16 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

Spread the love

16 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

16 வயதிற்கு குறைந்த சிறுவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ள இடங்களைத் தேடிக்கண்டு பிடிக்கும் நடவடிக்கை மேல் மாகாணத்தில் இன்று முதல் (27) முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட வயதெல்லையை பூர்த்தியடைவதற்கு முன்னர் சிறுவர்களை வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தியுள்ள நபர்கள் மற்றும் சிறுவர்களை துஷ்பிரயோக நடவடிக்கைகளில்

ஈடுபடுத்தியுள்ளவர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

சமீபத்திய சம்பவங்கள் மூலம் குறிப்பிட்ட வயதெல்லையை பூர்திசெய்யாத சிறுவர்கள் வீட்டு வேலைகளில் அமர்த்தப்படுவதுடன் அவர்கள் துஷ்பிரயோக நடவடிக்கைகளில்

ஈடுபடுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இவ்வாறானவர்களை கண்டுபிடிப்பதற்காக இன்றைய தினம் கொழும்பு நகரம் மற்றும் மேல் மாகாணத்தில்

சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படுகின்றன. இதில் பிரஜா பொலிசாரும் சிறுவர் மற்றும் மகளீர் பொலிசாரும் இணைந்து இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்

சிறுவர்களை பணிக்கமர்த்துவதற்காக அழைத்துவரும் தரகர்களுக்கு எதிராகவும் சட்ட

நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply