மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவதாக கம்பஹா மாவட்ட மக்கள் ஜனாதிபதிக்கு உறுதி

Spread the love

மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவதாக கம்பஹா மாவட்ட மக்கள் ஜனாதிபதிக்கு உறுதி

ஜனாதிபதி அவர்களின் கைகளை பலப்படுத்துவதுடன், நாட்டை புதிய திசையில் முன்கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை

வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இம்முறை பொதுத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தருவதாக கம்பஹா மாவட்ட மக்கள் உறுதியளித்தனர்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் பிற்பகல் கம்பஹா மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை

மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். இம்முறை பொதுத் தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் மிக முக்கிய தருணம்

என்பதால் பாராளுமன்றத்தில் பலமான சக்தியை ஜனாதிபதி அவர்களுக்கு வழங்குவது மக்களின் பொறுப்பு என கம்பஹா மாவட்ட மக்கள் தெரிவித்தனர்.

ராகம புகையிரத நிலையத்தில் கடுகதி புகையிரதம் நிறுத்தாமல் செல்வதால் அலுவலக ஊழியர்கள் பல இன்னல்களுக்கு

முகங்கொடுத்து வருகின்றனர் அது பற்றி அவதானம் செலுத்துமாறு ராகமை புகையிரத நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஜனாதிபதி அவர்களிடம் கூடியிருந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

வேட்பாளர் மதுமாதவ அரவிந்த ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். கடலரிப்பு உஸ்செட்டகெய்யாவ பிரதேசத்தின் நாளாந்த மீன்பிடி தொழிலுக்கு

பாரிய சவாலாக உள்ளது. மீன்பிடி இறங்குதுறை ஒன்றை நிர்மாணிப்பதன் மூலம் அப்பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியுமென மீனவர்கள் சிலர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர்.

வேட்பாளர் நிமல் லன்சா வத்தளை நாயகந்த விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி அவர்கள் கலந்துகொண்டார். அனுமதியின்றி இடம்பெறும் மணல் அகழ்வினால் பிரதேசத்தின் மீனவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் இங்கு ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

வேட்பாளர் மெரலி பெரேரா ஜா எலயிலும் வேட்பாளர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே கட்டான கே.சி.த சில்வா விவசாய மத்திய நிலையத்திற்கு முன்னாலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் பங்கேற்ற ஜனாதிபதி அவர்கள், கூடியிருந்த மக்களுடன் சுமூகமாக உரையாடினார்.

வேட்பாளர் இந்திக்க அனுருத்த திவுலபிட்டிய நகர மத்தியிலும் வேட்பாளர் கோகிலா ஹர்ஷனி மீரிகம பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் உள்ள பொது விளையாட்டரங்கிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்களிலும் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு கூடியிருந்த மக்கள் அமோக வரவேற்பளித்தனர். மீரிகமை அபிவிருத்தித்திட்டம் தொடர்பான மகஜர் ஒன்றை திருமதி. கோகிலா ஹர்ஷனி ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

பாரம்பரிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களான தாம், ஜனாதிபதி அவர்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக நம்பிக்கை கொண்டிருப்பதால் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவளிப்பதாக மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட சிலர் ஜனாதிபதி அவர்களிடம் தெரிவித்தனர். நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்துடன் இணையுமாறு நாட்டை நேசிக்கும் அனைத்து பிரஜைகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.

மாபெரும் வெற்றியை
மாபெரும் வெற்றியை

      Leave a Reply