14வது பிரதமராக நாளை மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்

Spread the love

புதிய அரசாங்கத்தின் பிரதமராக திரு.மஹிந்த ராஜபக்ஷ நாளை சத்தியப்பிரமாணம்

இலங்கையின் 14வது பிரதமராக நாளை மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறார்.

அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நாளை முற்பகல் களனி ரஜமஹா விஹாரையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான திரு.மஹிந்த ராஜபக்ஷ 1970ம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத்தில்

பிரவேசித்தார். அவர் நான்காவது தடவையாக பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்கிறார்.

தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற அங்கத்தவராக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக மஹிந்த

ராஜபக்ஷ பணியாற்றியுள்ளார். அது தவிர இரண்டு தடவைகள் மக்களால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று

தடவைகள் பிரதமராக கடமையாற்றியிருந்தார். முதல் தடவையாக 2004ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்திருந்தார்.

நாளைய சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர், திரு.மஹிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள்

பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமைக்கு உரியவராகின்றார்.

Leave a Reply