ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் ஈராக்

Spread the love

ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் ஈராக்

ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் மூன்று நாடுகளினது நான்கு முக்கிய இராணுவ தளபதிகளை உளவு விமான தாக்குதல் மூலம் அமெரிக்கா படுகொலை புரிந்தது .

இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது மத்திய கிழக்கு பகுதியில் போர் பதட்டம் நிலவி வருகிறது


,இந்த பதட்டம் மேலும் நீண்ட நெடிய போரை ஆரம்பிக்கும் நகர்வுகள் தீவிரம் பெற்று செல்கின்றன .

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் இரண்டின் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,மேலும்

எமது கடுமையான பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் புரட்சி காவல் படை அறிவித்துள்ளது .

இவ்வாறு அதன் அறிவிப்பு தொடர ,இப்போது மத்திய கிழக்கில் தனது அகல கால் பாதிக்கும் நிலையில் ரசியா நுழைகிறது .read more

ஈராக்கிய பாராளு மன்றத்தின் அனுமதியுடன் ரஸ்சியாவிடம் இருந்து வான் இடை மறிப்பு ஏவுகணைகளை ஈராக் வாங்கி குவிக்க உள்ளது .

ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் ஈராக்

200 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட S-300 missiles வான் இடை மறிப்பு ஏவுகணையை வாங்கி

குவிக்க உள்ளதாக அதன் பாதுகாப்பு அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது

இதற்கான பேச்சுக்கள் ரசியாவுடன் சில மாதங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

ஈராக் இந்த ஏவுகணை தம்மிடம் இருந்தால் தமது நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும் என ஈராக் நம்புகிறது ,

அமெரிக்காவின் பொருளாதார தடை மீளவும் தம்மீது விதிக்க படலாம் என்ற நிலையில் ஈரானின் ஆதரவு

சக்தியான ரசியாவை இப்போது களத்தில் இறக்கிவிட ஈராக் விரும்புகிறது

அமெரிக்காவின் ஒரு தவறான படுகொலையால் மத்திய கிழக்கில் அதன் இருப்பு பறிபோகும் அபாயமும்

,தொடர்ச்சியாக பெரும் தாக்குதல்களை அவர்கள் சந்திக்க வேண்டிய நிலைக்கும் தள்ள படுகின்றனர் .

பல் நாட்டு படைகள் ,மற்றும் நேட்டோ படைகள் என்பனவும் தாக்குதல்கள் தொடுக்கலாம் எனவும் அவர்கள் கூட தம்மை தாக்க கூடும் என ஈராக் கருதுகிறது .

மிகவும் நெருக்கடியான இடியப்ப சிக்கலுக்குள் சிக்கி இருக்கும் ஈராக் ,தற்போது நகர்த்தும் இராய தந்திர

நகர்வுகள் அந்த நாட்டை காப்பாற்றுமா .? என்பதே கேள்வியாக எழுகிறது .

பாராளுமன்றம் பலமான ஒன்றாக அமைய வேண்டும் எனவும் ,இவ்வேளை நாங்கள் ஒன்றாக இணைந்து

பணியாற்ற வேண்டும் என்ற குரல்கள் ஈராக்கிய பாரளுமன்றில் ஓங்கி ஒலிக்கிறது .

இந்த ஒன்று படுதல் ஈரான் ஆதரவுடன் இணைந்து பயணிக்கும் நிலையை உருவாக்கிறது .

ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் ஈராக்

அதாவது ஈரான் தனது நேச அணியை திடமாக மத்திய கிழக்கில் உருவாக்கும் முதல் இறுக்கமான நகர்வாக இது மாற்றம் பெறுகிறது .

துருக்கி ,ரசியாவின் இரண்டு போர் விமானங்களைஅமெரிக்காவின் சொல்லை கேட்டு சுட்டு வீழ்த்தியது ,அதுவே பெரும் முறுகளை ஏற்படுத்திய

நிலையில் ரசியாவினால் அங்கு இராணுவ புரட்சி மூலம் எர்டோகான் பதவி அகற்றும் முயற்சியை புரிந்தது .

ஆனால் இப்பொது ரசியாவும் ,துருக்கியும் ஒரு மேசையில் இருந்து காபி குடிக்கினறனர் .
அது போலவே ஈராக்கிலும் மாற்றம் இடம் பெற போகிறது .

அரசியல் எப்போதும் ஒரு நேர்கோட்டில் பயணிப்பது இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் .

தமது நாட்டை பாதுகாத்து கொள்ள எஸ்-300 ஏவுகணை .மற்றும்
போர் விமானங்கள் ,டாங்கிகள் என்பனவற்றை வாங்கி குவிக்க தயராகி வருகிறது .

அமெரிக்கா தொடங்கிவைத்த படுகொலையால் தற்போது களமுனை மாற்றம் பெறுகிறது ,மத்திய கிழக்கு பகுதியில்

ரசியா நுழைந்தாலே அமெரிக்காவின் இருப்பு காலியாகி விடும் என்பதே
களபதிவாக மாற்றம் பெறுகிறது .இந்த களமுனையை அமெரிக்காவே உருவாக்கி கொடுத்துள்ளது .

அமெரிக்காவே நாட்டை விட்டு வெளியேறு என ஈராக்கிய பாரளுமன்றமும் அறிவித்தாகிற்று ,ஆனால் போக மறுத்து அடம் பிடிக்கும் அமெரிக்கா நிலை அபாயமான ஒன்றாக மாற்றம் பெறுகிறது .

பொல்லு கொடுத்து அடிவாங்கிய நிலையாக அமெரிக்கா இப்பொழுது சிக்கி தவிக்கிறது

  • வன்னி மைந்தன்-
ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு

Leave a Reply