ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்

Spread the love

ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 52-வது நாளாக நீடிக்கும் நிலையில்,உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளை ரஷியா எச்சரித்துள்ளது.

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்: ஜெலன்ஸ்கி கவலை
ஜெலன்ஸ்கி, அணு ஆயுதம்
16.04.2022

03.20: உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.

02.30: உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு ரஷியா வலியுறுத்தி உள்ளது. இது மோசமான

விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்
ரஷியா எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    Leave a Reply