ரசிய இராணுவம் தப்பி ஓடுகிறது உக்கிரேன் அறிவிப்பு வீடியோ

Spread the love

ரசிய இராணுவம் தப்பி ஓடுகிறது உக்கிரேன் அறிவிப்பு வீடியோ

ரசிய இராணுவம் தப்பி ஓடிய வண்ணம் உள்ளது ,என உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

கடந்த சில நாட்களில் மட்டும் 2300 சதுர கிலோமீட்டர் ,பரப்பளவு மீட்க பட்டுள்ளதாக உக்கிரேன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உக்கிரேன் கிழக்கு பகுதியும் ,ரசியாவின்எல்லை அருகில் உள்ள முக்கிய நகரங்கள் ,உக்கிரேனிடம் மீளவும் வீழ்ச்சியடைந்துள்ளது .

அமெரிக்கா ,பிரிட்டன் வழங்கிய நேரடி ஆயுத உதவி மற்றும் ,நேரடி இராணுவ உதவிகள் ஊடாக இந்த ,வெற்றியை தாம் பெற்று வருவதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .

ரசிய இராணுவம் தப்பி ஓடுகிறது உக்கிரேன் அறிவிப்பு வீடியோ

தபபி ஓடிய ரஷ்ய இராணுவத்தின் டாங்கிகள் ,ஏவுகணைகள் மற்றும் ஆயுத களஞ்சியங்கள் என்பனவற்றை ,தாம் மீட்டுள்ளதாக ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தொடராக பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளது .

மேலும் ரஷ்ய இரணுவத்தின் ஆயுத மீட்பு ,மற்றும் நகரம் தமது வசம் வீழ்ந்த நேரடி காட்சிகளையும் வெளியிட்ட வண்ணம் உள்ளது .

இவ்வாறன சம்பவங்கள் உக்கிரேன் இராணுவத்தின் ,உளவியலில் பெரும் முன்னேற்றத்தை அளித்ததுடன் ,மக்கள் ,இராணுவம் புத்துணர்ச்சி பெற்றுள்ளதை காண்பிக்கிறது .

உக்கிரேன் இராணுவம் இவ்வாறு தெரிவித்த வண்ணம் இருக்க ,ரஸ்யா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீன் ,விரைவில் உக்கிரேன் தலை கீவ் நகர் தமது வசம் வீழ்ச்சியடையும் என தெரிவைத்துள்ளார் .

விரைவில் எமது தாக்குதல்கள் தொடரும் என்கின்ற ,ரஷ்ய ஜனாதிபதி
புட்டீன் அறிவிப்பு ,மீளவும் நாடுகளுக்கு ,இடையில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

    Leave a Reply