வவுனியாவில் கொரோனா மரணம் அதிகரிப்பு

Spread the love

வவுனியாவில் கொரோனா மரணம் அதிகரிப்பு

நாட்டில் ஏற்படும் கொரோனா மரண வீதத்தில், வவுனியாவில் கொரோனா தொற்றால் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுவதாக, சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில், இம்மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதியில், 2,222 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 106 பேர் உயிரிழந்துள்ளனர்.


வவுனியா மாவட்டத்தில், கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. நாட்டில் ஏற்படும் கொரோனா மரண வீதத்தில், வவுனியாவில் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுகின்றது.

வவுனியாவில் மக்களின் அசமந்தமாகச் செயற்பாடுவதால் கொரோனா தொற்றாளரிகளின் மரணத் தொகை கட்டுக்கடங்காமல் செல்கின்றது. எனினும், மக்கள் இதன் பாரதூரமான

தன்மையை உணரவில்லை. இது பாரிய ஆபத்தான நிலைப்பாடாக உள்ளது என, சுகாதார தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

ஆகவே வவுனியா மாவட்டத்தின் நிலை தொடர்பில் மக்கள் சிந்தித்து சுகாதார நடைமுறைகளை இறுகப் பின்பற்றி செயற்பட வேண்டும் எனவும் சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில், ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் 3,328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 50 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave a Reply