ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

Spread the love

. ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்தன.

உக்ரைன் மீது ரசாயன ஆயுதங்களால் ரஷியா தாக்குதல் நடத்தலாம் – வெள்ளை மாளிகை எச்சரிக்கை
வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி
வாஷிங்டன்:

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 14 நாட்களைக் கடந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைனில் உள்ள ஐந்து முக்கிய நகரங்களில் மனிதாபிமான அடிப்படையில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்துள்ளது.

இதற்கிடையே, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, உக்ரைன் தனது பிராந்தியத்தில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஆய்வகங்களை நடத்துவதாக குற்றம் சாட்டினார்,

இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா ரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தலாம் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறுகையில், ரஷ்யாவின் கூற்று அபாண்டமானது. உக்ரைனுக்கு எதிராக இத்தகைய பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா தனக்கான அடித்தளத்தை அமைக்கிறது என தெரிவித்தார்

    Leave a Reply