மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு

Spread the love

மூவாயிரம் வீடுகளை அமைக்கும் கோட்டா அரசு

கொட்டாவை – மாகும்புர பிரதேசத்தில் 314 வீடுகளைக் கொண்ட மாடிவீட்டுத் தொகுதி நடுத்தர வர்க்கத்தினருக்காக ஐயாயிரம் மாடிவீட்டுத் தொகுதிகளை அமைக்கும் அரசாங்கத்தின்

வேலைத்திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இதன் முதல் கட்டமாக மூவாயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன.

இதற்காக 40 பில்லியன் ரூபா செலவிடப்படும். மாக்கும்புர பலநோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தின் அதிவேக

நுழைவுப் பகுதிக்கும் ஹைலெவல் பாதைக்கும் அருகில் இந்த வீடுகள் அமைக்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

கொழும்பு ஒன்று முதல் 15 வரையான கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 68 ஆயிரத்து 894 குடிசைகள் அமைந்துள்ளன.

இவற்றில் சுமார் 20 ஆயிரம் குடும்பங்களை புதிய வீடுகளில் குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2022ஆம்

ஆண்டு ஜனவரி ஏழாம் திகதிக்குள் மூவாயிரம் வீடுகளை அமைக்க அமைச்சு எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply