திருத்தத்தில்

அதிகபட்சமாக 30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே இருக்க முடியும் என்ற சரத்து 20ஆவது திருத்தத்தில்

இருந்து நீக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கும் அதிகாரம் அமைச்சரவைத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிக்கு எந்த அமைச்சையும் தன்வசம் கொண்டிருக்க முடியாது எனும் 19ஆவததிருத்தச் சரத்தும் நீக்கப்பட்டு ஜனாதிபதி

எத்தனை அமைச்சு பொறுப்புக்களையும் கொண்டிருக்க முடிவதுடன் நிறுவனங்களையும் தமது நிருவாகத்தின் கீழ் கொண்டிருக்கலாம்

சட்ட மாஅதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக் கும் ஆட்களை நியமிப்பதற்கான அதிகாரமும் 20ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply