லண்டன் லூசியம் பகுதியில் தீயில் எரிந்த தமிழர் கடை – வீடியோ

Spread the love

லண்டன் லூசியம் பகுதியில் தீயில் எரிந்த தமிழர் கடை – வீடியோ

லண்டன் Randlesdown Road, Bellingham பகுதியில் உள்ள தமிழர் மொத்த கொள்வனவு வாணிபம் ஒன்று புதன்கிழமை தீயில் எரிந்து நாசமாகியுள்ளது

நேற்று பிற்பகல் ஐந்து மணியளவில் திடிரென தீ பற்றி கொண்டது ,இதன் பொழுது அந்த

வாணிபம் முற்றாக எரிந்து அழிந்துள்ளதுடன் ,வான்,மற்றும் அயலவர்கள் இரு கார்களும் எரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

குறித்த தீ சம்பவம் தொடர்பாக அவசர அழைப்புக்கு சுமார் 45 அழைப்புக்கள் சென்றுள்ளன ,பன்னிரெண்டு தீயணைப்பு இயந்திரங்களுடன் ,எண்பது தீயணைப்பு வீரர்கள் பல மணிநேரம் போராடி தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்தனர்

இந்த தீயின் புகையானது பல மைல்கள் தொலைவுக்கு வானில் தெரிந்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்

அருகில் உள்ள பெலிங்கம் ரயில்வே போக்குவரத்து சில மணிநேரம் தடை பட்டது ,முற்றாக பூட்ட பட்டுள்ளது

மேலும் இந்த சம்பவத்தின் பொழுது இரண்டு காஸ் சிலிண்டர்கள் அகற்ற பட்டதாகவும் ,அதிக வெப்பம் காரணமாக அது வெடித்து சிதறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

( Call handlers at the brigade’s 999 control centre took 45 calls about the fire.

“During the fire, two gas cylinders were removed and cooled to ambient temperatures, as some cylinders can explode when exposed to heat
)

Bellingham fire destroys

மேலும் அயல் வீட்டாரின் முதல் அடுக்கு மாடிகள் இரண்டும் பாதிக்க பட்டுள்ளதக தெரிவிக்க படுகிறது

தொடர்ந்து இதுகுறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

Bellingham fire destroys

குறித்த வணிக நிறுவனமானது ,சிக்கன் கடைகளுக்கு உரிய உணவுகளை விநியோகிக்கும் பேல்மெட் புகழ் வாய்ந்த ஒன்று என்பது இங்கே குறிப்பிட தக்கது

இந்த தீ பரவல் சம்பவத்தினால் பல்லாயிரம் பவுண்டுகள் இழப்பு ஏற்பட்டுள்ளது,தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

குறித்த சம்பவம் தமிழர்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply