வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைப்பு

Spread the love

வெளிநாடுகளில் இருந்து 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைப்பு

மத்திய கிழக்கைச் சேர்ந்த 17 ஆயிரத்து 861 பேர் அடங்கலாக, 40 ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அழைத்து

வரப்பட்டுள்ளார் என்று; வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்விற்கான வலைப்பின்னலை இலங்கையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர்


ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘சுபீட்சத்தின் தொலைநோக்கு’ வேலைத்திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களினதும், குடும்பத்தவர்களினதும்

நலன்களை மேம்படுத்த திடசங்கற்பம் பூண்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் கொவிட்-19 தொற்றுநோய்ப் பரம்பலை அடுத்து,

இவர்களின் நலன்களை உறுதிப்படுத்த அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுத்ததாகவும் கூறினார்.

கொவிட் 19 தொற்றுநோயின் முதலாம் அலை தாக்கிய சமயம், பிரத்தியேக இணையத்தளமொன்று ஆரம்பிக்கப்பட்டு, வெளிநாடுகளில் வேலை செய்யும் இலங்கையர்களின் தகவல்கள்

திரட்டப்பட்டன. தற்போது, வேலைக்காக வெளிநாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், விமானம் மூலம் உலருணவு நிவாரணங்களை அனுப்பி வைப்பதற்கும், தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்குவதற்கும்

ஏற்பாடுகள்; மேற்கொள்ளப்பட்டன. ஜோர்தான், கட்டார் போன்ற நாடுகளில், கொவிட்-19 நெருக்கடியால் வேலைவாய்ப்பு இழந்தவர்களுக்கு வேறு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்

கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மேலும் தெரிவித்தார்.

Leave a Reply