லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், ரெயில் சேவை

Spread the love

லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், ரெயில் சேவை

லக்சம்பர்க் நாட்டில் சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வர இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், ரெயில் சேவை அமல்
இலவச பஸ், ரெயில் சேவை
லக்சம்பர்க்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று லக்சம்பர்க். இந்த நாட்டில் சாலைகளை கார்கள் பெருமளவு ஆக்கிரமிக்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இங்கு கார்கள் வணிக ரீதியிலான பயணத்துக்கு 47 சதவீதமும், ஓய்வு நேர போக்குவரத்துக்கு 71 சதவீதமும் பயன்படுத்தப்படுகிறது

. 32 சதவீத பயணங்களுக்கு மட்டுமே பஸ் பயன்படுத்தப்படுகிறது. 19 சதவீத பயணங்களுக்கு மட்டுமே ரெயிலை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வருகிற வகையில், இந்த நாட்டில் இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் நேற்று முதல்

அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இலவச பொதுபோக்குவரத்தை வழங்குகிற முதல் நாடு என்ற பெயரை இந்த நாடு தட்டிச்செல்கிறது.

இந்த இலவச போக்குவரத்து 40 சதவீத குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொருவரும்

ஆண்டுக்கு 110 டாலர்களை (சுமார் ரூ.8 ஆயிரம்) சேமிக்க முடியும். லக்சம்பர்க் நாட்டில் வாழ்கிறவர்கள் ரெயில்களில் முதல் வகுப்பில்

பயணிக்கவும், பஸ்களில் இரவு நேர பயணத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

லக்சம்பர்க் நாட்டில் இலவச

Leave a Reply