மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் – அமைச்சரவை தீர்மானம்

Spread the love

மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் – அமைச்சரவை தீர்மானம்

2020 மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின்சார கட்டணம் தொடர்பில் சமீப காலத்தில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு மற்றும் முறைப்பாடு தொடர்பில் கவனம் செலுத்தி பொது மக்களுக்கு பாரிய அளவிலான நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக மின் சக்தி மற்றும் போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் மின் கட்டணம் தொடர்பில் அமைச்சரவைக்கு தெளிவு படுத்துவதற்காக தம்மால் அமைச்சரவைக்கு ஆவணம் ஒன்று இதற்கு முன் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறினார்.

நிவாரணத்தை வழங்குவதற்காக அமைச்சரவையினால் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை கடந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதற்கு அமைவாக மார்ச், ஏப்ரல் மற்றும் மே முதலான மாதங்களில் ஒவ்வொரு மின்சாரக் கட்டணம் பட்டியலின் பெறுமதி பெப்ரவரி மாதத்தில் பெறுமதியிலும் பார்க்க அதிகமாயின் பெப்ரவரி மாதத்திற்கு சமமான தொகை வீதம் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்காக அறவிடுதல் மற்றும் அந்த மின்சாரக் கட்டண பணக் கொடுப்பனவை பூர்த்தி செய்வதற்காக 02 மாத கால அவகாசத்தை வழங்குதல்.

மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதம் ஆகிய 3 மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை தற்பொழுது செலுத்தியுள்ள பாவணையாளர்களுக்கு கட்டணத்திற்கான பற்றுச்சீட்டுக்களை விநியோகிக்கும் பொழுது அவர்களினால் கூடுதலாக செலுத்தியுள்ள தொகையை மீள செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த மின் கட்டணத்தை செலுத்துவதற்காக 2 மாத நிவாரண காலம் வழங்கப்படவுள்ளது. இந்தக் காலப்பகுதியில் எந்தவித மின் துண்டிப்பையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பொது மக்களுக்கு இந்த நிவாரணத்தை வழங்குவதற்காக மின்சார சபைக்கு மானியத்தை வழங்குவதற்கும் உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a Reply