யாழில் வாள் வெட்டு

யாழில் வாள் வெட்டு
Spread the love

யாழில் வாள் வெட்டு

யாழில் வாள் வெட்டு ,யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் காங்கேசன்துறை பொலிஸ் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொல்புரம் பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்திற்கு, பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட இளைஞர்கள் இடையிலான மோதலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை

இதில் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்ட மூவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தனிப்பட்ட முரண்பாடே வாள் வெட்டு சம்பவத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் விசாரணை

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மகிந்த ராஜப்பா பாக்ஸர் ஆட்சியின் பின்னரே யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்பட ஆரம்பித்தன .

கோத்தபாயவின் நிழல் டிவிஷன் படையின் நேரடி அறிவுறுத்தலின் பிரகாரம் இந்த வாள்வெட்டு தாக்குதல் யாழ்ப்பாணத்தில் அதிகரிக்க காரணமாக விளங்கியது.

இவ்வாறான குற்ற சாட்டு மக்களினால் முன் வைக்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .