முகக்கவசங்களால் கடலிலும் கொரோனா

Spread the love

முகக்கவசங்களால் கடலிலும் கொரோனா

பயன்படுத்தப்பட்ட பின்னர், பாதுகாப்பற்ற முறையில் வீசப்படும் முகக் கவசங்கள், ஆறுகள், நீரோடைகள் ஊடாகக் கடலில் கலப்பதால், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயநிலை

அதிகரிக்கலாம் என, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

நாளொன்றுக்கு 50,000க்கும் அதிகமான முகக் கவசங்கள், கடலில் கலப்பதாகத் தெரிவித்துள்ள அதிகார சபை, இதனால் பொழுது

போக்குக்காகக் கடலுக்குச் செல்வோருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.

தினமும் 5 இலட்சம் முகக் கவசங்கள் இலங்கையில் பயன்படுத்தப்படும் அதேவேளை, பெருமளவு முகக் கவசங்கள்

தினமும் வீசப்படுவதாகவும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், கொழும்பு மாநகர சபையின் கீழ், வீதிகளைச் சுத்தம் செய்வதற்காக 2,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு

வருவதுடன், முகக் கவசங்கள் உரியமுறையில் அகற்றப்படாமை காரணமாக, இத்தொழிலாளர்களும் கொரோனா அச்சுறுத்தலுக்கு

ஆளாகியுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply