ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்
Spread the love

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்

பெரும் வரலாற்று சரித்திரம் இருப்பதாக கூறினாலும், ராஜபக்சர்களால் தற்போதைய ஆட்சியாளர்கள் கூட உலகம் முழுவதும் பிச்சை எடுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார் .

இந்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்க இன, மத, சாதி, நிற பேதங்களுக்கு அப்பாற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

அதற்கான சரியான வேலைத்திட்டம் ஐக்கிய மக்கள் சக்தியிடம் இருப்பதாகவும், அதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒரு நல்ல அணியைக் கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டிய சஜித் பிரேமதாஸ,

தேர்தலில் வெற்றி பெற்றால், அதன் உண்மையான வெற்றியாளர்கள் தாய் நாடும் அதன் 220 இலட்சம் மக்களும் தான் எனவும் தெரிவித்தார்.

கலகெதர தேர்தல் தொகுதிக் கூட்டத்தில் கடந்த (23) ஆம் திகதி கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்தார்.

ஸ்மார்ட் தீர்வுகள், புத்திசாலித்தனமான தீர்வுகளை வழங்குவதாகக் கூறி ஆட்சி வந்த சேர்மார்கள் இறுதியில் நாட்டையே வக்குரோத்தாக்கினர் என்கிறார் .

ராஜபக்ச திருடர்கள் அழித்த நாட்டை கட்டி எழுப்புவோம் சஜித் முழக்கம்

இதனால், சிறு குழந்தை முதல் கர்ப்பிணித் தாய் வரை அனைத்து மட்டங்களிலுமுள்ள குடிமக்கள் தற்போது மிகவும் அவல நிலையில் இருப்பதாகவும், இறுதியாக உணவு வேளையைக் கூட தயாரிக்க முடியாத நிலையில் உள்ளனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

கல்வித் துறையின் பிரச்சினைகள், சுகாதாரத் துறையின் பிரச்சினைகள், கைத்தொழில் துறையின் பிரச்சினைகள் உட்பட பல தொழில் துறைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தையும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது வலியுறுத்தினார்.

அரசாங்கம் போராட்டத்திற்கு பயந்து பல்வேறு கட்டளைச் சட்டங்களைப் பிரயோகித்து மக்களை ஒடுக்குவதாக தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், இந்த அடக்குமுறையைத் தாங்கும் உச்ச வரம்பை மக்கள் எட்டிவிட்டனர் .

அதன் காரணமாக பல்வேறு துறைசார் தொழில் வல்லுநர்கள் மற்றும் புத்திஜீவிகள் இலட்சக்கணக்கில் நாட்டை விட்டு வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

விரைவில் முழு நாட்டு மக்களும் வீதியில் இறங்கி மக்களுக்கு பக்கபலமாக இருக்கும் பொது மக்கள்
ஆட்சியொன்றை உருவாக்குவர் எனவும் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply