வன்னியில் மக்களின் காணியை ஆக்கிரமிக்கும் வனவள திணைக்களம்; இராஜாங்க அமைச்சர் சொன்ன பதில்

Spread the love

வன்னியில் மக்களின் காணியை ஆக்கிரமிக்கும் வனவள திணைக்களம்; இராஜாங்க அமைச்சர் சொன்ன பதில்

வன்னியில் வனவள திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்பதற்கு குழு அமைக்கப்படும்

என வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்

இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

வாழ்வாதாரத்திற்காக பொதுமக்கள் முன்வைக்கும் விடயங்களை நாம் பார்க்கதான் வேண்டும். அதேபோல அலுவலர்களது செயற்பாடுகளையும் கவனத்தில்

கொள்ளதான் வேண்டும். பலஆயிரம் வருடங்களாக சூழலோடு நாம் வாழ்ந்திருக்கிறோம். மனிதர்கள், வனம்

,வனவிலங்குகள் இவை மூன்றும் இணைந்ததாகவே எமது வாழ்க்கை அமைந்திருந்தது. இவை தீர்கப்படவேண்டிய பிரச்சனைகள்.

இதே செயலகத்தில் முன்னர் கதைக்கபட்ட விடயங்கள் தொடர்பாக இன்றும் நாம் கதைத்துக்கொண்டிருக்கிறோம். கதைத்தால் மாத்திரம் பிரச்சனை தீராது என்பதை

உணரவேண்டும். முதற்கட்டமாக காணிப்பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வன்னிமாவட்டங்களின் அரச அதிபர்களை தலைமையாக கொண்டு, பிரதேசசெயலாளர்களையும்

உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டு குறித்த பிரச்சனைகளை தீர்பதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதுடன், இந்த குழுவால் தீர்கப்படமுடியாத

பிரச்சனைகளை தேசிய குழு ஒன்றிற்கு பாரப்படுத்தப்பட்டு அதன் மூலம் தீர்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும்.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமருடன் கலந்துரையாடவுள்ளேன். நான் இல்லாவிடிலும் இந்த

பொறுப்பிற்கு மீண்டும் வருகின்ற அமைச்சர் இவற்றை தீர்த்து வைக்கவேண்டும் என்பதே எனது வேண்டுகோள் என்றார்.

வன்னியில் மக்களின் காணியை

Leave a Reply