யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு

Spread the love

யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு

யாழ்ப்பாண ரயில் கட்டணத்தை பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகிறது

இவ்வாறு ரயில் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (8) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறான பொதுவான கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால், பயணிக்கும் ரயில் எண்ணிக்கையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், டீசல் விலை உயர்வால் ரயில் பராமரிப்பு செலவும் அதிகரித்துள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரை ஒரு ரயிலை இயக்குவதற்கு அதிக செலவாகிறது

எரிபொருளுக்காக 13 இலட்சம் ரூபா செலவாகும். இந்த ரயிலில் சுமார் 500 பயணிகள் பயணித்தாலும்கூட 10 இலட்சம் ரூபாவே வருமானமாகக் கிடைக்கும்.

இதன்படி யாழ்ப்பாண ஒரு ரயில் பயணத்தில் 3 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என்பது குறித்து கொழும்பு மாவட்ட பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.
தொலவத்த எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு 3 ரூபாய் இழப்பு ஏற்படும்கிரது என்ற இவரது பேச்சு ரயில் கட்டணம் அதிகரிக்க பட போவதை எடுத்து காட்டுகியது

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி யாழ் தேவி ரயில் பயணிக்கிறது ,இந்த சேவை தடை படும் அபாயம் ஏற்படும் நிலை தோன்றியுள்ளது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ரயில் சேவைகள் நிறுத்த பட்டால் மக்கள் போக்குவரத்து பாதிக்க படும்

யாழ்ப்பாண ரயில் பயணத்தை நம்பியே அதிக மக்கள் உள்ளனர் ,மக்களை தேவையின்றி வெளியில் செல்லாதீர்கள் என்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அறிவிப்பு இந்த ரயில் போக்குவரத்து தடைகள் வருவதற்கான முன் எச்சரிக்காயாக விளக்குகிறது

இலங்கையை ஆள்பவர்களின் திட்டமில்லா கொள்கையும் நாட்டை கொள்ளையடித்ததுமே வடக்கு பகுதி யாழ்ப்பாண ரயில் பயணத்திற்கு இழப்பு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது

நாடளாவிய ரீதியில் ரயில் மற்றும் பேரூந்துகள் சேவைகளும் முடக்க படும் அபாயம் எழுந்துள்ளது .

    Leave a Reply