வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை

Spread the love

வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் முறைக்கேடுகள் நடந்தால் அதற்கெதிராக நடவடிக்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படும் விமான சேவைகளின் எண்ணிக்கையை அடுத்த வாரத்தில் இருந்து

அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வருவதில் எந்தவகையான முறைக்கேடுகள் நடைப்பெற்றாலும்

அதற்கெதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை

ஒத்திவைப்பு வேளையில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

ஜனாதிபதியுடன் பேச்சு வார்த்தை நடத்தி அடுத்த வாரம் முதல் இவர்களை அழைத்து வருவதற்கான விமான சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளது.

Pay தனிமைப்படுத்தல் அதாவது பணம் செலுத்தி தனிமைப்படுத்தல் கட்டாயமாக்கப்படவில்லை. 45,000 க்கும்

மேற்பட்டோர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டது.

வெளிநாடுகளில் உள்ள இலங்கை பணியாளர்களை நாட்டுக்கு வரவழைத்து இலவசமாக தனிமைப்படுத்தல் மேற்கொள்ளப்படும்.

இந்த நடவடிக்கைகள் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படுகின்றன.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் பொது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாக

பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க சுட்டிக்காட்டியபோதே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

Leave a Reply