ரசியா ஆயுத வண்டிகள் சிதறல் – உக்கிரேன் தாக்குதல்

Spread the love

ரசியா ஆயுத வண்டிகள் சிதறல் – உக்கிரேன் தாக்குதல்

ரசியாவின் ஆயுத வண்டி தொடரணியை இலக்கு வைத்து உக்கிரேனே அரச இராணுவத்தினர் நடத்திய துல்லியமான ஏவுகணை தாக்குதலில் ,அந்த ஆயுத தொடரணி முற்றாக அழிக்க பட்டுள்ளது .

அந்த ஆயுத வண்டிகளில் பயணித்த எதிரி படைகளும், படு கொலை செய்ய பட்டுள்ளன ,எதிரிகளின் சடலங்கள் அங்காங்கே சிதறி கிடக்கிறது

அதி நவீன ஆயுத தளபாடங்களுடன் ,பாரிய முன்னகர்வை மேற்கொண்டு வந்த, எதிரி படைகள் மீது ,தாம் வீரமிகு தாக்குதலை நடத்தி ,பாரிய இழப்பினை வழங்கியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் நெஞ்சை நிமிர்த்தி மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது

தொடராக ரசியாவின் ஆயுத வண்டிகளை இலக்கு வைத்து உக்கிரேன் இராணுவம் பாரிய தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக வழங்கி வரும் நாவீன ஆயுதங்களை பயன் படுத்தி நூறாவது நாளில் எதிரிகளை பந்தாடி வருகிறது உக்கிரேன் இராணுவம்

,எதிரிகள் மீது வீச பட்டு வரும் நவீன ஆயுத தளபாடங்கள் பெரும் இழப்பை எதிரிகளுக்கு ஏற்படுத்திய வண்ணம் உள்ளது என்கிறது உக்கிரேன் .

பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய ஏவுகணைகள், மற்றும் தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் என்பன உக்கிரேன் போர்க் களத்தில் துள்ளி விளையாடி வருகின்றன

அமெரிக்கா,பிரிட்டன் என்பன தமது புதியவகை ஆயுதங்களை நேரடியாக தமது பரம எதிரிகள் மீது உக்கிரேன் இராணுவத்தை பயன் படுத்தி சோதனை வெள்ளோட்டம் செய்து வருகிறது

ரசியா ஆயுத வண்டிகள் சிதறல் – உக்கிரேன் தாக்குதல்

உக்கிரேன் இராணுவத்தினருக்கு உதவி என்ற கோதாவில் ,பல பில்லியனுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து கொள்ளை இலாபம் ஈட்டி வருவதுடன் ,தமது ஆயுதங்களையும் எதிரி படைகள் சோதனை செய்கிறது

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதை போல , இந்த நாடுகளின் திடீர் எதிரி என்ற கூட்டணி தொடர்புகள் ஆண்டுகள் நூறு நிலைக்குமா என்பதே கேள்வியாக உள்ளது

மேற்கு நாடுகளின் ஆயுதங்களுடன் ,எதிரி படைகளை மீள அவர் தம் எல்லைக்கு விரட்டி வரும் உக்கிரேன் இராணுவம் மீது ,ரசியா அதிவேக அதிரடி தாக்குதலை நடத்தலாம் என ஆவலுடன் எதிர் பார்க்க படுகிறது ,

ரசியாவியுன் ஆயுத வண்டிகள் சிதறிய காட்சிகள் வெளியிட்டு மகிழ்வுறும் உக்கிரேன் இராணுவம் பெரும் இழப்பை சந்திக்க கூடும் என்பது, எதிரி நாடான ரசியாவின் இராணுவ பரப்புரையாக உள்ளது

வரும் நாட்களில் உக்கிரேன் போர்க்களம் சற்று அகோரமானதாக மாற்றம் பெறலாம் என்பது நமது கணிப்பாக உள்ளது

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply