ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ஆலோசனை

Spread the love

ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ஆலோசனை

ரயில் பயணச்சீட்டு விலைகள் தொடர்பில் ரயில் தொழிற்சங்கங்களுக்கும்,

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

பயணச்சீட்டு கட்டணத்தை அதிகரிக்குமாறு ரயில்வே பொது முகாமையாளர் அரசாங்கத்திடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்திருந்த போதிலும், அவரது இந்த

யோசனைக்கு தாம் கடும் எதிர்ப்பை வெளியிட்டதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால் மக்கள் அவதியுறும் வேளையில் ரயில் கட்டண உயர்வை மேற்கொள்ளக் கூடாது என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.

ரயில் கட்டணத்தை அதிகரிக்காமல் மாற்று முறைகளின் மூலம் திணைக்களத்துக்கு

ஏற்படும் நட்டத்தை குறைக்க முடியும் என நிலைய அதிபர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன், இந்த விடயங்கள் உள்ளிட்ட பல்வேற காரணிகள் தொடர்பில் இன்றைய

கலந்துரையாடலில் கலந்துரையாடப்படவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

    Leave a Reply