முடங்கிய இலங்கை – ஊரடங்கு அமூல் – பீதியில் மக்கள்

Spread the love

முடங்கிய இலங்கை – ஊரடங்கு அமூல் – பீதியில் மக்கள்

கம்பஹா நிர்வாக மாவட்டத்தின் பொலிஸ் எல்லை பகுதிக்குள் மீண்டும்

அறிவிக்கும்வரையில் இன்று காலை 6.00 மணி தொடக்கம் அமுலுக்கு

வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 1897 ஆம் ஆண்டு இலக்கம்

03 இன் கீழான தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக சுகாதார சேவைகள்

பணிப்பாளர் நாயகத்தினால் பதில் பொலிஸ் மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய 2020.10.06 மாலை 6.00 மணி தொடக்கம்

அமுலில் உள்ள வகையில் மறு அறிவித்தல் வரையில் கீழ் கண்ட பிரதேசங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது.

 கம்பஹா நிர்வாக மாவட்டத்தில் கம்பஹா பொலிஸ் எல்லைப் பகுதி

 கீழ் குறிப்பிட்ட பொலிஸ் பிரிவுகளில் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

  1. திவுலப்பிட்டிய பொலிஸ் பிரிவு
  2. மினுவாங்கொட பொலிஸ் பிரிவு
  3. வேயாங்கொட பொலிஸ் பிரிவு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட காலப்பகுதியில் அனைவரும் தமது வீடுகளில் இருக்க வேண்டும். இதேபோன்று

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலப்பகுதிக்குள் இந்த பிரதேசத்திற்குள் பிரவேசித்தல்,

அதேபோன்று பிரதேசத்தில் இருந்து வெளியேறுதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் தூர இடங்களுக்கான பயணிகள் போக்குவரத்து பஸ்கள் இந்த பிரதேசத்தின் ஊடாக பயணிக்க முடிந்த போதிலும் இந்த

பகுதிகளில் பஸ்களை நிறுத்துதல் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்குதல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள பிரதேசங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளை

ஏற்றுவதற்காகவோ அல்லது இறக்குவதற்காகவோ ரயில்கள் நிறுத்தப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply